சௌந்தர்யாவின் HOOTE செயலிக்கு ரஜினி ஒரு ப்ராண்ட்..? ஒரு பார்வை

சௌந்தர்யாவின் HOOTE செயலிக்கு ரஜினி ஒரு ப்ராண்ட்..? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாதாசாகேப் பால்கே விருதை டெல்லியில் ரஜினிகாந்த் பெற்ற நாள் அன்று Voice based Social Media HOOTE என்ற செயலியை சென்னையில் அறிமுகப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினி.

அன்று தன் காந்த குரலில் பேசி இந்த செயலியை தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அன்றைய நாள் முதல் இன்று வரை அவர் ஏதாவது சொல்ல விரும்பினால் இந்த HOOTE மூலமே பேசி மக்களிடமும் ரசிகர்களிடமும் பேசி வருகிறார்.

அண்மையில் புனித் ராஜ்குமார் மறைவுக்கும் இதன் மூலமே குரலில் இரங்கல் தெரிவித்தார் ரஜினி.

தன் மகள் சௌந்தர்யாவின் HOOTEக்கு ப்ராண்ட் போல செயல்படுகிறார் ரஜினி என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டா என வெளிநாட்டு செயலிகளுக்கு ஆதரவளிப்பதை விட தன் மகள் நிறுவிய சோஷியல் மீடியாவுக்கு ஒரு தந்தை ஆதரவளிப்பது ஒன்றும் குற்றம் இல்லையே.

மேலும் இது உலகத்திற்காக நம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிதானே.

வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல மணி நேரம் டைப் செய்து போஸ்ட் செய்வதை விட பலரும் தங்கள் குரல் மூலமே பதிவு செய்வதையே விரும்புகின்றனர்.

அதுபோன்ற ஒரு தளத்தை சௌந்தர்யா உருவாக்கி தந்துள்ளார்.

இந்த HOOTE செயலியை பயன்படுத்துவதன் மூலம் படிக்காதவர்களுக்கும் எழுத தெரியாதவர்களுக்கும் நல்ல பலனை பெறலாமே.

யார் எது செய்தாலும் குற்றம் என்று சொல்வதை விட நல்லது என்றால் ஏற்றுக் கொண்டால் அது நன்மைதானே.

அவர் வீட்டு ப்ராண்ட்டுக்கு அவரே ஒரு ப்ரண்டா.. ஒரு ப்ராண்டா இருக்கலேன்னா எப்படி.? கொஞ்சம் யோசிங்க பாஸ்..?

Is Rajinikanth brand ambassador for Hoot app?

அம்மா பாசத்திற்கு அடுத்த படமிது.. சூர்யாவுக்கு ‘நந்தா’.. பிரபுதேவாவுக்கு ‘தேள்’..; ஞானவேல்ராஜா & தனஞ்செயன் வாழ்த்து

அம்மா பாசத்திற்கு அடுத்த படமிது.. சூர்யாவுக்கு ‘நந்தா’.. பிரபுதேவாவுக்கு ‘தேள்’..; ஞானவேல்ராஜா & தனஞ்செயன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது.

STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர்
A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவ்விழாவிலிருந்து சிறு துளிகள்

நடிகர் பிரபுதேவா கூறியதாவது…

இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம்.

இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை.

மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.

ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுல் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

நடிகை சம்யுக்தா கூறியதாவது…

இங்கு திரையிடப்பட்ட பாடலை படமாக்கும்போது நான் ஆக்ஸிடெண்டில் மாட்டிக்கொண்டேன். மைசூரில் பைக் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக அது நடந்து விட்டது.

பிரபு தேவா சார் அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை.

பிரபு தேவா சாருடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் C. சத்யா கூறியதாவது…

பிரபுதேவா சாரின் படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படத்தின் பின்னணி இசைக்காக தான் என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்தார் இயக்குநர் ஹரிகுமார்.

படத்தில் நடிகர் பிரபுதேவா தனது அம்மாவை கட்டிப்பிடிக்கும் ஒரு காட்சி வரும், அது என்னை மிகவும் பாதித்த உணர்வுபூர்வமான காட்சி. அதை இயக்குநரிடமும் சொன்னேன். இப்படத்தில் பிரபுதேவா சார் நடிப்பு மிகப்பெரும் பாராட்டை பெறும்.

தங்கள் வாழ்வுடன் ரசிகர்கள் தொடர்பு படுத்திகொள்ளும் படைப்பாக, மிக அழகான படமாக தேள் இருக்கும். என்றார்.

