இருட்டு அறையில் முரட்டுக் குத்து; மீண்டும் A படத்தில் கவுதம் கார்த்தி.?

இருட்டு அறையில் முரட்டுக் குத்து; மீண்டும் A படத்தில் கவுதம் கார்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam Karthik next movie titled Iruttu Araiyil Murattu Kuthuசந்தோஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹரஹர மஹாதேவகி’.

இதில் கௌதம் கார்த்திக், நிக்கிகல்ராணி, கருணாகரன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் ட்ரைலர் முழுவதும் டபுள் மீனிங்கில் இருந்தது.

ஆனால் எல்லா தரப்பு மக்களும் இப்படத்தை பார்க்கலாம் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ள படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என பெயரிட்டு உள்ளனர்.

இதுவும் ஒரு அடல்ட் ஒன்லி படமாக இருக்குமோ? என் சந்தேகத்தை தலைப்பு ஏற்படுத்துகிறது.

சந்தோஷ் இயக்க, கௌதம் கார்த்திக் நடிக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Gautam Karthik next movie titled Iruttu Araiyil Murattu Kuthu

விஜய்சேதுபதியின் படத்தலைப்பும் திருநங்கை லுக்கும் வெளியானது

விஜய்சேதுபதியின் படத்தலைப்பும் திருநங்கை லுக்கும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Transwoman getup movie titled Super Deluxe

ஆரண்ய காண்டம்’ என்ற வித்தியாசனமான படத்தை கொடுத்திது ரசிகர்களின் ஆதரவை பெற்றாலும் அதன்பின் அடுத்த படத்தை தொடங்காமல் இருந்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பி.எஸ்.வினோத் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
‘அநீதி கதைகள்’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
தற்போது அந்த கேரக்டர் லுக்கும் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathis Transwoman getup movie titled Super Deluxe

ஏஆர்.ரஹ்மானின் வெள்ளிவிழாவை கௌரவிக்கும் ஆந்திரா அரசு

ஏஆர்.ரஹ்மானின் வெள்ளிவிழாவை கௌரவிக்கும் ஆந்திரா அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhra Govt plans Silver Jubilee celebration for AR Rahman25 ஆண்டுகளுக்கு முன்னர் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏஆர். ரஹ்மான்.

இந்தியளவில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் இவரது 25 ஆண்டு வெள்ளிவிழா இசை பயணத்தை கௌரவிக்க ஆந்திரா அரசு முடிவுசெய்துள்ளது.

அதன்படி காக்கிநாடாவில் வெள்ளி விழா நடத்த, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக, 2 கோடி ரூபாய் செலவில் மேடை அமைக்கப்பட உள்ளதாம். இந்நிகழ்ச்சி அக்டோபர் 28 அல்லது டிசம்பர் 23ல் நடைபெறும் என கூறப்படுகிறது.

இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் 3 மணி நேரம் இசை கச்சேரி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவருடன் 50 இசை கலைஞர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதற்காக ஆன்லைனில் சில போட்டிகளையும் நடத்தவிருக்கிறார்களாம்.

Andhra Govt plans Silver Jubilee celebration for AR Rahman

குரங்கு பொம்மைக்கு கூட்டமில்லையே பாரதிராஜா…- திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம்

குரங்கு பொம்மைக்கு கூட்டமில்லையே பாரதிராஜா…- திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupur Subramaniam questions BharathiRaja in Kurangu Bommai success issueநித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், குமரவேல், பிஎல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்த படம் குரங்கு பொம்மை.

அண்மையில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நல்ல படங்களை தியேட்டர்காரர்கள் ஓட விடுவதில்லை என பாரதிராஜா மற்றும் விதார்த் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாரதிராஜாவின் இந்த பேச்சுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாட்ஸ்அப் பதிவில் கூறியுள்ளதாவது…

குரங்கு பொம்மை நல்ல படம்தான். ஆனால் அதை பார்க்க தியேட்டரில் ஆளில்லையே.

ஒரு காட்சிக்கு 100 பேர் கூட படம் பார்க்க வரவில்லை. நாங்கள் என்ன செய்வது? மக்களை நல்ல படங்களை பார்க்க சொல்லுங்கள்.

ஹீரோ கத்தி வீசுவதைதான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் தியேட்டர்களையே குறை சொல்வது ஏன்?

நல்ல கதைதானே என பாரதிராஜா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தாரா?. குரங்கு பொம்மை படத்தால் எங்களுக்கு நஷ்டம்தான்” என ஆவேசமாக பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

Tirupur Subramaniam questions BharathiRaja in Kurangu Bommai success issue

செப்டம்பரில் விஷாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்

செப்டம்பரில் விஷாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thupparivaalan and Villain movies will be release in September 2017மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன்.

இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து, செப். 28ஆம் தேதி மோகன்லால், விஷால் நடித்துள்ள மலையாள படமான வில்லன் படம் வெளியாகிறது.

Thupparivaalan and Villain movies will be release in September 2017

எனக்கும் அரசியலுக்கு சம்பந்தமில்லை.. லாரன்ஸ் திடீர் அறிக்கை

எனக்கும் அரசியலுக்கு சம்பந்தமில்லை.. லாரன்ஸ் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am not interested in Politics says Raghava Lawrenceமுனி 4 படத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய சென்றார் ராகவா லாரன்ஸ்.

அப்போது நீட் விவகாரம் குறித்து அவர் சொன்ன பதிலை சில ஊடகங்கள் பாஜ கட்சிற்கு காலம்தான் பதில் சொல்லும் அவர்ர கூறியதாக செய்தியை வெளியிட்டு இருந்தனர்.

எனவே இதற்கு விளக்கம் அளித்து ஓர் கடிதம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள். பாஜக பற்றி நான் எதுவும் பேசவில்லை.

சேவையும் ஆன்மிகமும் மட்டும்தான் என பிடித்த விஷயங்கள். அரசியல் என தெரிவித்துள்ளார்.

I am not interested in Politics says Raghava Lawrence

அவரின் கடிதம் இதோ…

lawrance

More Articles
Follows