முருகன் தயாரிப்பில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்-அரவிந்த்சாமி

KS Ravikumar and arvind swamyமுதலில் ஹீரோ, பின்பு வில்லன், மீண்டும் ஹீரோ என மற்ற நடிகர்கள் நடித்திருப்பார்களா? எனத் தெரியவில்லை.

ஆனால் அரவிந்த்சாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

நாயகனாக நடித்து வந்தவர் இடையில் சினிமாவில் சில பிரச்சினைகளால் காணாமல் போனார்.

பின்னர் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து படு பிஸியாகிவிட்டார்.

சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடிக்கத் துவங்கவிட்டார்.

இதனையடுத்து விரைவில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் ஹர்ஷினி மூவிஸ் முருகன் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post