விஜய் படத்தலைப்புடன் 2.0 படத்தை முடித்த டைரக்டர் ஷங்கர்

விஜய் படத்தலைப்புடன் 2.0 படத்தை முடித்த டைரக்டர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and 2 point 0ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் பல கேரக்டர்களில் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கியிருந்தார் ஷங்கர்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு எந்த அளவிலும் சளைத்ததில்லை என தன் திறமையை காட்டியுள்ளார் ஷங்கர்.

படத்தின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படம் முடியும் தருவாயில் ஷங்கர் பெயர் இடம் பெறும். அதனை அடுத்து இந்திரலோகத்து சுந்தரியே என்ற பாடல் காட்சி இருக்கும்.

அப்போது சிட்டி ரஜினி, நிலா எமி இருவருக்கும் டூயட் பாடல் இருக்கும்.

அதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பு காதலுக்கு மரியாதை? என எமி கேட்பது ஒரு டயலாக் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 2.0 படம் பார்க்க விடுமுறையும் டிக்கெட்டும் கொடுத்த கம்பெனி

ரஜினியின் 2.0 படம் பார்க்க விடுமுறையும் டிக்கெட்டும் கொடுத்த கம்பெனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Coimbatore Pvt Company declared leave for 2pointO releaseரஜினிகாந்த், ஷங்கர், ஏஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

பிரபல லைகா நிறுவனம் இப்படத்தை ரூ. 543 கோடியில் உருவாக்கியுள்ளது.

இதை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளார் ஷங்கர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்று தன் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கூடவே படத்தை கண்டுகளிக்க டிக்கெட் கட்டணத்தையும் தாங்களே செலவு செய்வதாக அறிவித்துள்ளது.

2.0 படம் உலக சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறவேண்டும் எனவும், ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நாளை முழு தினமும் 2.0 கொண்டாட்டம் தான் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Coimbatore Pvt Company declared leave for 2pointO release

Coimbatore company leave for 2pointO release

தயாரிப்பாளருக்கு ராயல்டி இல்லையா? இளையராஜாவிடம் கே.ராஜன் கேள்வி

தயாரிப்பாளருக்கு ராயல்டி இல்லையா? இளையராஜாவிடம் கே.ராஜன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will You give Song Royalty to producer K Rajan asks Ilayarajaஇசையால் தமிழ் சினிமாவை நிரப்பிக்கொண்டிருக்கும் இசைஞானி அவர்களுக்கும்… மற்ற இசைக்கலைஞர்களுக்கும். வணக்கம்!

தமிழ் சினிமாவின் நலிந்த, போட்ட பணத்தை திரும்ப மீட்டெடுக்க முடியாது தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக இந்தக் கடிதம்.

உங்கள் மீதும்… தங்களின் இசையின் மீதும் மிகப்பெரும் பற்று கொண்டவன். பல நேர உணவாகவும்.. இறந்து போகாமல் காத்து வைத்திருக்கும் மருந்தாகவும் தங்களின் இசையை மதிக்கிறோம்.

ஆதலின் இனி நான் வைக்கப் போகும் கோரிக்கைகளினால் உம் இசையின் அருமை தெரியாதவன் என்றோ … மரியாதை அற்றவனென்றோ எண்ணிவிட வேண்டாம்.

இது உரிமைப் பிரச்சனை. அப்பன் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்லுவாங்களேஅந்த மாதிரி ஒரு சொத்துத் தகராறுன்னு வச்சுக்கங்களேன்..

ஒரு படத்தின் இசை உரிமை (ராயல்டி) என்பது யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஒரு உயிர் உருவாக தந்தையும் தாயும் காரணம் போல் இங்கு ஒரு சினிமாவின் பாடல் உருவாக இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் காரணம் இல்லையா?

இசையமைப்பாளர் தாயாக இருந்தால் அந்த பாடல் உருவாக பணம் தந்து உருவாக்கியவர் தந்தையல்லவா??

அதெப்படி ஒரு பாடலின் ராயல்டி என்பது இசையமைப்பாளரை மட்டும் சென்றடைகிறது?

தயாரிப்பாளருக்கும் கிடைத்திருக்க வேண்டுமே?

இத்தனை நாள் எங்கே போனீர்கள்?? நான் வழக்கு தொடுத்து போராடிப் பெற்ற பின் பங்கு பிரிக்க வந்து நிற்கிறீர்களா? என்ற கேள்வி உங்கள் பக்கமிருந்து வீசப்படக்கூடும்.

ஆம். உண்மைதான். இந்த அப்பாவித் தயாரிப்பாளர்களுக்கு வெறுமனே பணம் போட மட்டும் தெரிகிறது.

