செகன்ட் ஹீரோவை காதல் (மறு) திருமணம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

செகன்ட் ஹீரோவை காதல் (மறு) திருமணம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundharya rajini re marriage visakanகடந்த 2010ம் ஆண்டில் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வேத் என்ற பெயரில் 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அதன் பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

தற்போது தந்தை ரஜினியுடன் வசித்து வருகிறார் சவுந்தர்யா.

இந்நிலையில் சௌந்தர்யா 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். தற்போது தந்தையுடன் இருந்து இவரும் தொழிலை கவனித்து வருகிறாராம்.

இவரும் சவுந்தர்யாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தாகவும் பின்னர் பழக்கமாகி இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணத்தை மிக எளிமையாக நடத்தவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சௌந்தர்யாவை விவாகரத்து செய்ய அஸ்வின் சில மாதங்களுக்கு முன்பே 2வது திருமணம் செய்துக் கொண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya Rajinis 2nd marriage She going to marry an actor

soundarya rajini சௌந்தர்யா ரஜினி

Breaking இலவசங்கள் நிச்சயம் தேவை.; சர்கார் சர்ச்சை குறித்து ரஜினி அதிரடி

Breaking இலவசங்கள் நிச்சயம் தேவை.; சர்கார் சர்ச்சை குறித்து ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Free is must says Rajinikanth in Sarkar deleted scenes issueமுருகதாஸ் இயக்கி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை மக்கள் தீயிட்டு எரிப்பதாக காட்சிகள் இருந்தன.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போர்கொடி உயர்த்த சர்கார் படம் மறுதணிக்கை செய்யப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சற்றுமுன் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்கப்பட்டது.

சர்க்கார் பட விவகாரத்தில் அரசு பேச்சுவார்த்தைக்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை தாக்குவது, பேனரை கிழிப்பது மிகவும் தவறான செயல். பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

100% மக்களுக்கு இலவசங்கள் தேவை தான் (ஏழைகளுக்கு). ஆனால் அது யாருக்கு சென்றடைகிறது என்பதை பார்க்க வேண்டும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுக்க கூடாது. என்றார்.

மேலும் பாஜக. குறித்து கேட்டதற்கு….

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும் – ரஜினி

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன்.

10 பேர் ஒருவரை (பாஜக.) வை எதிர்த்தால் யார் பலசாலி? என விளக்கம் அளித்தார்.

Free is must says Rajinikanth in Sarkar deleted scenes issue

Breaking நான் முட்டாள் இல்லை.; எந்த 7 பேர்? கேள்விக்கு ரஜினி நெத்தியடி

Breaking நான் முட்டாள் இல்லை.; எந்த 7 பேர்? கேள்விக்கு ரஜினி நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Rajiv Gandhi murder case and 7 Persons release issueசென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது ஒரு நிருபர் 7 பேர் விவகாரத்தில் குடியரசு தலைவர் கடிதம் நிரகாரிக்கப்பட்டது குறித்து ஒருவர் கேட்டார்.

எந்த 7 பேர் பத்தி கேள்வி கேட்கிறீங்க? என்று ரஜினி அவரிடம் கேட்டார். உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேர் விடுதலை குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியவில்லை என்று செய்திகளை வெளியிட்டனர்.

இது வைரலாக பரவியது. (நம் தளத்தில் இந்த செய்தி வெளியிடவில்லை)

தற்போது சற்றுமுன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அனைத்திற்கும் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது…

*ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை ஒரு சிலர் உருவாக்கி வருகின்றனர்.*

*7 பேர் குறித்து கேள்வி கேட்ட விதம் தெளிவாக இல்லை. செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.

*பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் பத்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியவன் நான்.*

*27 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.*

*பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்பது என்னுடைய கருத்து.*

*அன்றாட நிகழ்வுகள் குறித்து இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன். முழுதாக அரசியலுக்கு வந்த பிறகே பதிலளிப்பேன்.*

*முன்னாள் முதல்வர் ஜெ மரணத்திற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்ற அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு, பிறர் மனம் புண்படாத வகையில் அமைச்சர்கள் பேசுவது நல்லது என்றார். இதே கேள்வியை நான் அமைச்சர்களிடம் பார்த்து கேட்டால் சரியாக இருக்குமா?

*பாஜகவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

Rajini talks about Rajiv Gandhi murder case and 7 Persons release issue

உனக்கு அடிப்பட்டா எனக்குதான் கஷ்டம்.; துரத்திய ரசிகருக்கு அஜித் அட்வைஸ்

உனக்கு அடிப்பட்டா எனக்குதான் கஷ்டம்.; துரத்திய ரசிகருக்கு அஜித் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith advice to his fan who chased his car for 18 KMsமுன்பெல்லாம் நடிகர்கள் இப்படிதான் அடிக்கடி தங்கள் முகத்தை வெளியில் காட்டாமாட்டார்கள். அப்போது டிவிக்களும் இல்லை என்பதால் சினிமாவில் மட்டுமே நடிகர், நடிகைகளை காண முடியும் என்பதால் திரளாக கூடுவார்கள்.

தற்போது அந்த யுக்தியைத்தான் நடிகர் அஜித் கையாண்டு வருகிறார்.

தன் படப்பூஜை, பட விளம்பர நிகழ்ச்சி, டிவி பேட்டி என எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாதவர் அஜித். எனவே இவரை திரையில் காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

அண்மையில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் அஜித்.

அப்போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள திரள ரசிகர்களைத் தாண்டி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.

ஆனால் கணேஷ் என்ற ஒரு ரசிகர் அஜித்தின் காரை துரத்திக் க்கொண்டே சென்றுள்ளார்.

பின்னர் கிட்டத்தட்ட 18 கிமீ. சென்ற பிறகு அஜித் அவரை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.

தம்பி.. இதுபோல் துரத்திக் கொண்டு வேகமாக வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ரொம்ப டயர்ட்டா இருக்கு. போட்டோ எடுத்துக்கிறீயா என்றாராம் அஜித்… ஓகே அண்ணா என்று கூறிவிட்டு இவர் போட்டோ எடுத்துள்ளார்.

உனக்கு விபத்து நடந்தால் அது எனக்குத் தான் கஷ்டம். என்று அறிவுரை கூறினாராம். இந்த தகவலை அந்த ரசிகர் தன் பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இன்று அஜித்துடன் போட்டோ எடுத்தது சொர்க்கத்துக்கு சென்ற நாள் எனவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

Ajith advice to his fan who chased his car for 18 KMs

கேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

கேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar box collection reports Disappointment for Vijay fansதமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

175 அடி உயர கட்-அவுட், வெளியான 300 தியேட்டர்களில் 220 தியேட்டர்களில் ரசிகர்கள் சிறப்பு காட்சி என களைக்கட்டியது.

மேலும் விஜய்யின் பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி என கேரளாவில் சர்காருக்கு ராஜ மரியாதை இருந்தது.

கேரளாவில் மட்டும் முதல் நாள் 6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்பட்டது.

அதாவது கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது என்றனர். ’மெர்சல்’ வசூலை ஒப்பிடும் போது, இது பெரிய வசூல் அல்ல என்கின்றனர்.

ஆனால், 2ஆம் நாள் முதல் வசூல் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

திரைப்படம் முழுவதும் தமிழக அரசியலையே மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் கேரள மக்களிடையே அவை எடுபடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சர்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

உலகம் முழுவதும் 6 நாட்களில் இதுவரை 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவில் 6 நாட்களில் சுமார் 13 கோடியை வசூலித்துள்ளது. கர்நாடகாவிலும் 6 நாட்களில் 11 கோடி வசூலை கடந்துள்ளதாம்.

Sarkar box collection reports Disappointment for Vijay fans

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mani and govindவிஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் இமாலய வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தன.

அந்த படத்திற்கு இசையமைத்தவர் கோவிந்த் வஸந்தா.

இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே துல்கர், பஹத் பாசில் ஆகியோரின் மலையாள படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர் இவர்.

இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாம்.

இளையராஜாவுக்கு பிறகு மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான் தானே இசை, பின்னர் கோவிந்த வசந்தா? எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்.?

இது மணிரத்னம் இயக்கும் படமல்ல. அவர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்குதான் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தை தனசேகரன் என்பவர் இயக்குகிறார்.

More Articles
Follows