தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
`துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `நரகாசூரன்’.
பல காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர்.
மற்றொரு நாயகியான ஸ்ரேயா லண்டனில் இருப்பதால் வரவில்லையாம்.
நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகிறது.
வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.