எங்கெங்கு என்னென்ன ரைட்ஸ் இருக்கு? அதன் விலை என்ன? எப்படி அதை காசாக்குவது எனத் தெரியாமல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தோற்றால் வெறுங்கையோடு ஊருக்குத் திரும்ப மட்டுமே தெரிந்திருக்கிறது…

ஆனால் இசைஞானி நீங்கள் உங்கள் உரிமையைப் போராடி பெற்றுள்ளீர்கள். மற்றவர்கள் போல் காசாசையினால் இதைச் செய்தீர்கள் என்று சொல்ல நான் முட்டாள் அல்ல.

இது உரிமை. நம் உழைப்பை எவனோ சுரண்டி காசாக்கும் ஊழலுக்கான முடிவு. ஆனால் இதில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளதே.

அந்தக் தொகையை யாரிடம் எப்படி பெறுவது?

இசையமைப்பாளர் ராயல்டி பெற்று தயாரிப்பாளருக்குத் தரவேண்டுமா?? அல்லது தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக ராயல்டி பெறும் வசதி இருக்கிறதா?? இல்லை… இசையமைப்பாளர்களுக்கு மட்டும்தானா??

எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?? ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்ற கேள்விகளை கேட்க வேண்டும்… யாரிடம் கேட்பது எனத் தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன்…

எங்களுக்கும் சேர வேண்டிய ராயல்டியை நீங்கள் தனியாகப் பெற்றிருப்பதால் உங்களிடம் கேட்கிறேன்…

ஒரு பாடல்.. பின்னணி இசை இப்படி எல்லாம் உருவாகக் காரணமான பணத்தை முழுமையாக நாங்கள் செலுத்துகிறோம்.

உணவு.. போக்குவரத்து செலவு… பாடகர்கள்… தங்கும் செலவு.. இசையமைக்க ஆகும் செலவு… தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு தயாரிப்பாளர்கள் நாங்கள் செலவு செய்கிறோமே… எங்களுக்கு ஏன் அந்த ராயல்டி உரிமை இல்லை??

இசை உங்கள் சிந்தனையால் நெய்யப்பட்ட ஒன்று என்றாலும்… அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் எல்லா தளத்தையும் நாங்கள்தானே உருவாக்கித் தந்தோம்?? பின் எப்படி எங்களுக்கு இதில் உரிமையில்லை…?

நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளும் ஆல்பங்களுக்கு… பக்திப் பாடல்களுக்கு நாங்கள் கேட்கவில்லை… எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது??

அய்யா.. இதில் நீங்கள் எனச் சொன்னது தனிப்பட்ட இசைஞானியை சொல்லவில்லை… ஒட்டுமொத்த இசையமைப்பாளர்களையும் குறித்தது அது.

ஆனால் நீங்கள் உங்களுக்கான உரிமையைப் பெறும் அதேசமயத்தில் தயாரிப்பாளர்களுக்கான உரிமையையும் சுட்டிக்காட்டி பெற்றிருக்கலாமே அய்யா.

தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டி உண்டு என்ற சட்டத் தீர்வை பெற்றுத் தந்திருந்தால் நீங்கள் பெறப்போகும் ராயல்டியால் எங்கள் மனமும் வயிறும் குளிர்ந்திருக்குமே.

இப்போதாவது எங்களுக்கு அந்த உரிமையை பங்கிட்டுத்தர வாதாடுங்கள்.. நாங்களும் உடன் சேர்கிறோம். அல்லது எப்படிப் பெறுவது என்ற வழிகாட்டலையாவது முன்னின்று செய்யலாமே??

அல்லது தாங்கள் பெறும் ராயல்டியில் குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு என் மூலம் தரப்படும்… அல்லது அந்தந்த இசையமைப்பாளர்கள் தருவார்கள் என அறிவிக்கலாமே??

இதில் ஏதாவதொன்றை இசைஞானியிடமிருந்து பதிலாகப் பெற காத்திருக்கிறேன்.

நலிந்த தயாரிப்பாளர்களின் நலத்தை நீங்களும் விரும்புவீர்கள் என்ற ஆசையில்….

இவண்
கே. ராஜன்
தலைவர்,
தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் குழு

Will You give Song Royalty to producer K Rajan asks Ilayaraja

ரஜினியின் 2.0 முன்னோட்டம்: இப்படத்தை கட்டாயம் பார்க்க இதோ காரணங்கள்

ரஜினியின் 2.0 முன்னோட்டம்: இப்படத்தை கட்டாயம் பார்க்க இதோ காரணங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths 2pointO movie previewலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ரூ. 550 கோடியில் தயாரித்துள்ள படம் `2.0′.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் தயாராகவில்லை.

