2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்காக சத்யம் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு

2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்காக சத்யம் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 trailerநாளை நவம்பர் 3ஆம் தேதி ரஜினியின் 2.0 பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ரூ. 500 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி வாங்கியுள்ளதால் இந்த நிகழ்ச்சியை நாளை காலை 10 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர்.

சத்யம் தியேட்டரில் இந்த டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், லைகா சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்பிரபலங்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ரஜினி மற்றும் அக்சய் ஆகியோருடன் பிரபலங்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாம்.

இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டு உள்ளதால் எவரும் அனுமதி அட்டை (என்ட்ரி பாஸ்) இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள தியேட்டர்களில் காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaa release date posterநடிகர், பாடகர், பாடலாசிரியர் என வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

எஸ்கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இவர் தயாரித்துள்ள இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடிக்க, அவரது அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இவரது மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ளார்.

திபு நிணன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இப்படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தேதியை மட்டும் பின்னர் அறிவிக்கவுள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans next movie Kanaa release date updates

கொல்லத்தில் உச்சத்தில் நிற்கும் 175 அடி உயர விஜய்; அச்சத்தில் நடிகர்கள்!

கொல்லத்தில் உச்சத்தில் நிற்கும் 175 அடி உயர விஜய்; அச்சத்தில் நடிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans Sarkar Celebrations at Kollam Keralaதமிழக விஜய் ரசிகர்கள் பாவம் என்றே சொல்லலாம். அவர்களை ஓவர் டேக் செய்யும் வகையில் கேரளா விஜய் ரசிகர்கள் அசத்தி வருகிறார்கள்.

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டும் 300க்கும் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகிறது.

210 தியேட்டர்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் விஜய்யின் 175 அடி உயர ஒரு கட் அவுட் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இன்று மாலை அதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

விஜய்யின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் இப்படி புதுமையாக எதையாவது செய்து வருவதால் மலையாள நடிகர்களே அச்சத்தில் இருக்கிறார்களாம்.

Vijay fans Sarkar Celebrations at Kollam Kerala

kollam vijay sarkar cutout

மித்ரன் இயக்கத்தில் இணையும் சிவகார்த்திகேயன்-அர்ஜூன்

மித்ரன் இயக்கத்தில் இணையும் சிவகார்த்திகேயன்-அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun sivakarthikeyanராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனை முடித்து விட்டு ரவிக்குமார் இயக்கவுள்ள சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார்

இதன் பின்னர் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இதில் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்திற்கு எடிட்டராக ரூபன், ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்ற உள்ளனர்.

24 AM Studios தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING : சர்கார் சர்ச்சை; எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ்

BREAKING : சர்கார் சர்ச்சை; எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhagyarajமுருகதாஸ் இயக்கிய சர்கார் பட கதை திருட்டு விவகாரம் நாம் அறிந்த ஒன்றுதான்.

அந்த கதை வருண் என்பவருக்கு சொந்தமானது என எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் உறுதியளிக்க இது சர்ச்சையானது.

எனவே விஜய் ரசிகர்கள் பாக்யராஜை விமர்ச்சிக்க தொடங்கினர்.

இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.

இறுதியாக வருண் உடன் முருகதாஸ் சமரசம் செய்துக் கொண்டார்.

சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிறகு இன்று தன் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும் இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.

இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான் நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன்.

எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட விரும்பவில்லை.” இவ்வாறு இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கை தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.

சூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி

சூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and fahadh faasilசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியவர் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார்.

இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் பஹத் பாசில் கேரக்டர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.

தற்போது பஹத் பாசில் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் பட சூட்டிங் சமயத்தில் தனக்கான காட்சிகள் இல்லை என்றாலும் பஹத் பாசிலின் நடிப்பை பார்ப்பதற்காகவே ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் இந்த மக்கள் செல்வன்.

More Articles
Follows