இயக்குநர் ஹரிகுமார் கூறியதாவது…

இன்று நான் இங்கு நிற்க, முழுமுதல் காரணம் இயக்குநர் K.E. ஞானவேல் ராஜா சார் தான். என் மேலும் இந்த படத்தின் மேலும் நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி. தேள் தலைப்பின் காரணம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளை போடும், அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்து விடும். மேலும் தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது போல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திபோகும். இசையமைப்பாளர் சத்யாவும், பாடலாசிரியர்கள் 4 பெரும் இணைந்து படத்தின் உணர்வுபூர்வமான பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளனர்.

பாடல் வரிகளில் பிரபுதேவா சார் பல யோசனைகள் சொன்னார். இப்படத்தில் வரும் அம்மா மகன் உறவு அனைவரும் எளிதில் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்வதாக இருக்கும். இப்படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் இப்படத்தில் நடிக்க முதல் காரணம் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பது தான்.

இரண்டாவது இது ஞானவேல் ராஜா சார் தயாரிப்பு என்பதாகத்தான் இருந்தது. ஈஸ்வரி மேடம் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்கள். சம்யுக்தா மிக அழகான நடிப்பை தந்துள்ளார். இந்நேரத்தில் என் தயாரிப்பாளருக்கு, இவ்விழாவிற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது…
நான் இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். இந்தப்படம் இயக்குநர் ஹரிகுமார் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். பிரபு தேவா சார் நடிப்பில் அவரின் மிகச்சிறந்த படமாக இப்படம் இருக்கும். பிரபுதேவா சார் நடனமும் ஆக்சனும் பாராட்ட பெற்றிருக்கிறது.

ஆனால் இந்தப்படம் அவரின் மிகச்சிறந்த நடிப்பை தரும் படமாக இருக்கும். சூர்யாவுக்கு ஒரு நந்தா போல் பிரபுதேவா சாருக்கு இந்தப்படம் அமையும்.

செண்டிமெண்ட் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார். அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை வழங்கியுள்ளனர். இப்படம் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துகளை கூறுகிறேன். இப்படத்தின் வசனங்கள் பாராட்டை பெறும்.

சம்யுக்தா வழக்கமாக அவரது நடனத்திற்கு பெயர் பெற்றவர். ஆனால் இப்படத்தில் அவரை வேறொரு கோணத்தில் காண மகிழ்ச்சியாக இருந்தது. அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும். இப்படம் K.E. ஞானவேல் ராஜா அவர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா கூறியதாவது…

Studio Green Movies நிறுவனம் எப்போதுமே கமர்சியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களை தந்து வருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக் காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள், இருவரும் அவர் படத்தை ஒன்றாக தான் பார்ப்போம். ஒரு முறை அவர் வீட்டுக்கு சென்றபோது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்க கூடியவர் அவர் இடத்தில் இருந்து எனக்கு ஒரு சிறு பிரச்சனை கூட வரவில்லை.

இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பை தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி டாக்டர் படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதே போல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள்.

யோகி பாபுவுக்கும் நாயகிக்கும் கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் செய்வார்கள். தியேட்டர்களில் இருந்து வெளியே வந்த உடனே தங்கள் அம்மாவிடம் பேசுவார்கள்.. இப்படம் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்..” என்றார்.

Gnanavel Raja and Dhananjayan wishes to Prabhu Deva’s Theal

‘ஜெய்பீம்’ விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருவது நம் சமூகத்திற்கு நல்லது.. – நாசர்

‘ஜெய்பீம்’ விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருவது நம் சமூகத்திற்கு நல்லது.. – நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம்.

ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை.

சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது. நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது.

ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன.

தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.

இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று.

மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம்.
நன்றி!

– நாசர்,

நடிகர்.
நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக.
16.11.2021

Actor Nassar supports Suriya’s Jai Bhim

வெங்கடேஷ் – மீனா நடித்த ’த்ரிஷ்யம் 2’ பட ரிலீஸ் அப்டேட்

வெங்கடேஷ் – மீனா நடித்த ’த்ரிஷ்யம் 2’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் வெளிவந்த வெற்றிப்படமான த்ருஷ்யத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் டகுபதி இப்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவரவுள்ள, த்ருஷ்யம் 2 படத்திலும் பங்கேற்கிறார்.

