தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முடித்துவிட்டார்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் . தலைப்பிடப்படாத இப்படம் ‘D 51’ என அழைக்கப்படுகிறது.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் தனுஷூடன் இணைந்து நாகர்ஜூனா நடிக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாகர்ஜூனாவின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Actor nagarjuna going to act with dhanush in d51 movie