ரஜினி படத்தில் அரசியல் இருக்காது.; மாஸ் இருக்கும்.. : ஏஆர். முருகதாஸ்

ரஜினி படத்தில் அரசியல் இருக்காது.; மாஸ் இருக்கும்.. : ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and ARMபேட்ட படம் வெளியான பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இப்பட தயாரிப்பாளர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஆனாலும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.

இதனிடையில், ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் இது குறித்து பேசியதாவது…

“ரஜினி சாரை வைத்து நான் இயக்கும் படம், அரசியல் படம் கிடையாது. ஆனால், மாஸ் என்டெர்டெயினராக இருக்கும்.

நீண்ட காலமாக நான் ரஜினியின் ரசிகன். இது என்னுடைய கனவுப்படம்” என பேசினார்.

Breaking *மெரினா புரட்சி*-க்கு சர்ட்டிபிகேட் தராத சென்சாருக்கு கோர்ட் நோட்டீஸ்

Breaking *மெரினா புரட்சி*-க்கு சர்ட்டிபிகேட் தராத சென்சாருக்கு கோர்ட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marina puratchiகடந்த 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 10 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘மெரினா புரட்சி’.

இந்த திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் இதுவரை தணிக்கை சான்றிதழ் தரப்படவில்லை.

காரணம் சொல்லாமல் 2 முறை சென்சார் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து இப்பட இயக்குனர் கூறியதாவது…

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள். நீதி வெல்லும்.” என இயக்குனர் M S ராஜ் தெரிவித்துள்ளார்.

Breaking : தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு; விஷாலை விளாசும் எதிர் அணியினர்

Breaking : தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு; விஷாலை விளாசும் எதிர் அணியினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீடு தேதிக்கு குழு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்தார்.

ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை என எதிர்தரப்பினர் கூறி வந்தனர்.

விஷாலின் நண்பர்கள் ஆர்.கே. சுரேஷ் & உதயா ஆகியோரும் விஷாலை குறை கூறி பதவி விலகினர்.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட எதிர்தரப்பினர் சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில் இன்று (டிசம்பர் 19) தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்றனர்.

அதன்படி இன்று ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு சங்க துணைத் தலைவர் கதிரேசன் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இரு தரப்பிலும் சமரசம் ஏற்படவில்லை.

திடீரென விஷால் அறைக்கு பூட்டு போட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும், சங்கத்திற்கும் பூட்டுப் போட்டனர்.

இதனையடுத்து சங்கத்தின் சாவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்க உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

இதனால் காலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய ‘வசந்தம்’ ரவி மாறன்..!

நடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய ‘வசந்தம்’ ரவி மாறன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vasantham ravi maran‘திருமகள் மூவி லேண்ட்’ சார்பில் திரு P B மனோஜ் அவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படம்தான் ‘வசந்தம் 2’. திரு P B மனோஜ் அவர்கள் பல திரைப்படங்களுக்கு PRODUCTION MANAGER ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை வசந்தம் ரவி மாறன் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இவர் வசந்தம் திரைப்படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ஸ்ரீ ரேகா நடிக்கவுள்ளார் .இவர் தெலுங்கு , மலையாளத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகையாவார்.

இசை T S மணிமாறன் , ஒளிப்பதிவு சுந்தர்ராஜன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்படப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் தற்பொழுது புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது

வசந்தம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரவி மாறன் அவர்கள் சமீபத்தில் நாடகக்கலை அழிந்துவிட கூடாது என்பதற்காகவும், அதனை மென்மேலும் வளர்ச்சியடைவதற்காகவும் நடிகர் சங்கத்திற்கு ரூ.1.00.000 நிதியாக வழங்கியுள்ளார். இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளருமான திரு விஷால் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பெற்றுக்கொண்டனர். உடன் நடிகர்சங்க தலைவர் திரு நாசர் மற்றும் துணை தலைவர் கருணாஸ் , நடிகர் பூச்சிமுருகன் ஆகியோர் இருந்தனர்.

எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி – தனுஷ்

எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushநடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை” இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார்.

மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார்.படத்தில் நடித்த கிருஷ்ணா ,வரலட்சுமி மற்றும் சாய்பல்லவி ,ரோபோ சங்கர் , வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டிசம்பர் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை ‘ எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி .எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன்.

மாரி நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை .அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் .

மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும்.இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார்.அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.யுவன் அவர்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன்.அவர் 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம்.சாய் பல்லவி , மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி .ரோபோ சங்கர் மற்றும் வினோத் ஆகியோர் உடன் படப்பிடிப்பில் நடித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்கு சென்றவுடன் முதலில் அவர்களை தான் தேடுவேன் . அனைவருடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி . படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் திரையில் கண்டு பாருங்கள்.கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசியவை: வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கேப் விட்டு தனுஷ் அவர்களுடன் இணைத்துள்ளேன்.மிகவும் சந்தோசமாக இருக்கிறது என பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி பேசியவை ”
இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ் சார் அவர்களுடன் முதன் முதலில் ஜோடியாக நடித்துள்ளேன். படப்பிடிப்பில் கலகலப்பாக இருப்பார்கள் அனைவரும் . இந்த கதாபாத்திரம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .. என பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியவை ” இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன் மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் , இவ்வாறு பேசினார் .

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கிருஷ்ணா பேசியவை ” தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவாறு பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வுண்டர்பார் வினோத் அவர்கள் பேசியவை ” எதிர்நீச்சல் முதல் மாரி 2 வரை தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதால் மகிழ்ச்சி. படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது . அனைவரின் ஆதரவிரற்கு மிக்க நன்றி என பேசினார்.

எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijith saravananநந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய ‘தோனி கபடி குழு’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இயக்குநர் ஐயப்பன், நந்தகுமார் ,கொடுத்தார். இந்தப் படத்தில் நான் முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடிக்கிறேன். அதற்கு, இயக்குனர் ஐயப்பன் ,தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

மேலும், ‘வேட்டை நாய்’ படத்திலும் நடிக்கிறேன். இப்படத்தில் R.K.சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘மன்னாரு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் வாய்ப்பு தந்திருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் P.ஜோதிமுருகன், விஜய் கார்த்திக், இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “வேட்டை நாய்” படமும் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

இது தவிர, இன்னும் சில படங்களில் நடித்து வருகிறேன்.

எனது சொந்த ஊர் சேலம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில் தான். அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா வீட்டை நிர்வாகம் செய்கிறார். மனைவி ஹோமியோபதி மருத்துவர். அண்ணன், தங்கை என்று எல்லோருடைய ஆதரவும் எனக்கு உண்டு. படம் பார்த்துவிட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். ஒரு கலைஞனுக்கு இதை விட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நடிகனாக வேண்டும் என்று ஆசை இருந்தது. 8 வருட கனவு ”தோனி கபடி குழு’ மூலம் நனவாகியது.

அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருடைய ஆதரவுடன் நல்ல நடிகராக வலம் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

‘தோனி கபடி குழு’ படத்தைப் பார்த்து விட்டு எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடன் பல பேர் ‘செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

சுமார் 8 வருட காலமாக வாய்ப்புக்காக பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் என்று பலரிடமும் முயற்சி செய்திருக்கிறேன். அதனுடைய முயற்சிதான் இன்று நான் நடிகன்.

இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பதைவிட வெளியிடுவது தான் சவாலான செயல்.

இப்படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. இயக்குநரும், அபிலாஷும் சரியான திட்டத்தோடு இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய விளையாட்டான கபடியைப் பற்றி ஆணித்தரமாகக் கூறியிருக்கும் படம். இப்படியொரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனா? வில்லனா? அல்லது குணச்சித்திரமா? என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகனாகத்தான் என்னைப் பார்க்கிறேன்.

அதேபோல், இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இயக்குநர்களின் நடிகனாகவும் இருப்பேன்.

என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விஜித் சரவணன்

More Articles
Follows