ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’ சீரிஸின் 11 பாடல்கள் வெளியானது

ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’ சீரிஸின் 11 பாடல்கள் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

​தி வில்லேஜ் சீரிஸின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது பிரைம் வீடியோ.

இந்த ஆல்பத்தில் ஆழமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் 11 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடல்களும் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த இசை ஆல்பத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதுரை சோல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

தி வில்லேஜ்

ஆல்பத்தின் டிராக்லிஸ்ட் இதோ –
1. திருவிழா – பாடியவர்: முத்து சிற்பி (காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா (ஜி.நந்தபாலா முருகன்) ; பாடலாசிரியர்: சினேகன்

2. தாயி பாடல் (பாரம்பரிய வகை டியூன்) – பாடியவர்: மதிச்சியம் பாலா(ஜி.நந்தபால முருகன்), குரு அய்யாதுரை, சிந்துரி விஷால் ; பாடலாசிரியர்: சினேகன்

3. தாயி பாடல் (திகில் வகை டியூன்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

4. மெமெண்டோ மோரி – பாடகர் & பாடலாசிரியர்: மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி

5. மியூட்டேசன் தீம் (தி வில்லேஜ் டைட்டில் டிராக்) – பாடியவர்: சிந்துரி விஷால் , குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

6. கண்ணுறங்கு கண்மணியே (சகோதரியின் மரணப் பாடல்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

7. மண்ண வெட்டி (தொழிலாளர் பாடல்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: குரு அய்யாதுரை

8. ஜிகும்-வா – பாடியவர்: டி.பிரதிமா பிள்ளை , ஷில்பா நடராஜன் ; பாடலாசிரியர்: ஷில்பா நடராஜன்

9. நீல குகை

10. வேட்டையன் தீம்

11. தாயி பாடல் (பேய் டுயூன்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் nயாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ்.
ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவம்பர் 24 தேதி முதல் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

தி வில்லேஜ்

11 songs out from The Village web series

ஜிகர்தண்டா XX – நடிகவேள் SJ சூர்யா..; லாரன்ஸ் & கார்த்திக் சுப்புராஜ் MY BOYS.; ரஜினி பாராட்டு

ஜிகர்தண்டா XX – நடிகவேள் SJ சூர்யா..; லாரன்ஸ் & கார்த்திக் சுப்புராஜ் MY BOYS.; ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கியிருந்த இந்த படத்தில் லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், விது, இளவரசு, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் இந்த படத்தை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘ஜிகர்தண்டா2’ படம் பார்த்து இந்த படம் ஒரு குறிஞ்சி மலர் எனப் பாராட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

அதில்… இன்றைய திரையுலகில் நடிகவேள் எஸ் ஜே சூர்யா என பாராட்டியுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இது ஒரு மகுடம் எனவும் பாராட்டி இருக்கிறார். சந்தோஷ் நாராயண இசையை குறிப்பிட்டு தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என நிரூபித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

இதுவரை பார்க்காத லாரன்ஸ் இந்த படத்தில் பார்க்கிறோம். மேலும் கலை இயக்குனர், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சி ஆகியவற்றையும் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டு ப்ரவுட் ஆஃப் யூ மை பாய் என தெரிவித்துள்ளார்.

My boys Rajini praises Jigarthanda xx movie team

ரஜினியின் பாராட்டு அறிக்கை இதோ

ரஜினியின் பாராட்டு அறிக்கை

‘கிடா’ படம் சூப்பராக இருந்தும் தியேட்டர் கிடைக்கல.; இயக்குனர் ஆதங்கம்.! மக்கள் ஆதரவளிக்கலாமே.!?

‘கிடா’ படம் சூப்பராக இருந்தும் தியேட்டர் கிடைக்கல.; இயக்குனர் ஆதங்கம்.! மக்கள் ஆதரவளிக்கலாமே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி வெளியீடாக நவம்பர் 11ஆம் தேதி ரா வெங்கட் என்பவர் இயக்கிய ‘கிடா’ படம் வெளியானது.

இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே சினிமா பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது. அப்போதே ‘கிடா’ படத்தை பத்திரிக்கை விமர்சகர்கள் கொண்டாடினர்.

இந்த படத்தில் பூ ராம் & காளி வெங்கட் உள்ளிட்டோ நடித்திருந்தனர்.

தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கேட்கும் ஒரு பேரனின் ஆசையை நிறைவேற்ற தாத்தா பாட்டி படும் சிரமங்களை உணர்வுபூர்வமாக சொல்லி இருந்தார் இயக்குனர் ரா வெங்கட்.

இத்துடன் கறி வெட்டும் தொழிலாளியாக காளி வெங்கட் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

நம் FILMISTREET இணையதளத்திலும் ‘கிடா’ படத்திற்கு சிறப்பான விமர்சனம் கொடுத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே இயக்குனர் தன் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து ரிலீசுக்காக காத்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு குறைந்தபட்ச தியேட்டர்களே தமிழகத்தில் கிடைத்தன.

அப்படி இருந்தும் நிறைய திரையரங்குகளில் கிடா படத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்ததால் காட்சிகள் நிறுத்தப்பட்டது. இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் ரா வெங்கட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்.. “என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க சென்னை காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள். கூடவே ஒரு எட்டு பேரும் கிடா படம் பார்க்க போயிருக்காங்க.

ஆனால் தியேட்டர் நிர்வாகம் 15 பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள். நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தானே. நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.

ஷோ கேன்சல்… எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்ல வர்றது தெரியுது.. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது.? அதான் இத ஷேர் பண்றேன்..

மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி,” என பதிவிட்டுள்ளார் ரா வெங்கட்.

இது போன்ற நல்ல படைப்புகளுக்கு மக்களாகிய நாம் ஆதரவளித்தால் மட்டுமே நல்ல கலைஞர்களும் நல்ல படைப்புகளும் வெளியாகும். எனவே தியேட்டரில் சென்று ‘கிடா’ படத்தைப் பார்த்து ஆதரவு கொடுப்போம்.

கிடா

Kida movie director Venkat emotional statement

சர்வதேச விருதுகளை வென்ற குழந்தைக் கடவுள் & கல்விக்கடவுள்

சர்வதேச விருதுகளை வென்ற குழந்தைக் கடவுள் & கல்விக்கடவுள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, தனது முதல் தமிழ் குறும்படமான ‘சஷ்தி’ (SHASHTHI) மூலமாக 2022ல் 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளையும், தனது இரண்டாவது தமிழ் குறும்படமான ‘சரஸ்’ (SARAS) மூலமாக 2023ல் 20 சர்வேதேச திரைப்பட விழாக்களில் 70 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்று அனைவருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் ஜூட் பீட்டர் டேமியான் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட்.

இவர் சார்ட்டட் அக்கவுண்டன்ட் சம்பந்தப்பட்ட துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு திரை இயக்கத்தைப் பற்றி முறையாகப் பயின்று இந்திய சினிமாவிற்கும் இந்த சமூகத்திற்கும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எடுத்த முயற்சியின் தொடக்கம்தான் அவரது முதல் இரண்டு குறும்படங்களான ‘சஷ்தி’யும் ‘சரஸ்’ ம்.

தனது சொந்த சிந்தனை மற்றும் தனது அனுபவங்கள் வாயிலாக அறிந்தவற்றை தரமான கலை மற்றும் தொழில்நுட்பம் மூலமாக பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு என அவர் ஒரு நிஜமான சாம்பியனாகவே இருக்க விரும்புகிறார்.

குழந்தைகளின் கடவுள் என்கிற ‘சஷ்தி’, மற்றும் கல்வியின் கடவுள் என்கிற ‘சரஸ்’ (சரஸ்வதி) என அவரால் எழுதி, இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் அதற்கு சாட்சியங்களாக விளங்குகின்றன.

சஷ்தி குறும் படம், சற்றே வசதி குறைந்த தேவி என்ற பெண்ணைப் பற்றிய அபிப்ராயத்தை, எப்படி அதிகமான அறிதலும் மாறும் சூழ் நிலைகளும், குழந்தைகளின் கடவுளான சஷ்தியுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுகின்றது என்பதை அறை மணி நேரத்தில் விளக்குகிறது.

சமூக ரீதியாவும் பொருளாதார ரீதியாகவும் பலவீனமான பின்னணி கொண்ட சரஸ்வதி (சரஸ்) என்கிற பெண், நன்கு படிக்கும் தனது மகனை எப்படி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க தீர்மானமாயிருக்கிறாள் என்பது பற்றி சொல்கிறது ‘சரஸ்’.