இதில் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடித்துள்ளார். அவரின் வேடம் உலக சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுடன் ஏமி ஜாக்சன், சுதன்சு பாண்டே, கலாபவன் ஷாஜான், ரியாஸ் கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை படமாக்கும்போதே இதை 3டியில் படமாக்கியுள்ளார் ஷங்கர். இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் 4 பாடல்கள் உள்ளன.

இதில் இந்திரலோகத்து சுந்தரி பாடலுக்கு மட்டும் 20 கோடி வரை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 6600 தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

மும்பையில் இந்த படத்தின் டிக்கெட் 1000 முதல் 1500 வரை விற்கப்படுகிறதாம். சென்னையிலும் ஒரு சில தியேட்டர்களில் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கிட்டதட்ட 4 ஆண்டுகள் இப்படத்தின் பணிகளில் ஷங்கர் மூழ்கியிருந்தார். அதற்குள் ரஜினி 3 படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

இந்த உலகத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்கு மட்டுமில்லை என்ற கருத்தை இதில் வலியுறுத்தியுள்ளார் ஷங்கர்.

செல்போன் கதிர் வீச்சுகளால் பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்தை இது உணர்த்தும் என கூறப்படுகிறது.

இதனால் செல்போன் ஆப்ரேட்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறு தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் 3 வேடங்களில் ரஜினி நடித்துள்ளார். மேலும் ஒரு சிறப்பு தோற்றமும் உள்ளது. அது இதுவரை சஸ்பென்ஸாக உள்ளது.

கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக படத்தின் இடைவேளைக்கு பிறகு முழுவதுமே க்ளைமாக்ஸ் தானாம். கிட்டதட்ட 1 மணி நேரம் கிளைமாக்ஸ் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி, பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை – டி.முத்துராஜ், சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு – சுபாஸ்கரன், துணை இயக்குநர் – முகமது யூனஸ் இஸ்மாயில்,

நாளை விமர்சனத்துடன் சந்திப்போம்…

Rajinikanths 2pointO movie preview

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் மஹத்-யாஷிகா ஜோடி

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் மஹத்-யாஷிகா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahat and Yaashika team up for Bharathan Pictures Production No 2இந்தியாவின் பெறும் மாநகராட்சியில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையின் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு இன்றைய காலத்திற்கேற்ப கமர்ஷியல் கதையம்சத்தில் அரசு அலர்ச்சிய போக்கையும் அழமான சமுக கருத்தையும் கெண்டு உருவாகிறது “பரதன் பிக்சர்ஸ் புரொடக்சன் நம்பர் 2”.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட Horror – Suspense Thriller உருவாகும் இப்படத்தின் படப்பூஜை இன்று பிரசாத் லேப்பில் இனிதே நடைபெற்றது.

பரதன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பரதன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர்கள் மேக்வென் (மகேஷ் – வெங்கட்) இயக்குகிறார்கள்.

மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும் நடிகை யாஷிகா நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் உருவாகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Mahat and Yaashika team up for Bharathan Pictures Production No 2

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்குனர்கள் – மேக்வென் (மகேஷ் – வெங்கட்)
தயாரிப்பு – பரதன் (பரதன் பிக்சர்ஸ்)
இசை – தமன்
ஒளிப்பதிவு – பிரசன்னா குமார்
கலை – கிராபோர்ட்
படத்தொகுப்பு – பாபு, பிரீத்தி
மக்கள் தொடர்பு – நிகில்

Bharathan Pictures Production No2 Movie Pooja stills (15)

தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்

தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director AR Murugadoss says he wont ask apologise in Sarkarவிஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களையும் அவர்களின் ஆட்சி முறையையும் கடுமையாக விமர்சித்திருந்தார் டைரக்டர் முருகதாஸ்.

இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சென்சாருக்கு மீண்டும் அந்த அனுப்பி அந்த காட்சிகளை நீக்கிவிட்டு பின்னர் திரையிட்டனர்.

இதனிடையில் இவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன. இதனால் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் மன்ன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இனி இயக்கும் படங்களில் அரசின் நல்ல திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் முருகதாஸை கைது செய்ய 2 வாரங்களுக்கு தடையும் விதித்துள்ளது நீதிமன்றம்.

விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியவர் முருகதாஸ்.

அந்த படத்தில் தன் நாயகன் ஒரு பன்ச் டயலாக்கை அடிக்கடி சொல்வதாக காட்சிகளை வைத்திருந்தார்.

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. தற்போது அந்த வார்த்தையை நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார் முருகதாஸ்.

Director AR Murugadoss says he wont ask apologise in Sarkar

More Articles
Follows