ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இணைந்த ஜோடி ஜிவி பிரகாஷ் – இவானா

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இணைந்த ஜோடி ஜிவி பிரகாஷ் – இவானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக்கூடிய எதிர்ப்பார்ப்பில் உள்ள புதிய திரைப்படத்திற்கு ‘கள்வன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ், மூத்த பட இயக்குநரான பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பல த்ரில்லர் தருணங்கள் உள்ளன.

PV சங்கர் ‘கள்வன்’ படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து கதை திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ், பாரதிராஜா மற்றும் இவானா இவர்கள் தவிர்த்து தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

தயாரிப்பு: G. தில்லி பாபு,
தயாரிப்பு நிறுவனம்: ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்: PV சங்கர்,
இசை: ஜிவி பிரகாஷ் குமார்,
படத்தொகுப்பு: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா,
டீசர் கட்: எடிட்டர் சேன் லோகேஷ்,
கலை: NK ராகுல்,
சண்டைப்பயிற்சி: திலீப் சுப்பராயன்,
கதை, திரைக்கதை: ரமேஷ் அய்யப்பன் & PV சங்கர்,
வசனம்: ரமேஷ் அய்யப்பன், PV சங்கர் & ராஜேஷ் கண்ணா
கூடுதல் திரைக்கதை: SJ அர்ஜூன் & சிவக்குமார் முருகேசன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: பூர்ணேஷ்,
தயாரிப்பு நிர்வாகி: SS ஸ்ரீதர்,
கிரியேட்டிவ் புரொட்யூசர்: K.V. துரை,
பாடல் வரிகள்: சிநேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம்,
மேலாளர்: அறந்தை பாலா, மணி தாமோதரன்,
ஆடை வடிவமைப்பு: கிருஷ்ண பிரபு,
படங்கள்: E. ராஜேந்திரன்,
உடை: சுபியர்,
ஒப்பனை: வினோத் சுகுமாறன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One,
மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ்: DEC
ஒலி வடிவமைப்பு: Sync Cinemas,
DI – Lixo Pixels,
VFX மேற்பார்வை: கிரண் ராகவன் (Resol VFX),
விளம்பர வடிவமைப்பாளர்: வின்சி ராஜ்

Axess Film presents GV Prakash Bharathiraja Ivana starrer KALVAN

6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’.; முழு விவரம் இதோ

6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’.; முழு விவரம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கினார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ம் தேதியில் வெளியானது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது.

இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் 2023 ஏப்ரலில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை 16வது ஏசியன் பிஃலிப் அவார்ட்ஸ் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த விவரம் இதோ

#PS1 is nominated for six awards at the 16th Asian Film Awards @busanfilmfest

Best Film – Ponniyin Selvan: Part 1
Best Original Music – @arrahman
Best Editing- @sreekar_prasad
Best Production Design- #ThotaTharani
Best Cinematography- @dop_ravivarman
Best Costume Design- @ekalakhani

#PonniyinSelvan #ManiRatnam @madrastalkies_ @lyca_productions

பொன்னியின் செல்வன்

PS1 is nominated for six awards at the 16th Asian Film Awards

தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஹ்மான் சென்னையில் இல்லாவிட்டாலும் ஏஆர்ஆர் ஐ பார்க்க ரசிகர்கள் வந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்து கொண்டார்.

எனவே, மெட்ராஸின் மொஸார்ட் ஏ ஆர் ரஹ்மான் வீடியோ சாட் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டார்.

இதையொட்டி அவரது சார்பில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

அதோடு, இசை புயல் நேற்றிரவு தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் இல் நேரலைக்குச் சென்று சில ரசிகர்களை தனது நேரடி அமர்வுக்கு அழைத்து அவர்களுடன் உரையாடினார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தை உலுக்கி வருகிறது.

Isai Puyal AR Rahman celebrated his birthday with fans virtually

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றொரு வலுவான பெண் போட்டியாளர்

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றொரு வலுவான பெண் போட்டியாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர் ஒருவரிடம் ஹவுஸ்மேட்கள் விடைபெறப் போவதாக தெரிகிறது.

கமல்ஹாசனே மேடையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாதவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என்பது யாருக்கும் தெரியாது .

ஆனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் யூகிப்பதைத் தடுக்க முடியவில்லை.

பிக்பாஸ் வீட்டில் பலம் வாய்ந்த போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ரக்ஷிதா மகாலட்சுமி இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yet another strong female contestant gets evicted from Bigg Boss

துணிவு மற்றும் வாரிசு படத்தின் அதிகார பூர்வ FDFS டைமிங் இதோ

துணிவு மற்றும் வாரிசு படத்தின் அதிகார பூர்வ FDFS டைமிங் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிலீஸ் தேதியை அந்தந்த படக்குழு உறுதி செய்தாலும், இரண்டு படங்களிலும் கையெழுத்திட்ட தியேட்டர்களுக்கான FDFS காட்சி நேரம் முடிவு செய்யப்படவில்லை.

இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அஜீத் நடித்த துணிவு படத்திற்கு அதிகாலை 1.00 மணி காட்சியும், விஜய்யின் வாரிசு படத்திற்கு முறையே அதிகாலை 4.00 மணி ஷோவும் இருக்கும்.

வாரிசு ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு, அதேசமயம் துணிவு ஒரு ஆக்‌ஷன் என்டர்டெய்னர்.

வகைகளில் வித்தியாசம் இருந்தாலும், போட்டிக்கு குறைவு இருக்காது என்பதில் சந்தேகமில்லை, இது நிச்சயமாக பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும்.

FDFS show timing of Thunivu and Varisu confirmed

BREAKING மீண்டும் ஒரு எம்ஜிஆர் வேண்டும்.. அது உன்னால் முடியும்..- கே. ராஜன்

BREAKING மீண்டும் ஒரு எம்ஜிஆர் வேண்டும்.. அது உன்னால் முடியும்..- கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் ‘இரும்பன்’.

இதில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

கீரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லெமூரியா மூவிஸ் சார்பாக இந்த படத்தை தமிழ் பாலா மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கேகே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரும்பன்

இந்தப் பட விழாவில் கே ராஜன் கலந்து கொண்டு பேசினார்.. அவர் பேசும்போது..

“இப்போது எம்ஜிஆர் இல்லை. தமிழ் சினிமா ஹீரோக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால் எம்ஜிஆர் போல ஒருவரும் இல்லை.

இன்றைக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எனவே ராமச்சந்திரன் புதிய எம்ஜிஆர் ஆக உருவாக வேண்டும்.

மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.. எம்ஜிஆரை போல எவரும் வாழவில்லை.

அவர் வீட்டிற்கு சென்றால் எப்போதும் எல்லாருக்கும் உணவு அளிப்பார்.

ஆனால் இன்று பெரிய ஹீரோக்கள் கூட தங்கள் வீட்டில் ஒரு மோர் கூட கொடுப்பதில்லை. தாகம் தீர்ப்பதில்லை.

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நான் தான்… நான் தயாரித்த டபுள்ஸ் திரைப்படத்தில் தான் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.” என்று வாழ்த்தி பேசினார்.

கூடுதல் தகவல்…

முதலில் இந்த படத்துக்கு குறவன் என்று தலைப்பு வைத்திருந்தனர். தற்போது படத்தின் பெயரை மாற்றி ‘இரும்பன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இரும்பன்

https://t.co/myRnoVt0eg

We need MGR again says K Rajan at Irumban event

More Articles
Follows