கேப்டன் மில்லரின் மிரட்டலான லுக்..; தனுஷ் பிறந்தநாள் நள்ளிரவில் டீசர்!

கேப்டன் மில்லரின் மிரட்டலான லுக்..; தனுஷ் பிறந்தநாள் நள்ளிரவில் டீசர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தனுஷ் கோபத்துடன் கத்துவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கேப்டன் மில்லர்

Dhanush’s ‘Captain Miller’ movie Teaser release time revealed

என் ரசிகர்கள் பார்த்தாலே லாபம் தான்.; ஓடிடி ஆப் தொடங்கிய ‘யோக்கியன்’ ஜெய் ஆகாஷ்

என் ரசிகர்கள் பார்த்தாலே லாபம் தான்.; ஓடிடி ஆப் தொடங்கிய ‘யோக்கியன்’ ஜெய் ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களாக சினிமாவில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களை கொடுத்திருப்பவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.

ஒரு கட்டத்தில் இவரது படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்ற போது சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றவர் தற்போது மீண்டும் சினிமாவில் படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் ஜெய் ஆகாஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘யோக்கியன்’. அவரது உதவியாளர் சாய்பிரபா மீனா என்பவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் தியேட்டரில் வெளியிட அவர் பல முயற்சிகள் செய்தும் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வருகிற ஜூலை 28ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏ3 என்ற தன்னுடைய சொந்த மொபைல் ஆப் மூலம் ஓடிடி தளத்திலும் மற்றும் திரையரங்கிலும் வெளியிட உள்ளார்.

ஜெய் ஆகாஷ்

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..

“என்னுடைய உதவியாளர் சாய்பிரபா மீனா இயக்கியுள்ள இந்த ‘யோக்கியன்’ படத்தை தியேட்டரில் கொண்டு வர பல முயற்சிகள் செய்தோம்.

ஆனால் இதுவரை தமிழகத்தில் 10 தியேட்டர்கள் கூட கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி தளத்தில் இந்த படத்தை வெளியிடுகிறோம்.

இதற்காக நானே சொந்தமாக ஏ3 என்ற (A CUBE) மொபைல் ஆப்பை உருவாக்கி அதன் மூலம் வெளியிடுகிறேன்.

எனக்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த படத்தை பார்த்தாலே யோக்கியன் படத்தை நான் தயாரித்ததற்கான லாபம் கிடைத்து விடும்.

இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூபாய் 50 மட்டுமே செலுத்தி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கலாம்.

அதுவும் நீங்கள் பார்க்க விரும்பினால் 24 மணி நேரம் மட்டுமே அது செயல்படும். மீண்டும் நீங்கள் பார்க்க விரும்பினால் மீண்டும் 50 ரூபாய் கொடுத்து அடுத்த நாள் தான் பார்க்க வேண்டும்.

தற்போது ஓடிடி தளங்கள் உலக அளவில் வரவேற்பு பெற்று வருவதால் இந்த முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

மேலும் எனது படங்களை இந்த ஆப்பு மூலம் வெளியிட தயாராக இருக்கிறேன். மற்ற படங்களும் ரிலீஸ் க்கு தயாராகி வருகின்றன என பேசினார் நடிகர் ஜெய் ஆகாஷ்.

ஜெய் ஆகாஷ்

Jai Akash launched A CUBE mobile app and releasing his yokkiyan movie

கிரிக்கெட்டர் தோனி தயாரித்த முதல் தமிழ் படத்திற்கு சென்சார் தந்த சர்ட்டிபிகேட் இதோ..

கிரிக்கெட்டர் தோனி தயாரித்த முதல் தமிழ் படத்திற்கு சென்சார் தந்த சர்ட்டிபிகேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் ஆர். ஜே. விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘எல்.ஜி.எம்’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

எல்.ஜி.எம்

Harish Kalyan’s ‘LGM’ movie gets U certificate by Censor Board

தனுஷ் – அஜித் பட நாயகியை விஜய்சேதுபதிக்கு ஜோடியாக்கிய வெற்றிமாறன்

தனுஷ் – அஜித் பட நாயகியை விஜய்சேதுபதிக்கு ஜோடியாக்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான  படம் ‘விடுதலை’.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் கடந்த மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘விடுதலை 2’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.

விஜய்சேதுபதி – மஞ்சு வாரியர் இவர்கள் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மஞ்சு வாரியர் இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர்

Vetrimaaran ropes in Manju Warrier to pair up with Vijay Sethupathi in ‘Viduthalai 2’

ரஜினி கமல் படங்களின் பிரபல எடிட்டர் ஆர் விட்டல் மரணம்.; திரையுலகினர் அதிர்ச்சி

ரஜினி கமல் படங்களின் பிரபல எடிட்டர் ஆர் விட்டல் மரணம்.; திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவிற்கு இயக்குனர் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு எடிட்டரும் மிக முக்கியமானவர்தான்.

