தமிழ் படங்கள்ல நடிச்சிட்டு ஹிந்திக்கு வாங்க…; அக்சய்குமார் அழைப்பு

akshay kumarஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அக்சய்குமார்.

இப்படத்தின் மேக்அப்பிற்காக இவர் மேற்கொண்ட கடின உழைப்பை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகினரை இவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

டெக்னாலஜி வசதியில் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

இங்குள்ள கலைஞர்கள் சரியான நேரத்திற்கு சூட்டிங்க்கு வருகிறார்கள்.

மேலும் மற்ற கலைஞர்களின் நேரத்தையும் அவர்கள் பொன்னாக மதிக்கிறார்கள்.

எனவே பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் இளம் நடிகர்கள் தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு பாலிவுட்டுக்கு வரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் அக்சய் குமார்.

Overall Rating : Not available

Latest Post