சுரேஷ் புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ஆண்டனி பெரும்பாவூர், சுரேஷ் புரொடக்ஷனின் D. சுரேஷ் பாபு, மேக்ஸ் மூவீஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த Amazon Originals திரைப்படம் மர்மம் மற்றும் திடீர்த் திருப்பங்ககள் கொண்ட குடும்ப த்ரில்லர் ஆகும்.

நவம்பர் 25-ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த தெலுங்கு த்ரில்லரின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள Prime உறுப்பினர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்

15 நவம்பர், 2021— தெலுங்கு க்ரைம்-த்ரில்லர் ’த்ருஷ்யம் 2’க்கான டிரெய்லரை Amazon Prome Video இன்று வெளியிட்டது, தெலுங்கில் வெளிவந்த வெற்றிப் படமான த்ருஷ்யத்தில் நடித்த இதில் வெங்கடேஷ் டக்குபதி தனது பாத்திரத்தை இப்படத்திலும் தொடர்கிறார்.

மீனா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றனர்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின் D.சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி, மேக்ஸ் மூவிஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ’த்ருஷ்யம் 2’ நவம்பர் 25 அன்று Amazon Prime \ Video-இல் இந்தியாவிலும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்.

முதல் படமான திருஷ்யம் முடிந்த இடத்திலிருந்து துவங்கும் த்ருஷ்யம் 2, ராம்பாபுவின் (வெங்கடேஷ் டக்குபதி) குடும்பம் கடந்த கால நிகழ்வுகள் பற்றிய விசாரணையால் அச்சுறுத்தப்படுவதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை ரோலர் கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்கிறது.

வரவிருக்கும் Amazon Original திரைப்படமானது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த சம்பவத்தால் பதிக்கப்பட்ட தனது குடும்பத்தை மீட்டெடுத்த குடும்பத் தலைவர் மீண்டும் ஒருமுறை அவர்களைக் காக்க முயல்வது போன்ற மிகவும் பரபரப்பான மற்றும் தீவிரமான மற்றும் கவர்ச்சிகரமான கதையில் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த த்ரில்லர் இருக்கையின் நுனிக்கு பார்ப்பவர்களை இட்டு வருகிறது.

இந்தியாவின் கதைகள் மற்றும் கதைசொல்லிகளுக்கான உலகளாவிய மேடையாக Amazon Prime Video மாறியுள்ளது,” என்று Amazon Prime Video இந்தியாவின் உள்ளடக்க உரிமத்துறை தலைவர் மனிஷ் மெங்கானி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், …

“தனித்துவமான கதைகளைக் கண்டுபிடித்து அவற்றை வெளிக்கொணர்வது எங்கள் உள்ளடக்க நிரலாக்கத்தின் மையமாக உள்ளது.

ராம்பாபுவின் கதைக்கு பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பார்க்கும்போது, இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான த்ருஷ்யம் 2-ஐ எங்கள் சேவையில் வெளியிடுவது இயல்பான தேர்வே. வெங்கடேஷ், ஜீத்து ஜோசப் மற்றும் சுரேஷ் பாபு உட்பட சிறந்த நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் குழுவை படம் வெளிக்காட்டுகிறது.

அவர்கள் கூட்டாக வழங்கும் இத்திரைப்படம் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு பரபரப்பான பொழுதுபோக்காக உருவெடுக்கிறது.

படத்தின் டிரெய்லரை வெளியிடும் இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புவது எல்லாம் ‘ராம்பாபுவும் அவரது குடும்பத்தினரும் உங்கள் திரைக்கு வரும்போது உங்கள் இருக்கையின் நுனிக்கு உங்களை அறியாமலேயே இட்டு வரும் திரில்லர் பொழுதுபோக்கிற்குத் தயாராகுங்கள்’என்பது மட்டுமே” என்றார்.

“எங்களுக்கு இவ்வளவு அன்பையும் பாராட்டுகளையும் வழங்கிய எங்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். நாங்கள் பெற்ற வரவேற்பு மற்றும் த்ருஷ்யம் திரைப்படம் அடைந்த வெற்றி இதுவரை எவரும் காணாதது, மேலும் த்ருஷ்யம் 2 மூலம் இந்த வெற்றியை முன்னோக்கிக் கொண்டு செல்ல எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது.

ராம்பாபு தனது குடும்பத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள நிலையில் ராம்பாபுவின் வாழ்க்கையில் அடுத்து என்ன, எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து எங்கள் ரசிகர்கள் கொண்டுள்ள பல கேள்விகளுக்கு இத்தொடர் திரைப்படத்தில் விடையளிக்க முயல்கிறோம்.