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். எஸ்.கே.காயத்ரி, ஹாரீஸ் மூஸா, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் ‘சஷ்தி’யில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார் மற்றும் மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் ‘சரஸ்’ குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் பிராங்க்ளின் ரிச்சர்டால் ‘சஷ்தி’ ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ஜி.டி.ராஜா என்பவரால் ஆரி அலெக்ஸா கேமராவால் ‘சரஸ்’ ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு படங்களுக்கும் எம்.எஸ்,ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையமைக்க எஸ்.டி.பி சாமி லைவ் ரெக்கார்டிங், சவுண்ட் மிக்சிங் ஆகியவற்றை கவனித்தார். சிவகுமார் மோகனன் நிர்வாக தயாரிப்பாளராகவும் குண்டல் ஆர்.பாபு படத்தொகுப்பாளராகவும் இருந்தனர்.

‘சஷ்தி’ ஆப்பிள் டிவி (ஐடியூன்ஸ் -iTunes) மற்றும் யூட்யூப்பிலும் (YouTube) பார்க்க கிடைக்கிறது.

‘சரஸ்’ விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

‘சஷ்தி’ (SHASHTHI 2022) மற்றும் ‘சரஸ்’ (SARAS 2023) ஆகியவை பெற்ற விருதுகள் பற்றிய விவரங்கள் ஐ.எம்.டி.பி. (IMDB) இணையதள பக்கங்களில் கிடைக்கின்றன.

Shashthi and Saras got international awards directed by Joot Peter

இலங்கையில் குஷ்பூ நுழைய எதிர்ப்பு தெரிவித்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள்.; ஏன்?

இலங்கையில் குஷ்பூ நுழைய எதிர்ப்பு தெரிவித்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள்.; ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமா கலைஞர்களுக்கு மற்ற மாநிலங்களைப் போல இலங்கை நாட்டிலும் பெரும் வரவேற்பு உள்ளது.

அங்கே இலங்கை தமிழர்கள் தமிழ் படங்களை அதிகம் பார்ப்பது வழக்கம். எனவே தமிழக கலைஞர்கள் அங்கே சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு அரசியல் காரணங்களால் கலைஞர்கள் அங்கே செல்வதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கலை நிகழ்ச்சிகளை அங்கே கலைஞர்கள் நடத்தி வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் எதிர்ப்பை மீறி ஸ்ரீலங்காவில் தன்னுடைய இசைக் கச்சேரியை நிகழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் பாடகர் ஹரிஹரன் மற்றும் நடிகை குஷ்பூ பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நவம்பர் 21 ஆம் தேதி இலங்கை – யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஆனால் இதில் நடிகை குஷ்பு கலந்துக் கொள்ள கூடாது என விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி சமீபத்தில் குஷ்பு கருத்து தெரிவித்த போது… அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது குஷ்பூ பாஜக கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார். எனவே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குஷ்பு கலந்து கொள்வாரா என்ன சொல்லப் போகிறார்? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Khsuboo should not participate in srilanka event

LOOPER HOLLYWOOD COPY.? ‘தளபதி 68’ பட சூட்டிங் அப்டேட் : சென்னை திரும்பிய விஜய்

LOOPER HOLLYWOOD COPY.? ‘தளபதி 68’ பட சூட்டிங் அப்டேட் : சென்னை திரும்பிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தை தொடர்ந்து தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதால் ஒரு தோற்றத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார் வெங்கட் பிரபு. அங்கு விஜய்யின் உருவத்தை ஸ்கேன் செய்து ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வந்திருந்தன.

இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படக்குழு பாங்காக் சென்று இருந்தனர்.

அங்கு ஷூட்டிங்பை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளார் விஜய்.

நடிகர் விஜய் சென்னை திரும்பிய புகைப்படம் & வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்…

இது 2012 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘லூப்பர்’ படத்தின் ரீமேக் தழுவல் என தகவல்கள் வந்துள்ளன.

2012 Hollywood film, Looper starring Bruce Willis, Joseph Gordon-Levitt and Emily Blunt

தளபதி 68

Vijay returned from Bangkok schedule of Thalapathy 68

More Articles
Follows