தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தில் தூதுவராக சௌந்தர்யா ரஜினி நியமிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
அதை நம் தளத்திலும் பதிவு செய்திருந்தோம்.
அதற்கு சௌர்ந்தர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், இவர் ஏன்? தூதுவராக நியமிக்கப்பட்டார் என்ற சந்தேகங்களும் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து விலங்குகள் நலவாரியமே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் மிக பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்றே.
இவரை தற்போது Animal Welfare Board எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. இதை பற்றிய தகவல் வெளிவந்தது முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வேலை என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம், கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை Animal welfare Board இப்பணியில் அமர்த்தியுள்ளது.
அந்த செய்திக்குறிப்பு இதோ….