கிரிக்கெட்டிலும் 2.0 படம்… ரஜினி நாட்-அவுட்; அக்‌ஷய் அவுட்

கிரிக்கெட்டிலும் 2.0 படம்… ரஜினி நாட்-அவுட்; அக்‌ஷய் அவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie promos in full swing even at Cricket match stadiumரஜினி, ஷங்கர், லைக்கா கூட்டணியில் உருவாகியுள்ள படம் 2.0,

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் புரோமோசனை வியக்கும் அளவில் செய்து வருகின்றனர் படத் தயாரிப்பு குழுவினர்.

ஹாலிவுட் ராட்சத பலூன், துபாய் நாட்டில் ஸ்கை டைவிங் என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் இந்த விளம்பர யுக்தியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதியபோது, அதன் ஸ்கோர் போர்ட்டில் இது தொடர்பான விளம்பரங்கள் வருகின்றன.

அதிலும் ஒரு வீர்ர் அவுட் ஆனால் அக்‌ஷய் படத்தை போட்டுக் காட்டுவதும் நாட்அவுட் என்றால் ரஜினியின் படத்தை போட்டும் காட்டுகின்றனர்.

மேலும் Decision Pending இடத்தில் ரஜினியும் வில்லனும் மோதிக் கொள்வது போல் உள்ள டிசைனை போட்டுக் காட்டுகின்றனர்.

2point0 movie promos in full swing even at Cricket match stadium

2point0 promo in cricket

 

கமல்ஹாசனின் அரசியல் டார்கெட் டெல்லி.? கஸ்தூரி கண்டுபிடிப்பு

கமல்ஹாசனின் அரசியல் டார்கெட் டெல்லி.? கஸ்தூரி கண்டுபிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal kasthuriஉலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் நவம்பர் 7ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்று திரையுலக பிரபலங்கள் பலரும் கமலை நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் அன்றைய தினத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்தித்து பேசினார் என்பதை பார்த்தோம்.

அப்போது தமிழக பாரம்பரிய உடையாக வேஷ்டி, சட்டை அணியாமல் வட இந்தியர் போல பதான்சூட் அணிந்திருந்தார்.

அப்போது அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி, தன் ட்விட்டர் பக்கத்தில் கமலை பற்றி பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது… ஒரு வேளை கமலின் குறி டெல்லியா? எனக் கேட்டுள்ளார்.

kasturi shankar‏Verified account @KasthuriShankar
Why did #Kamal opt for this look over dhoti? Is there a message here? தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை delhiதான் குறியோ?

ஆண்டவர் என்ற செல்லப்பெயருக்கு தகுந்தாற் போல் அமைந்தது பிறந்தநாள் படலம். திரளாக திரையுலகினர் ; திருப்பதி போல வரிசையில் வாழ்த்தினோம்.

எடுத்து சென்றேன் வெறுங்கை! கொடுத்து வந்தேன் நம்பிக்கை ! #HBDKamalHaasan #maiyamwhistle #virtuouscycle #Theditheerpomvaa

என 3 பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

Kamal may target Delhi Central politics says Kasthuri

மெர்சலை அடுத்து பாஜக-வலையில் தானே சிக்கும் சிம்பு.?

மெர்சலை அடுத்து பாஜக-வலையில் தானே சிக்கும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu latestமீடியா மார்ஷல் தயாரிப்பில் எஸ். அருள் இயக்கியுள்ள படம் தட்டுறோம் தூக்றோம்.

இப்படத்தில் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள Demontization Anthem என்ற பாடல் இணையத்தில் வெளியானது.

சிம்பு இப்பாடலை பாட பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வரிகள் அனைத்தும் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டத்தை எதிர்த்தே உள்ளது.

அதில் உள்ள சில வரிகள்…

காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்க ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….

என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

மல மலயா மோசம் செஞ்ச முமூதேவிங்க பாரின் போயாச்சு (மல்லையா கார்டூன் வருகிறது)

இதனையடுத்து NO CASH NO CASH என்ற கோரஸ் வருகிறது.

ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமின்னு நீங்க நினைச்சா?…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா? என்ற வரிகள் வருகிறது.

(இந்த வரிகள் வரும்போது பிரதமர் மோடி படம் காட்டப்படுகிறது)

இதனிடையில் நோ கேஷ் (NO CASH NO CASH) என்ற வரிகள் வருகிறது. ஒரு வேளை பழைய காலம் போல பண்டமாற்று முறை வைத்துக் கொள்ளுவோமா? எனவும் பாடல் வரிகள் உள்ளது.

மேலும் இறுதியாக ஒரே கன்ப்யூசன். என்ன வாழ்க்கைடா இது? என புலம்வுது போல் சிம்பு முடிப்பதாக பாடல் உள்ளது.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விஜய் பேசியதால், அந்த படம் பாஜக.விடம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.

தற்போது சிம்பு பாடிய பாடல் மோடியின் திட்டத்தை எதிர்ப்பது போல் உள்ளதால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரப்போகிறதோ?

Simbu new song Demonetization Anthem may create problems

Watch song here…

 

A காட்சிகள்; ஏமாலி இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்தாரா?

A காட்சிகள்; ஏமாலி இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress athulyaகாதல் கண்கட்டுதே என்ற ஒரே படத்தில் நடித்து தமிழக இளைஞர்களை கட்டிப் போட்டவர் அதுல்யா.

முதல் படத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக வந்து அசத்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து ஏமாலி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இதில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் பெற்ற வரவேற்பையே இதற்கு உதாராணமாக சொல்லலாம்.

இதன் டீசரில் படு கிளாமராகவும் அதே சமயம், புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இதை சில ரசிகர்கள் ரசித்தாலும், என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா என ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த காட்சிகள் டீசரில் பார்க்கத்தான் இப்படி இருக்கும். படத்திற்கு தேவையான காட்சிகள்தான் இவை. இருந்தபோதிலும் ஆபாசம் இல்லாமல் படத்தில் காட்ட சொல்லியிருப்பதாக இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

V.Z. துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஏமாலி படத்தில் சமுத்திரக்கனி, பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

2018ல் சூர்யா உடன் இணையும் பிரபுதேவா

2018ல் சூர்யா உடன் இணையும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and prabhu devaயங் மங் சங்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் கர்ணன் இயக்கும் ‘குலேபாகவாலி (Gulebakavali)’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதாம்.

எனவே போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்துவிட்டு 2018 பொங்கல் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதே பொங்கல் தினத்தில்தான் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா, விஷால் நடித்துள்ள இரும்புத் திரை ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் தசாவதாரத்தை மிஞ்சும் 2.0 கேரக்டர்கள்

கமல்ஹாசனின் தசாவதாரத்தை மிஞ்சும் 2.0 கேரக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In 2point0 movie Akshaykumar plays 12 get upsலைக்கா நிறுவனத்தின் மிகப்பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் உருவாக்கியுள்ள படம் 2.0.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் புரொஃபஸர் வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என இருவேடங்களில் ரஜினி நடித்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்‌ஷய்குமார், கிட்டதட்ட பல்வேறுவிதமான 12 கெட்-அப்களில் வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே அதற்கு வித்தியாசமான யுக்திகளை இயக்குனர் ஷங்கரும் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டியும் செய்துள்ளார்களாம்.

கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களை ஏற்றிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

In 2point0 movie Akshaykumar plays 12 get ups

2point0 movie akshay

More Articles
Follows