பூபதி பாண்டியனை தொடர்ந்து அமீத் இயக்கத்தில் விமல்

பூபதி பாண்டியனை தொடர்ந்து அமீத் இயக்கத்தில் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil actor vimalதமிழில் பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூபதி பாண்டியன்.

இவர் இயக்கத்தில் விமல் நடித்துள்ள “மன்னர் வகையறா“ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து சுசீந்திரன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதனை சுசீந்திரன் உதவியாளர் சிவா இயக்க, இமான் இசையமைக்கிறார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறாராம்.

இதன்பின்னர் ராஜதந்திரம் பட இயக்குனர் அமீத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் விமல்.

இத்துடன் ஒரு சில இயக்குனர்களுடன் விமல் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயனின் நாயகி

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயனின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shaam stillsK.V. சபரீஷ், தன் “2M cinemas” சார்பில் தயாரித்து வரும் படம் கா-வியன்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பார்த்தசாரதி இயக்கி வருகிறார்.

ரோடு திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.

இதில் ஷாம் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஆத்மியா நடித்து வருகிறார்.

இவர் சிவகார்த்தியேனுடன் ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடித்தவர்.

இவர்களுடன் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் தெலுங்கு பதிப்புக்கு “வாடு ஒஸ்தாடு” என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் இறுதிக்கட்ட சூட்டிங் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதில் பெரும்பாலான காட்சிகள், அமெரிக்கா தலைநகர் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டுள்ளது.

‘கிக்’ படத்தில் சிம்பு-ஸ்ருதி பற்றிய கிண்டலுக்கு ராஜேஷ் விளக்கம்

‘கிக்’ படத்தில் சிம்பு-ஸ்ருதி பற்றிய கிண்டலுக்கு ராஜேஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu shruthihassanராஜேஷ் இயக்கத்தில் உருவான கடவுள் இருக்கான் குமாரு படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் திரையுலகை சேர்ந்த பல கலைஞர்களை கிண்டலடித்து இருந்தனர்.

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டித்த விஷயங்களை நாம் அறிந்தோம்.

மேலும் பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்த ஸ்ருதிஹாசன் மற்றும் சிம்புவின் பீப் சாங் ஆகியவற்றையும் கிண்டலடித்தனர்.

இந்நிலையில், சிம்பு மற்றும் ஸ்ருதியை காயப்படுத்தும் எந்தவித நோக்கமும் தனக்கில்லை.

அதுபோல இந்து, கிறிஸ்தவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

இது ஒரு ஜாலியான படம். அவ்வளவுதான்.” என இப்பட இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தல-தளபதி ரசிகர்கள் வழியில் தனுஷ் ரசிகர்கள்

தல-தளபதி ரசிகர்கள் வழியில் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushமுன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றியடைந்தால், 100வது நாள் விழா, வெள்ளி விழா என்றெல்லாம் கொண்டாடுவது வழக்கம்.

இப்போதெல்லாம் தியேட்டர்களில் ஓரிரு வாரங்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கிறது.

எனவே, வெள்ளி விழாவுக்கு மாற்றுவழியாக ரசிகர்கள் ஒன்றை ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

ஹிட்டான படத்தின் ரிலீஸ் தேதியை வைத்து, முதல் ஆண்டு விழா, இரண்டாம் ஆண்டு விழா என பர்த்டே பார்ட்டி போல கொண்டாட தொடங்கி விட்டார்கள்.

விஜய்யின் கத்தி படத்தை பிரபல தியேட்டர்களில் திரையிட்டு கொண்டாடினார்கள்.

அதுபோல் அஜித் ரசிகர்கள் வேதாளம் படத்தை முதல் ஆண்டு நிறைவையொட்டி வெளியிட சொல்லி தெறிக்க விட்டார்கள்.

தற்போது இவர்களை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இவ்வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஜிகே சினிமா திரையரங்கில் இரண்டு காட்சிகளை திரையிட சொல்லியுள்ளனர்.

முன்பதிவில் இந்த இருகாட்சிகளும் தற்போதே புல்லாகிவிட்டதாம்.

இன்னும் உள்ள சில தினங்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றுமுதல் அஜித்துடன் ஒரு மாசம்… அக்ஷராஹாசன் ஹாப்பி

இன்றுமுதல் அஜித்துடன் ஒரு மாசம்… அக்ஷராஹாசன் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith akshara hassanதல-57 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்குக்காக அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பல்கேரியாவில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக இதன் படப்பிடிப்பு அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றுமுதல் இப்பட சூட்டிங்கில் கலந்து கொள்கிறார் அக்ஷராஹாசன்.

இவர் ஒரு மாதம் காலம் தங்கியிருந்து நடிக்கவிருக்கிறார்.

அஜித்துடன் முதன்முறையாக நடிப்பதால் அக்ஷராஹாசன் செம ஹாப்பியாக காணப்படுகிறாராம்.

இங்கு சில பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சிவா.

அனிருத் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

‘டயர்ட் ஆனாலும் ரசிகர்களுக்காக நிப்பாரு…’ ரஜினி பற்றி தன்ஷிகா

‘டயர்ட் ஆனாலும் ரசிகர்களுக்காக நிப்பாரு…’ ரஜினி பற்றி தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanshikaபேராண்மை படத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் நடித்தவர் தன்ஷிகா.

இவரது நடிப்பில் காலக்கூத்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில்…

“என் நடிப்பை வெகுவாக பாராட்டினார் ரஜினி சார்.

கபாலிக்கு பிறகு எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார். அதுபோலவே நடந்து வருகிறது.

ரசிகர்களை ரஜினி சார் உயர்வாக நினைக்கிறாரு.

ரசிகர்கள்தான் நம்ம சொத்து அவங்க இல்லேன்னா நாம இல்ல என்பார்.

சூட்டிங் முடித்துவிட்டு எவ்வளவு டயர்டா இருந்தாலும், ரசிகர்களுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து நிப்பாரு.

நம்மள பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வர்றாங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொல்வார்.

இதுபோல நிறைய விஷயங்கள அவருக்கு இருந்து கத்துகிட்டேன். இப்பவும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்”

என்றார் கபாலி மகள் ‘யோகி’.

More Articles
Follows