காண்டீபன்-மிதுனா இணையும் *ஓவியா* டீசரை வெளியிட்டார் பாக்யராஜ்

காண்டீபன்-மிதுனா இணையும் *ஓவியா* டீசரை வெளியிட்டார் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bhagyaraj launched Oviya movie teaser சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத், எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

‘இமாலயன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ‘ஓவியா’.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார்.

நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

Director Bhagyaraj launched Oviya movie teaser

Director Bhagyaraj launched Oviya movie teaser

குருவாயூரப்பனால் எடப்பாடிக்கு மட்டும் ஏற்றம்.; கிரிஷ்ணம் இசை விழாவில் பாக்யராஜ் கிண்டல்

குருவாயூரப்பனால் எடப்பாடிக்கு மட்டும் ஏற்றம்.; கிரிஷ்ணம் இசை விழாவில் பாக்யராஜ் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Edapadi Palanisamy got blessing from Guruvayurappan says Bhagyaraj in Krishnam audio launchஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று ‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். இது பற்றிய விவரம் இதோ:

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது ,

“இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

அவன் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம் தான் உள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் உள்ளது என்றார்கள்.நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன்.

அப்படி ஒரு நம்பிக்கை. பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சொன்னால் யாரும் நம்பவில்லை.

ஆனால் என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா? அதற்காகவே படமாக எடுத்து குருவாயூரப்பனின் மஹிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இப்படத்தை எடுத்து இருக்கிறேன்.” என்றார்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது ,

” இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்த ‘கிரிஷ்ணம்’ படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டது மே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.

நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான். கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக ‘கிரிஷ்ணம்’ படமும் இருக்கும் என நம்புகிறேன்.

தமிழக மக்களுக்கு சோதனை மேல் சோதனை. திருவாரூரில் இடைத் தேர்தல் இருந்தால் அங்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அது ரத்தாகிவிட்டது.

ரேசன் கார்டு உள்ளவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் என்றார்கள். அதன்பின்னர் ஐகோர்ட் எல்லாருக்கும் கொடுக்ககூடாது என கூறிவிட்டது.

மக்களுக்கு எப்பவுமே சோதனைதான் ஆனால் எடப்பாடிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்துள்ளது. அதான் எப்படியோ முதல்வராகிவிட்டார்.

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் பார்த்த அனுபவம் உண்டு. எங்கள் ஊரில் பைத்தியம் போலப் பார்க்கப் பட்ட சாயம்மா என்ற பாட்டி ஒரு நாள் குறிசொல்லும் பெண்ணாக மாறிக் குறி சொல்ல ஆரம்பித்தார்.

பலருக்கும் சரியாக இருந்தது. நாங்கள் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு வேறு ஊர் போனோம். மீண்டும் பல நாள் கழித்து அவரைப் பார்த்த போது என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது பற்றியெல்லாம் கூறினார்.

எங்களுக்கு ஆச்சரியம். என்னைப் பார்த்து நீ இன்னுமா இந்த ஊரை விட்டுப் போகவில்லை ? இங்கே இருக்காதே வெளியூர் போ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது சினிமா கனவில் இருந்தேன்.

பிறகு நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்ட போது என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ எனக்குச் சினிமாவே சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார்.

நான் சினிமா தான் என்று பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட் ,டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். எங்களுக்கு ஒரு ஒர்க்க்ஷாப் இருந்தது.

அதில் என்னைப் இது என் அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ என்று பிறகு நான் நினைத்தேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட
கிரிஷ்ணம் குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம்.

நம் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் வரவேற்போம்.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் தினேஷ்பாபு, நாயகன் அக்ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு. துளசி பழனிவேல், மற்றும் ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் செண்டை மேளம் முழங்க கதகளி நடனம்’ சிங்காரி நடனம் என நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

CM Edapadi Palanisamy got blessing from Guruvayurappan says Bhagyaraj in Krishnam audio launch

Krishnam movie audio launch

பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta stillsகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் இன்று வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி

எனவே ரஜினி ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா உள்ளிட்டோர் ரோகிணி திரையரங்கிற்குச் சென்று பேட்ட திரைப்படத்தை முதல் காட்சி பார்த்தனர்.

அதுபோல் வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஆல்பர்ட் தியேட்டரில் கார்த்திக் சுப்பராஜ் & காசி தியேட்டரில் சன் & பேட்ட குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

விஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்

விஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam posterகாட்பாடியை சேர்ந்தவர் பீடி தொழிலாளி பாண்டியனின் மகன் அஜித்குமார் (வயது 20).

விஸ்வாசம் பட ரசிகர் மன்ற காட்சி பார்க்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் பணம் தராத காரணத்தால் தன் தந்தையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதன் பின்னர் பக்கத்தில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து அஜித்குமாரை விருதம்பட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு

ரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IT companies declared holiday to Celebrate Rajinis Petta releaseசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ரஜினிக்காகவே எழுதப்பட்டது என்று நாம் அறிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் அவர் 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறார்.

உலக அரங்கில் இந்திய சினிமாவை தமிழ் சினிமாவை காட்டிய முக்கிய நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.

எனவே தான் அவருக்கு உலகளவில் தமிழே தெரியாத நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் மன்றங்கள் உள்ளது.

எனவே ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்கள் திருவிழா போல் கொண்டாடப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஏன் நாளை கூட விடுமுறை தினமோ பண்டிகை தினமோ இல்லை. இருந்தாலும் ரஜினி படம் ரிலீஸ் என்றால் அது அனைவரின் பேச்சாக இருக்கிறது.

முதல் நாள் படத்தை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஏங்குகிறார்கள்.

இதனையறிந்து பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

கபாலி படத்தின் போது நிறைய ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்தன என்பதை பார்த்தோம்.

அதன்பின்னர் காலா படம், 2.0 படம் ஆகிய படங்களின் ரிலீசின் போதும் இந்த மேஜிக் நடைபெற்றது.

தற்போது இதே மேஜிக் பேட்ட ரிலீசுக்கும் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் பெங்களுரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து டிக்கெட் எடுத்துக் கொடுத்து பேட்ட படத்தை கண்டு களியுங்கள் என சர்குலர் (அறிக்கை) வெளியிட்டுள்ளனர்.

இது எல்லாம் ரஜினி என்ற ஒரு நடிகருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

IT companies declared holiday to Celebrate Rajinis Petta release

சில கம்பெனிகள் சர்குலர் இதோ…

IT companies declared holiday to Celebrate Rajinis Petta release

இதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

இதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta movie will win everyone heart says Karthik Subbarajரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் நாளை ஜனவரி 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினி படங்களுக்கு உலகளவில் மார்க்கெட் இருப்பதால் தெலுங்கு பதிப்பிலும் நாளையே இப்படம் வெளியாகிறது.

எனவே தெலுங்கு பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்த போது பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது…

‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே தலைவரின் ரசிகர்கள்.

தலைவர் பாணியில் படத்தில் நிறைய ஆக்‌‌ஷன் இருக்கிறது. இப்படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.

சங்கராந்தி பண்டிகைக்காக இப்படம் வருவதால் அந்த பண்டிகை உற்சாகம் இதிலும் இருக்கும்.

அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான்.

ரஜினியின் பேட்ட படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.

Petta movie will win everyone heart says Karthik Subbaraj

More Articles
Follows