அடல்ட் ஒன்லி படக்கதையில் நடிக்கிறாரா ஓவியா..?

அடல்ட் ஒன்லி படக்கதையில் நடிக்கிறாரா ஓவியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress oviyaஹரஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் அடல்ட் ஒன்லி படமாக இது இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் நாயகியாக ஓவியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

காலாவின் அடுத்த கட்டம் இன்றுமுதல் ஆரம்பம்

காலாவின் அடுத்த கட்டம் இன்றுமுதல் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala movie stillsதயாரிப்பாளர் சங்கம் இடையே எழுந்த மோதல் காரணமாக பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.

இதனால் கடந்த 13 நாட்களாக எந்தவிதமான சூட்டிங்கும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

பலகட்ட பேச்சுவார்த்தை முடிவில் இருதரப்பினரும் சமாதானம் ஆனதால் இன்றுமுதல் சூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

எனவே இன்றுமுதல் ரஞ்சித் இயக்கும் காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இதன் சூட்டிங் ஒன்றரை மாதங்களை வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சி போட்டி; விரைவில் அறிவிப்பு..?

உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சி போட்டி; விரைவில் அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal to announce new political party soon and he may participate in Local body electionஇந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் விரைவில் அரசியல் களம் போகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

எதையும் முறையாக பயிற்சி பெற்று கற்றுக் கொண்டு களம் இறங்கும் கமல், அரசியல் பற்றி அறிய அண்மையில் கேரளா சென்றிருந்தார்.

அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு நான் தயாராகிவிட்டேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக என்னோடு இணையலாம் எனவும் அவர் அண்மையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் இவரின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கமல் மற்றும் இதர உறுப்பினர்கள் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kamal to announce new political party soon and he may participate in Local body election

எங்கள கைது பண்ணல; முடிஞ்சா துப்பறிவாளனை காப்பாத்து; தமிழ்கன் எச்சரிக்கை!

எங்கள கைது பண்ணல; முடிஞ்சா துப்பறிவாளனை காப்பாத்து; தமிழ்கன் எச்சரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilgun admin not arrested and they warned Thupparivaalan movieபுதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அன்றே சில இணையத்தளங்களிலும் வெளியாகி சினிமாவை அச்சுறுத்து வருகிறது.

அதில் முக்கியமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் இணையத்தளங்கள் பிரபலமானவை.

இந்த இணையத்தளங்களை முடுக்க பல்வேறு யுக்திகளை திரையுலகினர் செய்து வருகின்றனர்.

முக்கியமாக நடிகர் விஷால் இதில் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இதனிடையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மினை சென்னை போலீசார் கைது செய்துள்ளதாக விஷால் தெரிவித்தார்.

இதை நம் தளத்திலும் பதிவிட்டு இருந்தோம்.

ஆனால் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் ‘எங்கள் அட்மினை யாரும கைது செய்யவில்லை. அது தவறான செய்தி’ என்று பதிவிட்டார்கள்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட கவுரிசங்கர் ‘Tamil Gun’ என்ற இணையத்தின் அட்மின் என செய்திகள் வெளியானது.

ஆனால் ‘Tamil Gun’ ஃபேஸ்புக் பக்கத்தில் “அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்துங்கள். எங்களுடைய அட்மின் கைது செய்யப்படவில்லை.

நாளை ரிலீஸ் ஆகும் ‘துப்பறிவாளன்’ படத்தை முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுப்பது போல் பதிவிட்டுள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையத்தளங்களுமே “எங்கள் அட்மின் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருப்பதால் இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

விஷால் தரப்போ அது தமிழ்கன் அட்மின்தான் என உறுதியாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilgun admin not arrested and they warned Thupparivaalan movie

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthu“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது.

மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது.

வழக்கமாக பிரபலங்கள் வெளியிட்டு பாடல்கள் மக்களைச் சென்றடையும். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மூலமாக, பிரபலங்களைச் சென்றடைந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

சினிமா வட்டாரத்தில் இந்தப் படத்தின் பாடல்களும், அதை வெளியிட்ட விதமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

படத்தையும், பாடல்களையும் பற்றி
கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:

தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. தமிழில் பேர் வைத்தால்தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழைவிட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் “நெடுநல்வாடை”.

இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன்.

ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும் என்று நம்புகிறவன் நான்.

படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. படத்தின் அங்கம்தான் பாட்டு.

இந்த இலக்கணத்தை “நெடுநல்வாடை”யில் நீங்கள் காண்பீர்கள்.
கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

நன் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப்பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை “நெடுநல்வாடை”யில் செல்வகண்ணன் விவரித்துக் கொண்டே போகிறார்.

இந்தப் படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் “நெடுநல்வாடை”யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை.

தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட “நெடுநல்வாடை”யும் வெல்லும். செல்வகண்ணன் பேர் சொல்லும்.

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பாடல்கள் – வைரமுத்து
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்.

அனிதா அண்ணனை நெகிழவைத்த இளைய தளபதி

அனிதா அண்ணனை நெகிழவைத்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ariyalur anitha with her brotherநீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனால் நீட் தேர்வை நீக்குமாறும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதனிடையில் அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்தார் விஜய் என்பதை பார்த்தோம்.

பொதுவாக இதுபோல் ஒரு பிரபலம் ஒரு இடத்திற்கு சென்றால், அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

ஆனால் காவல்நிலையத்திலும் அனிதா வீட்டிற்கும் தகவல் கொடுக்காமல் திடீரென விஜய் சென்றாராம்.

இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறியதாவது…

“அனிதாவின் இறப்பு எங்களை பாதித்துவிட்டது.

ஒருநாள் காலை வழக்கம் போல் விடிந்தது. திடீரென எழுந்து பார்த்தால் விஜய் எங்கள் வீட்டிற்கு வந்தார். வாரிச்சுருட்டி எழுந்தோம்.

அதற்கு அவர் மெதுவா எழுந்திருங்க. அவசரமில்லை என்று சொன்னார். நான் அவர் உட்கார சேர் எடுக்க போனேன்.

உங்களைத்தான் பார்க்க வந்தேன். பின்பு எங்களோடு தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.

உங்க கண்ணீர் நாளை ஆனந்தக்கண்ணீராக மாறும். அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நினைதேன்.

ஆனால் நான் வந்தால் அந்த நிகழ்வின் போக்கே மாறியிருக்கும்.

எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள். அவளின் மரணம் எங்களை வெகுவாகப் பாதித்தது.

இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என தெரிகிறது.

அனிதாவும் எனக்கு தங்கைதான்

என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன்.

அதன்பின்னர் நான் பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டார்” என்று உருக்கமாக பேசினார் மணிரத்னம்.

More Articles
Follows