தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் எந்த படங்களும் இந்தாண்டு வெளியாக போவதில்லை.
எனவே இந்த தீபாவளியை கூட அஜித் ரசிகர்கள் துக்க தீபாவளி என்றனர்.
இந்நிலையில் வருகிற நவம்பர் 10ஆம் தேதி அன்று அஜித்தின் வேதாளம் படத்தை திரையிட போகிறார்களாம்.
இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ளது.
எனவே, ரசிகர்களுக்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடுகின்றனர்.
இதற்கு இப்போதே ரிசர்வேசன் தொடங்கிவிட்டதாம்.
அப்போ கடந்த ஆண்டைப் போல இந்த வருஷமும் தெறிக்க விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.







