சமுத்திரக்கனியின் ஆண் தேவதை பட டிரெய்லரை வெளியிடும் 11 பிரபலங்கள்

AAN DEVATHAI TEAMதாமிரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

இவருக்கு ஜோடியாக ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

பஃக்ருதீன் முஸ்தபா குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனித்து வருகிறார்.

மறைந்த பாலசந்தரின் மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக ‘சிகரம் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி இப்படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார் தாமிரா. மேலும், இப்படத்தை தன் குருநாதர் பாலசந்தருக்கு சமர்ப்பணம் செய்யவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று மார்ச் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்த டிரைலரை ஒரே நேரத்தில் 10 சினிமா பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.

இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், வெற்றிமாறன், சீனுராமசாமி, ஏஆர். முருகதாஸ் ஆகிய இயக்குனர்களும், நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, உதயநிதி ஆகிய நடிகர்களும் இதனை வெளியிட உள்ளனர்.

ஒரு படத்தின் டிரைலரை இவ்வளவு பிரபலங்கள் வெளியிடுவது இதுவே முதன்முறையாகும் என கூறப்படுகிறது.

11 Celebrities releasing Aan Devathai Trailer 15th March 2018

 

Overall Rating : Not available

Related News

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
...Read More
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து…
...Read More
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன்…
...Read More

Latest Post