ஷங்கரின் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில்..!

ஷங்கரின் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் வைத்து ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வருகிறார்.

அதே நேரத்தில், ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

ஷங்கர் தற்போது ‘RC15’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படக்குழு தற்போது நியூசிலாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் போஸ்கோ மார்டிஸ் நேற்று தனது பிறந்தநாளை நியூசிலாந்தில் படத்தின் செட்டில் கொண்டாடினார்.

மேலும், இப்படத்தை டிசம்பர் இறுதியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.

RC15

Shankar’s ‘RC15’ is currently being shot in New Zealand

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ரன் டைம் மற்றும் தியேட்டர் ரிலீஸ் அப்டேட்ஸ்

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ரன் டைம் மற்றும் தியேட்டர் ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவதார் : தி வே ஆஃப் வாட்டர் இந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது .

3D மற்றும் IMAX 3D வடிவங்களில் வெளியிடப்படும் இப்படம் சுமார் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு, கேரளாவில் உள்ள திரையரங்குகளில் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுவதாகவும் வழக்கமான 3டி 12 மணிக்குத் தொடங்கும் என்றும், ஐமேக்ஸ் 3டி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிக்கும் பான் – இந்தியா படத்தின் பூஜை தொடங்கியது !

தனுஷ் நடிக்கும் பான் – இந்தியா படத்தின் பூஜை தொடங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் தனுஷின் பான்-இந்தியா படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சேகர் கம்முலா இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா மும்மொழி திரைப்படம் இன்று பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

மேலும் படம் 2023 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்படுவதாக சொல்லப்படுகிறது.

‘துணிவு’ பட அப்டேட் கொடுக்கும் பிரபலங்கள்.; இனி மேனேஜர் என்ன செய்வார்.?

‘துணிவு’ பட அப்டேட் கொடுக்கும் பிரபலங்கள்.; இனி மேனேஜர் என்ன செய்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

சமீபத்தில் அனிருத் பாடிய ‘சில்லா.. சில்லா..’ என்ற பாடலின் அப்டேட் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்தப் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

அதன் பின்னர் நடன இயக்குனர் கல்யாண் இந்த பாடல் அப்டேட் கொடுத்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் தான் ஒரு பாடலை பாடியுள்ளதாக இப்படத்தின் நாயகி மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “துணிவு படத்தின் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மஞ்சு.

அஜித் படங்களுக்கு பெரும்பாலும் பிரஸ் மீட்.. இசை வெளியீட்டு விழா என எதுவும் நடைபெறாது.

அவர் மேனேஜர்தான் (PRO) படங்களின் அப்டேட் கொடுப்பார்.

ஆனால் தற்போது இந்த படத்தின் நடிகர்களே அப்டேட் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thunivu team cast and crew gives updates.. what PRO will do

விஜய்சேதுபதி நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்.; மக்கள் செல்வனின் மகத்தான பணி.!

விஜய்சேதுபதி நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்.; மக்கள் செல்வனின் மகத்தான பணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் & KGISL Educational Institutions கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கம் 3 நாட்களில் 20000+ இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல நற்பணிகளும் செய்து வருகிறார் மேலும் அவரது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி தரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில் இப்போது கோவை மாநகரில் பிரமாண்டமாக இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் இந்தியாவை சார்ந்த அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 2022- டிசம்பர் மாதம் 2,3,4 ஆம் தேதிகளில் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

விஜய் சேதுபதி

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 Sector-ஐ சேர்ந்த, 200+ நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 20000+ வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை தேடும் இளைஞர்கள் / நிறுவனங்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.

இதில் எந்த கட்டணமும் இல்லை முழுக்க சமூக சேவையாகவே நடைபெறுகிறது.

விஜய் சேதுபதி

கடந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் 50 நிறுவனங்களுடன் ஆயிரத்திற்கும் மேலான வேலை தேடும் நபர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த சேவை ஒருநாள் வேலை வாய்ப்பு சேவையாக அல்லாமல், வருடத்தின் அனைத்து நாட்களும் இந்த இயக்கத்தின் சேவை மக்கள் செல்வன் வழியில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் இது நாள் வரை 1,20,243 நபர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி

Vijay Sethupathis Employment Opportunity

‘பட்டத்து அரசன்’ தந்த பாடம்.; பரவசத்தில் ‘சித்தப்பு’ துரை சுதாகர்

‘பட்டத்து அரசன்’ தந்த பாடம்.; பரவசத்தில் ‘சித்தப்பு’ துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம். உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் ‘களவாணி’ துரை சுதாகர்!

தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய ‘களவாணி 2 ‘படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர்.

அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் .

“நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப் அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன.என்னை களவாணி துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள்.

அதற்காக இயக்குநர் அண்ணன் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெறும் நன்றி என்று கூறுவதில் என்னுடைய மன உணர்வைக் கூறிவிட முடியாது.

இப்போது நான் பட்டத்து அரசன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பு.படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகிறது.

துரை சுதாகர்

இன்று மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ள லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்டமான படத்தின் வெற்றி அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லும்.

மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும், தான் உணர்ந்த விஷயங்களைப் படமாக்குவது என்பதில் கொள்கையாக வைத்திருக்கும் அண்ணன் சற்குணம் இயக்கி இருக்கிறார் அவர் இயக்கத்தில் நடித்தது ஒரு பெருமை.

இந்தப் படத்தில் அதர்வா, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் , ஆர். கே. சுரேஷ், ராதிகா, சிங்கம்புலி, பாலசரவணன் போல எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில், தேசிய விருது பெற்ற திறமை மிக்க இயக்குநரின் இயக்கத்தில், இவ்வளவு நட்சத்திரங்கள் மத்தியில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பட்டத்து அரசன் கதை கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பக் கதை அமைப்பு கொண்ட படம். காட்சிகளை மிக அழகாக எடுத்துள்ளார் இயக்குநர்.

நான் ராஜ்கிரண் அவர்களின் பையனாக நடித்திருப்பேன். ராஜ்கிரன் அவர்கள் பிரபலமான தயாரிப்பாளர் மட்டுமல்ல உச்சத்துக்கு சென்ற நடிகர். ஏராளமான திரைப்பட அனுபவங்களைப் பெற்றவர். அவருடன் நடிக்கும் போது எனக்கு முதலில் சற்று தயக்கமாகவும் மிரட்சியாகவும் இருந்தது.

ஆனால் இப்படிப்பட்ட மனப் பதற்றத்துடன் நடித்தால் சரியாக நடிப்பு வராது என்பதை அவர் உணர்ந்து கொண்டு முதல் நாளே என்னுடன் இயல்பாக பேசினார். என்னைப் பற்றி விசாரித்து தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

முதன் முதலில் நடித்ததை விட அவர் ஊக்கப்படுத்திய பின் நடித்தது எனக்கே நம்பிக்கையாகவும் திருப்தியாகவும் இருந்தது.

அதுமட்டுமல்ல நான் நடித்த போது என்னைப் பாராட்டிய ஊக்கப்படுத்தினார்; தட்டிக் கொடுத்தார். அனுபவம் உள்ள நடிகர் போல் நடிக்கிறீர்கள் என்று கூறினார். நான் முன்பு நடித்த படங்களை அவர் பார்த்திருக்கவில்லை.

ஏற்கெனவே நடித்திருக்கிறீர்களா? என்று விசாரித்தார். ஊக்கமாக இருந்தது . அதேபோல் ஜெயப்பிரகாஷ் அவர்களும் “நல்லா பண்றீங்க பயமில்லாமல் செய்யுங்க” என்று ஊக்கப்படுத்தினார் அண்ணன் சிங்கம்புலி இந்தப் படப்பிடிப்பு நடந்த 40 நாட்களையும் கலகலப்பாக ஆக்கினார் .

படத்தில் கதைப்படி நாங்கள் மாமன் மச்சான்களாக நடித்திருக்கிறோம். ஆனால் நேரில் அவர் ஒரு சகோதரர் போல , நண்பரைப் போலப் பழகினார்.

துரை சுதாகர்

அப்படித்தான் அண்ணன் ஆர். கே. சுரேஷும் எளிமையாகப் பழகினர்.

கதாநாயகன் சகோதரர் அதர்வாவும் மிகவும் சகஜமாகப் பழகினார் அவர் ஒரு நட்சத்திரத்தின் பிள்ளை என்கிற எந்த விதமான எண்ணமும் இல்லாமல் அனைவரிடம் பழகியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு பள்ளி மாணவரைப் போலவும் கல்லூரி மாணவரைப் போலவும் தெரிந்தார் .

அவர் சகஜமாகப் பேசிப் பழகி அனைவருடனும் இருந்த இடைவெளியைக் குறைத்து இயல்பாக மாற்றினார். அது நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போகும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.

இப்படித்தான் அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அன்புடனும் சகஜமாகவும் பழகினார்கள். பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இப்படி ஒரே படத்தின் மூலம் பலருடன் பேசிப் பழகும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது.

இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்த போது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது .

அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

இப்படி ஒரு மெகா கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு எப்போதும் அமைந்து விடாது . அதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்போதுமே இயக்குநர் அண்ணன் சற்குணம் கதைக்கேற்ற முகங்களைத்தான் தேடுவார். அப்படித்தான் இதிலும் அனைவரையும் பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து நடிக்க வைத்தார். அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பார்.

எனவே நான் பெரிதாக நடித்தேன் என்று சொல்வதை விட அவர் அப்படி வடிவமைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் எப்போதும் தான் மட்டும் வளர வேண்டும், தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. தன் படத்தில் உள்ளவர்களும் தான் அறிமுகப்படுத்தியவர்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர் .

தன் ஒவ்வொரு படத்திலும் யாரையாவது அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அப்படி இந்தப் படத்தில் கலை இயக்குநரையும் கதாநாயகியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எனவே, என்னைப் போலவே அவரும் மேலும் மேலும் வளர வேண்டும் பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். அவருக்கு இந்த நேரத்தில் மனம் நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி” இவ்வாறு கூறினார் துரை சுதாகர்.

துரை சுதாகர்

Actor Durai Sudhakar reveals experience of Pattathu Arasan

More Articles
Follows