தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஷங்கர் ஷெட்யூலை முடித்துவிட்டு, தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘RC15’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நேற்று துவங்கியுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், சார்மினார் முன் தனது படத்தை ட்விட்டரில் பகிர்ந்த இயக்குனர் ஷங்கர், “#RC15 இன் அடுத்த அட்டவணையை சின்னமான சார்மினாரில் தொடங்குகிறோம்” என்று எழுதினார்.
Shankar resumes shooting of Ram Charan’s ‘RC15’