கதைக்களத்தில் உள்ள திருப்பங்கள் சஸ்பென்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உணர்வுப் பூர்வமான மற்றும் மேலும் உற்சாகமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் த்ருஷ்யம் 2 எங்கள் பார்வையாளர்களின் ஆவலை மேலும் தூண்டுவதாக அமையும். Amazon Prime Video-இல் த்ருஷ்யம் 2 ஐத் திரையிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கும். ” ”என்று வெங்கடேஷ் டகுபதி கூறினார்.

த்ருஷ்யம் 2 படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜீத்து ஜோசப் கூறுகையில் “த்ருஷ்யம் 2 என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. திருஷ்யத்தின் தொடர்ச்சியுடன் மீண்டும் வருவீர்களா என்று பலர், பல ஆண்டுகளாக என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரவேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன், ஆனால் எல்லாவற்றுக்கும் அதற்குரிய நேரம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

கதையை எப்படித் தொடரலாம் என்று பல வழிகளில் யோசித்து, இறுதியில் எனது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரின் ஆதரவுடன் அந்தக் கதைக் கருவை யதார்த்தமாக மாற்ற மிகவும் கடினமாக உழைத்த பிறகு, இப்போது இந்தப் படத்தை எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளேன். அவர்களின் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Amazon Prime Video உடன் இணைவதால் பலரிடையே இப்படத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது., இது’ என்கிறார்.

டிரெயிலர் இணைப்பு: https://youtu.be/uUJtUYkBu-g

கதைச் சுருக்கம்:
ராம்பாபுவும் அவரது குடும்பத்தினரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த மற்றும் அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய குற்றத்தின் நிழலில் வாழ்கிறார்கள், . மூன்று தரப்பினரின் உணர்வுகளை ஆராய்வது போன்று இத்திரைப்படம் அமைந்துள்ளது: பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கும் ராம்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர், நீதி கிடைக்கப் போராடும் மகனை இழந்த பெற்றோர்கள் கீதா மற்றும் பிரபாகர் மற்றும் ஒரு சாமானியனால் அவர்களை விட புத்திசாலியாக அல்லது தந்திரமாக மறைத்ததால் வெகுண்டு புதிரை அவிழ்க்கத் துடிக்கும் காவல் துறை என எதிர்பாராத நிகழ்வுகளால் சூழப்பட்ட இந்தக் கதை உங்களை மறந்து, நகத்தைக் கடிக்க வைக்கும் உணர்ச்சிகரமான கிளைமேக்ஸுக்கு வழிவகுக்கிறது. இந்த முறை ராம்பாபுவால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா?

Amazon Prime Video Premieres the Much-Awaited Trailer for Drushyam 2 Starring Venkatesh Daggubati

உலகளவில் கோடிகளை அள்ளிக் குவிக்கும் ‘குருப்’..; துள்ளலில் துல்கர் சல்மான்

உலகளவில் கோடிகளை அள்ளிக் குவிக்கும் ‘குருப்’..; துள்ளலில் துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான ‘குருப்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முதல் வாரத்தில் பல்வேறு திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

துல்கர் சல்மானின் அசத்தலான நடிப்பு, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் துல்லியமான இயக்கம், நிமிஷ் ரவியின் கச்சிதமான ஒளிப்பதிவு, சுஷின் ஷாமின் துள்ளலான இசை என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

தமிழகத்தில் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகரிப்பே படத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் ‘குருப்’ வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியானது ‘குருப்’. உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Dulquer Salmaan’s Kurup collected Rs 50 crores at the worldwide box office

‘வேதம் புதிது’ பிரச்சினையின் போது MGR என்னுடன் நின்றார்..; இப்போது ‘ஜெய்பீம்’ சூர்யாவுக்கு..? – பாரதிராஜா

‘வேதம் புதிது’ பிரச்சினையின் போது MGR என்னுடன் நின்றார்..; இப்போது ‘ஜெய்பீம்’ சூர்யாவுக்கு..? – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம்.

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.

திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.

கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவேமுயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான்.

பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே “ஜெய்பீம்”. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான்.

அன்று என் படம் “வேதம் புதிது ” முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் MGR உடன் நின்றார்.

அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் “ஜெய் பீம்” படமும்.

இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல.

கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்… தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல.

தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்… அவர் மீதான வன்மத்தையும்… வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே..

நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள்.

எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!

எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்

பாரதிராஜா,

தலைவர்,

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

Director Bharathi Raja supports Suriya’s Jai Bhim

More Articles
Follows