எது தேவையான காட்சி எது தேவையற்ற காட்சி என்பதை முடிவு செய்து படத்தின் நீளத்தை எடிட்டிங் செய்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக கொடுத்து வருபவர் தான் எடிட்டர்.

அந்த வரிசையில் பல முன்னணி எடிட்டர்கள் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.

1980 களில் சூப்பர் ஹிட் படங்களான ஆடு புலி ஆட்டம், ராஜா சின்ன ரோஜா, விக்ரம், நான் மகான் அல்ல, ஜப்பானில் கல்யாணராமன், முரட்டுக்காளை, சர்வர் சுந்தரம், படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் விட்டல்.

இவருக்கு தற்போது வயது 90 ஆகிறது.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று ஜூலை 26 ஆம் தேதி மரணமடைந்தார். இது திரையுலகின் மூத்த கலைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது சென்னை முகவரி…

No.8B, டைரக்டர் காலனி
கோடம்பாக்கம், சென்னை 600 024.

Legendary Editor R Vittal passes away

இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட்.; நாங்கள் தீர்வு சொல்லவில்லை.. – ரமேஷ் தமிழ்மணி

இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட்.; நாங்கள் தீர்வு சொல்லவில்லை.. – ரமேஷ் தமிழ்மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்த படம் LGM.

இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்…

” எல் ஜி எம் படத்தை இயக்க வாய்ப்பளிப்பதற்காக திருமதி சாக்ஷி சிங் தோனி மற்றும் தல தோனி மற்றும் அவரது தயாரிப்பு குழுவினருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோனி நினைத்திருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பளித்திருக்கலாம்.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் படத்திற்கான கதை கருவை திருமதி சாக்ஷி மேடம் சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை சற்று விரிவாக்கம் செய்து கொடுத்தேன். அது சாக்ஷி மேடத்திற்கு பிடித்திருந்தது. பிறகு அவர் தோனியிடம் விவாதித்தார். தோனியும் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஒரு சாதாரணமான கான்செப்ட்டை பிரமாண்டமாக காண்பிக்க வேண்டும் என நினைத்தோம். அதற்காக நிறைய விவாதித்தோம்.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். அவர்களும் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து நடித்துக் கொடுத்தார்கள். பெரும்பாலான காட்சிகள் முதல் டேக்கிலேயே ஓகே ஆனது.

ஆர். ஜே. விஜயை அவருடைய இயல்பிலேயே நடிக்க வேண்டும் என்று கூறினேன். அவர் இயல்பாக நடிக்க வைப்பதில் தான் சற்று கட்டுப்பாடாக நடந்துக் கொண்டேன்.

சாக்ஷி சிங் தோனி

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் என அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இது ஒரு ஜாலியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல்.. தினசரி வாழ்க்கையில் பேசும் வசனங்கள் தான் இடம் பிடித்திருக்கிறது. கன்டென்ட்டாக பார்க்கும் போது இது ஒரு சர்வதேச அளவிற்கானது.

இதற்கு நாங்கள் தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம். இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட். குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் என ஒவ்வொருக்கும் அவர்களுடைய விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பொருத்தமானது என்பதை சொல்லியிருக்கிறோம்.

இதை அறிவுரையாக சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம்.

படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பின்னணி வேலைகள் கடினமாக இருந்தது. யோகி பாபு, வெங்கட் பிரபு ,வி டி வி விஜயன் ஆகியோரின் ஒத்துழைப்பும் மறக்க முடியாது. படப்பிடிப்பு தளத்தில் என்னைத் தவிர அனைவரும் அனுபவசாலிகள். அதனால் படப்பிடிப்பு எளிதாக இருந்தது. ஜூலை 28ஆம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எல் ஜி எம் படத்தை கண்டு ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சாக்ஷி தோனி பேசுகையில்…

”எங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லை. தோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபர்வமானது. இப்படத்தின் கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் இதை திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்தும் உருவானது. மேலும் மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது உலக அளவிலானது. இந்தப் படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசி இருக்கிறோம். உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். இந்தத் திரைப்படம் பொழுது போக்குடன் தயாராகி இருக்கிறது. எங்களுடைய இந்த திரையுலக பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

எல் ஜி எம்

LGM is fantasy movie says Ramesh Tamilmani

More Articles
Follows