தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்

தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth in darbarபண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடை பலகாரங்கள் இவற்றுடன் முக்கிய பங்கு வகிப்பது பண்டிகை அன்று வெளியாகும் தங்களுடைய அபிமான நட்சத்திரங்கள் நடித்த படத்தைப் பார்ப்பது தான். இந்த ஆர்வம் கூலி தொழிலாளிகள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். தங்களின் நட்சத்திரங்களுக்காக உயரமான கட்-அவுட் வைத்து பாலபிஷேகம் செய்வது, இனிப்புகள் வழங்குவது, முதல் நாள் முதல் கட்சிகளைப் பார்த்து விடுவது, அதிலும் சிலர் தங்களது சொந்த செலவில் தங்களது குடும்பம் தவிர்த்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு டிக்கெட் எடுத்து அவர்களைகளையும் அழைத்துச் செல்வார்கள். இப்படி திரைப்பட வெளியீட்டை அவரவர் வசதிகளுக்கேற்பத் திருவிழாவாகக் கொண்டாடுவர்வர்கள்.

அதன்படி தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை ’18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி தனது நிறுவனத்திலுள்ள அனைவருடனும் காணவுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஒவ்வொரு முறை தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் எனக்கு திருவிழா போல தான் இருக்கும். ஆனால், இந்த முறை வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை வித்தியாசனமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதற்காக எனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்ல விருக்கிறேன். ஆகையால், நாளை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

இவ்வாறு 18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி கூறினார். மற்றும் இவர் தயாரிப்பில், சந்தானம் மற்றும் யோகிபாபு காமெடி சரவெடியில் கலக்க உள்ள டகால்டி திரைப்படம், இம்மாதம் திரைக்கு வர உள்ளது.

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

The U-19- Basketball boys team of Velammal Main School, Mogappair campus won the trophy and gold medals as they emerged victorious in the finals by defeating SDAT Thanjavur team with a score of 53-29 in the 37th Bharathiyar Day Games 2019-20 at PeriyUniversity, Salem Organised by the Government of School Education, Tamil Nadu held between 5th January and 7th January 2020. The team has emerged victorious among 35 teams and has bagged gold medal for the 4th year.

“தர்பார்” திரைப்படத்துடன் வெளியிடப்படும் “சைக்கோ” பட டிரெய்லர் !

“தர்பார்” திரைப்படத்துடன் வெளியிடப்படும் “சைக்கோ” பட டிரெய்லர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Psycho trailerஉணர்வை நம்முள் கடத்தும், ஆத்மாவை உள்ளிழுத்து கொள்ளும் பாடல்களில் மெலடிக்கு எப்போதும் முதல் இடம் இருக்கும். இப்போது இணையம் முழுதும், யூடுயூப் முதற்கொண்டு சைக்கோ படத்தின் “நீங்க முடியுமா” பாடல் தான் எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான “உன்ன நினைச்சு” பாடல் ரசிகர்களின் விருப்பங்களை அள்ளிய நிலையில், இப்போது சித் ஶ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் உயிரை உருக்கும் இந்த மெலோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது….

பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி விட்டது. சிம்பொனி இசைத்துணுக்குகள் கேட்டு மயங்கிப்போனேன் அதிலும் அதில் வரும் வயலின் இசை என்னை அடிமையாக்கிவிட்டது. சித் ஶ்ரீராமின் குரல் இப்பாடலுக்கு பெரும்பலம் தந்திருக்கிறது. மேலும் இப்பாடலுக்கு வரிகள் தந்திருக்கும் கபிலன் வைரமுத்து வெகு திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாடலில் வரும் “நீ தெய்வம் தேடும் சிலையோ” எனும் ஒரு வரி போதும் அவரது மேதமைக்கு சான்று கூற. இப்பாடல் விஷுவலாக இன்னும் பல படிகள் மேலே இருக்கும். உணர்வின் உன்னத நிலைக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் என்பது உறுதி என்றார்.

ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இன்று 08.01.2020 உதயநிதி ஸ்டாலின் “சைக்கோ” படத்தின் டிரெய்லரை இணையத்தில் வெளியிடுகிறார்.
மேலும் எங்கள் மொத்த படக்குழுவும் உற்சாகம் கொள்ளும் வகையில் “தர்பார்” படத்தின் திரையிடலோடு “சைக்கோ” படத்தின் இதே டிரெய்லரும் இணைந்து வெளியாகிறது. பாடல், டீஸர் என ரசிகர்கள் “சைக்கோ” படத்தின் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகிறார்கள். வரும் 2020 ஜனவரி 24 அன்று “சைக்கோ” படத்தை திரைக்கு கொண்டுவருகிறோம் ரசிகர்கள் நிச்சயம் படத்தையும் கொண்டாடுவார்கள் என்றார்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 2020 ஜனவரி 24 அன்று படம் வெளியாகிறது.

Trailer Link : https://www.youtube.com/watch?v=SDZCXPBYHY0

இரண்டாவது படத்திலேயே அப்பா விக்ரமுடன் இணையும் துருவ்

இரண்டாவது படத்திலேயே அப்பா விக்ரமுடன் இணையும் துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruv and vikramஆதித்ய வர்மா படம் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் துருவ்வின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

ஏ சர்ட்டிபிகேட் இந்த படம் இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்றாலும் தாய்மார்களை கவரவில்லை.

எனவே தனது 2வது படத்தை கவனமுடன் தேர்வு செய்யவிருக்கிறாராம் துருவ்.

இந்த நிலையில் தனது 2வது படத்திலேயே இவரின் தந்தை விக்ரமுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பா மகன் இருவரையும் கவர இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

Vikram and his son Dhruv team up for new project

‘தர்பார்’ வெற்றியடைய வாழ்த்தி ரஜினியுடன் மோதும் அல்லு அர்ஜூன்

‘தர்பார்’ வெற்றியடைய வாழ்த்தி ரஜினியுடன் மோதும் அல்லு அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini sir is my inspiration my role model says Allu Arjunநாளை 9ஆம் தேதி ரஜினியின் தர்பார் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதே நாளில்தான் (ஓரிரு நாட்கள் கழித்து) அல்லு அர்ஜூன் நடித்துள்ள Ala Vaikunthapurramuloo படமும் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட ஹீரோ அல்லு அர்ஜூன் தர்பார் படம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது… ரஜினிகாந்த் சார் எனக்கு ரோல் மாடல், ஒரு இன்ஸ்பிரேஷன்.

அவர் நடித்துள்ள தர்பார் ரிலீஸ் ஆகுது. என்னுடைய விருப்பமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

தெலுங்கிலும் படம் ரிலீஸ் செய்ய போகிறார்கள்.தெலுங்கு சினிமா சார்பாக உங்களை வரவேற்கிறோம். இந்த சங்கராந்தியில் உங்களது படமும் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தினார் அல்லு அர்ஜூன்.

Rajini sir is my inspiration my role model says Allu Arjun

‘மாஸ்டர்’ படத்தில் மக்கள் செல்வனின் கெட் அப் இதுவா..?

‘மாஸ்டர்’ படத்தில் மக்கள் செல்வனின் கெட் அப் இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis new look in Vijays Master movieலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன்

இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த பட சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நீண்ட தலை முடியுடன் காட்சியளிக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இதுதான் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கெட் அப் இதுதானோ என தகவல்கள் பறந்தன.

ஆனால் இது மாஸ்டர் படத்துக்காக அல்ல என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, 96 கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Vijay Sethupathis new look in Vijays Master movie

More Articles
Follows