சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்

சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai suseenthiranபத்ரி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தவர் ஜெய்.

இதன்பின்னர் அவரே நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை 28, சென்னை 28 பார்ட் 2, ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் ஜெய்க்கு வெற்றி படங்களாக அமைந்தன.

தற்போது தன் நடிப்பில் உருவாகவுள்ள தன் 30வது படத்தில் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்க இந்த படத்தை ‘லெண்டி ஸ்டூடியோ’ நிறுவனம் சார்பாக ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Jai turns music director for his next film

கடலுக்கடியில் காதல் கணவருடன் காஜல் தேனிலவு

கடலுக்கடியில் காதல் கணவருடன் காஜல் தேனிலவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwalதென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

இவர் தொழிலதிபர் கெளதம் கிச்லுவை அக்டோபர் 30ல் திருமணம் செய்துகொண்டார்.

மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

கொரோனா காலம் என்பதால் பிரபலங்களுக்கு அழைப்பு இல்லை.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்குப் குடி பெயர்ந்துள்ளார் காஜல்.

தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கடலுக்கடியில் அமைந்துள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்கள் எடுத்த படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

Kajal Aggarwal and her husband spending their honeymoon in maldives

டுடே ஈவ்னிங் மாஸ் அப்டேட்.; டிவியில் ‘மாஸ்டர்’ டீசர் நேரடி வெளியீடு.?

டுடே ஈவ்னிங் மாஸ் அப்டேட்.; டிவியில் ‘மாஸ்டர்’ டீசர் நேரடி வெளியீடு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வரத் தயாரானாலும் கொரோனா ஊரடங்கால் இதுவரை ரிலீசாகவில்லை.

மேலும் படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏங்கி தவித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு டீசர் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை மாஸ் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வருகிற தீபாவளியன்று சன்டிவியில் மாஸ்டர் டீசர் வெளியாகும் எனவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த தகவல் உறுதியானதா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார்.

Master diwali special update today at 6 PM

டிசம்பர் 2-ல் கல்லூரிகள் திறப்பு..; பள்ளிகள் திறப்பு ஒத்திவைத்தது தமிழக அரசு

டிசம்பர் 2-ல் கல்லூரிகள் திறப்பு..; பள்ளிகள் திறப்பு ஒத்திவைத்தது தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

college reopen in tamilnaduகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

தற்போது ஊரடங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள், வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் திறந்தாலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனையடுத்து 9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் (தீபாவளிக்கு பின்) பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுவதும், 9ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கல்லூரிகள் திறப்பையும் ஒத்திவைத்துள்ளது.

ஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schools and colleges not to reopen in TN on 16th november

தீபாவளி விருந்தாக ’கபடதாரி’ டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்..; தியேட்டரில் டிசம்பர் வெளியீடு

தீபாவளி விருந்தாக ’கபடதாரி’ டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்..; தியேட்டரில் டிசம்பர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabadadhari teaserகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன்
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார்.

திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

டிசம்பர் மாதம் ‘கபடதாரி’ திரைக்கு வரவிருக்கிறது.

AR Rahman to releae Kabadadhari teaser

கடல் மட்டத்திலிருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் ‘சூரரை போற்று’ போஸ்டரை வெளியிட்டார் சூர்யா

கடல் மட்டத்திலிருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் ‘சூரரை போற்று’ போஸ்டரை வெளியிட்டார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru‘சூரரைப் போற்று’ வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களை கவுரவித்தார்
‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சூரரை போற்று’ அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார்.

ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது.

இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல் மட்டத்திலிருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் சூர்யாவுடன் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட 58,000 கையெழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 கையெழுத்துகள் விண்வெளியில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

தனது அன்பான ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் விசேஷ செய்தியுடன் கூடிய ஓரு தனித்துவமான வீடியோவை சூர்யா பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படத்துக்கு கிடைத்த அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை சாதிப்பது சாத்தியமே எனபதையும், வானம் கூட எல்லை இல்லை என்பதையும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் சூரரைப் போற்று திரைப்படமும் இந்த சமர்ப்பணமும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

படத்தின் வெளியீட்டையும், பார்வையாளர்களின் எதிர்வினைகளையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றார்.
ஒரு அச்சமற்ற புரட்சியாளரின் அசாதாரணமான சாதனைகளுக்கு சிறகுகளை அளிக்கும் இந்த உணர்ச்சி நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ப்ரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் (2டி) மற்றும் குணீத் மோங்காவின் ஷிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

A special poster of Soorarai Pottru was launched at 34000 ft above the sea level

More Articles
Follows