நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali selvaகபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம்.

இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது.

இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா. இது குறித்து அவர் பேசுகையில் , ”என்னை போன்ற கோடான கோடி தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி சாரின் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனை ‘வாயேஜர்’ விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிக பெரியது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் இவ்வளவு ஆண்டுகளாக கடந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் ரஜினி சாரை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும், ‘வாயேஜர்’ விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும் ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும்.

ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் என்கிறார் கபாலி செல்வா.

தரமணி படத்தில் நடிக்க தயங்கினேன்… தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தரமணி படத்தில் நடிக்க தயங்கினேன்… தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JS Sathish Kumarதமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார்.

இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது.

இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான்.

இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் படத்தில் ஜேஎஸ்கே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

படத்தில் காவல் துறை கமிஷனராக வருகிறாரே… அவர் ஜேஎஸ்கேதான்.

ஒரு புதிய நடிகர் என்று யாருமே சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கச்சிதமாக நடித்திருந்தார். ஒரு காவல் அதிகாரியின் உடல் மொழி, உச்சரிப்பு அத்தனையும் கச்சிதமாக வெளிப்படுத்தி, ‘யார் இந்த நடிகர்?’ எனக் கேட்க வைத்திருந்தார்.

தனது நடிப்பு அனுபவம் குறித்து ஜேஎஸ்கே கூறுகையில், “இந்தக் கேரக்டருக்கு முதலில் நிறைய நடிகர்களை வரவழைத்துப் பார்த்தார் ராம். அவருக்கு திருப்தியில்லை.

கடைசியில் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். ‘எனக்கு புதுமுகமா இருந்தா இன்னும் பெட்டர்… தெரிந்த முகமாக இருந்தால் அவர் மீது கதை செல்வதாக பார்வையாளர்கள் யூகிப்பார்கள். புதுமுகம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை’ என்றார்.

இருந்தாலும் தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டேன். இந்தப் பாத்திரத்துக்காக நான் எந்த முன்தயாரிப்பும் செய்யவில்லை. யாரைப் பார்த்தும் ஒத்திகை செய்யவில்லை” என்றார்.

பிக்பாஸில் ஓவியா தற்கொலை முயற்சி; சம்மன் அனுப்பிய போலீஸ்

பிக்பாஸில் ஓவியா தற்கொலை முயற்சி; சம்மன் அனுப்பிய போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress oviyaகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதமாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.

ஆனால் அதில் கலந்துக் கொண்ட ஆரவ் மீது காதல். பின்னர் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என பல அதிரடி திருப்பங்களால் அதிலிருந்து வெளியேறினார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என ஓவியாவின் மேனேஜர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் ஈகோவும் தரமணியின் தரமும்… ஆச்சரியத்தில் ஆண்ட்ரியா

ஆண்களின் ஈகோவும் தரமணியின் தரமும்… ஆச்சரியத்தில் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress andreaராம் இயக்கத்தில் ஜேஎஸ்கே தயாரிப்பில் நேற்று வெளியான படம் தரமணி.

இப்படத்தில் ஆண்ட்ரியாவின் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது….

‘இந்த படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அப்படியொரு தைரியமான கேரக்டர்.

என் கேரக்டருக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

என் பாடி லாங்குவேஜ் (உடல் மொழி) ஐ யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த டைரக்டர் ராம் முழு சுதந்திரம் கொடுத்தார்.

ஆண்களை சார்ந்து வாழும் காலம் தற்போது மாறிவருகிறது.

தங்களின் தேவையை பெண்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமமானவர்கள் பெண்கள் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

எனவே ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டேன்; கூப்பிடாதீங்க.. மனம் திறந்த மலர் டீச்சர்

அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டேன்; கூப்பிடாதீங்க.. மனம் திறந்த மலர் டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sai pallaviஒரு சில நடிகர், நடிகைகளுக்கு மட்டும்தான் முதல் படமே எதிர்பாராத வெற்றியையும் பாராட்டையும் பெற்றுத்தரும்.

அந்த வரிசையில் சாய்பல்லவிக்கு அமைந்த படம்தான் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் ஹிட்டடித்த பிரேமம்.

இதனையடுத்து இவர் தெலுங்கில் பானுமதி கேரக்டரில் அறிமுகமான ஃபிடா படமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மலையாள சினிமாவுக்கு இவர் மலர் டீச்சர் என்றால், தெலுங்கு சினிமாவுக்கு இவர் பானுமதியாகிவிட்டார்.

இவர் தற்போது நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷாப்பிங் மால், நகைக்கடை திறப்பு விழா உள்ளிட்ட பல விழாவுக்கு இவரை அழைக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாது…

’கடை திறப்பு விழா போன்ற விழாக்களில் கலந்துகொள்ள விருப்பமில்லை.

அதற்காக என்னை யாரும் அழைக்க வேண்டாம். அனுகவும் வேண்டாம்.

தொண்டு நிறுவனங்கள் திறப்பு விழாக்கள் என்றால் இலவசமாகவே கலந்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில்லை; கமல் மனு

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில்லை; கமல் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமல் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்…
பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை.

இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

More Articles
Follows