*ஓவியா* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜே சதீஸ்குமார்

*ஓவியா* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜே சதீஸ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer J Sathishkumar launched First look poster of Oviya movieகனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் ‘ஓவியா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் அவர்கள் வெளியிட்டார்.

புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார்.

நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் – சூர்யா நாராயணன்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார்.

சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

இந்த ‘ஓவியா’ திரைப்படம் அனைத்து வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளை தமிழகத்தை சேர்ந்த TS MEDIA WORKS நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Producer J Sathishkumar launched First look poster of Oviya movie

விக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ்

விக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vigneshs recent interview about his Villain role in Aarthuraதமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா பாலுமகேந்திரா வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்..

ஏன் இந்த வில்லன் வேஷம் என்று கேட்டோம்…

எனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்.

பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.

சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார்..கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன்..ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம் நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார்.

நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.

இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்…தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள்.என்பது தான்.

சேது படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்? என்று கேள்வி கேட்டோம்…

அதை நினைத்து தினமும் வருத்தப் படுவேன்…பாலாவும் நானும் ரூம் மேட்ஸ்.

பாலா இயக்கத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் மேகா சௌத்ரி

பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி. ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.

இதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா.?

நடிப்பேன்.. .நடிப்பு தானே ..சேது மாதிரி பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்” என்றார் நம்பிக்கையுடன் விக்னேஷ்.

Vigneshs recent interview about his Villain role in Aarthura

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rythivikaபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம்.

எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடித்துள்ளார்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

Kabali fame Riythvika plays Janaki amma in MGR movie

எம்.ஜி.ஆர் பட டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

எம்.ஜி.ஆர் பட டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR movie trailer launch happened in Chennaiபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார்.

எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், டாக்டர் பழனிபெரியசாமி, சத்யபாமா கல்லூரி துணைவேந்தர் லீனா மரியா ஜான்சன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துகுமார், துரைகருணா, இயக்குனர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் டிரைலரை H.V.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

MGR movie trailer launch happened in Chennai

யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont have any fear says Sivakarthikeyan at Seemaraja Trailer launchசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையைமைத்துள்ள இப்படத்தை ஆர்.டி. ராஜா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதன் விளம்பரங்கள் மற்றும் புரோமோசன் நிகழ்ச்சிகள் அனைவரும் கவர்ந்து வரும் நிலையில் இதன் டிரைலரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது…

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது.

சினிமாவில் என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன். நிறைய பிரபலமான நட்சத்திரங்கள் இந்த சினிமாவில் நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்” என பேசினார்.

I dont have any fear says Sivakarthikeyan at Seemaraja Trailer launch

தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்

தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan acted as Tamil King in Seemaraja It goes viral like Baahubali getupசிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.

சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது.

கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

சிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார், படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும் என்றார் நடன இயக்குனர் ஷோபி.

பொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்து தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.

இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி.

இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை.

அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும்.

அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன் என்றார் நடிகர் சூரி.

பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகை சிம்ரன்.

காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு.

இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார் இயக்குனர் பொன்ராம்.

இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது.

அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம்.

ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.

இந்த விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ், VFX சூப்பர்வைஸர் பிஜாய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Sivakarthikeyan acted as Tamil King in Seemaraja It goes viral like Baahubali getup

More Articles
Follows