தனுஷ் பிறந்தநாளில் கில்லர் கில்லர்.; ஜிவி. பிரகாஷ் கொடுத்த ட்விட்டர் ட்விஸ்ட்.!

தனுஷ் பிறந்தநாளில் கில்லர் கில்லர்.; ஜிவி. பிரகாஷ் கொடுத்த ட்விட்டர் ட்விஸ்ட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஜூன் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜூலை 28ம் தேதி சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

GV Prakash twitt a major Captain Miller update on Dhanushs birthday

கத்ரீனா கைப் உடன் இணைந்து விஜய்சேதுபதி வைக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ ட்ரீட்

கத்ரீனா கைப் உடன் இணைந்து விஜய்சேதுபதி வைக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

‘அந்தாதூன்’ படத்தை இயக்கி 3 தேசிய விருதுகளை வென்று பிரபலமான இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது.

பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை.

மேலும், இந்தாண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுவும் சில காரணங்களால் வெளியாகவில்லை

இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மெரி கிறிஸ்மஸ்

Katrina Kaif and Vijay Sethupathi starrer ‘Merry Christmas’ to release on December 15th

தலைவர் அலப்பறை.: சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பயமா.? ரஜினியை ட்ரோல் செய்யும் விஜய் – அஜித் ரசிகர்கள்

தலைவர் அலப்பறை.: சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பயமா.? ரஜினியை ட்ரோல் செய்யும் விஜய் – அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற ‘தலை முதல் அடி வரை தலைவர் அலப்பறை என்ற பாடல் நேற்று மாலை வெளியானது.

இந்தப் பாடலில் தலைவர் நிரந்தரம் தலைவர் சூப்பர் ஸ்டார் என்ற வரிகள் இருந்தன. மேலும் இந்த பாடலில்.. “உங்க அப்பன் விசில் சத்தம் கேட்டவன்.. உன் மகன் பேரன் ஆட்டம் போட வைப்பவன்..” என்ற வரிகள் இருந்தன.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த வரிகளை கேட்டு சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் பாடலை (ரஜினியை) ட்ரோல் செய்து விஜய், அஜித் ரசிகர்கள் பல மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியமாக விஜய் ரசிகர்கள் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு.. என்ற வரிகளை குறிப்பிட்டு.. “ரஜினிக்கு கமல் போட்டியாக இருந்த போது கூட ரஜினிகாந்த் தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஆனால் சமீபகாலமாக 2.0 படத்தில்.. “நான் தான் நம்பர் ஒன்.. சூப்பர் ஒன் என்று சொன்னார்”.

மேலும் ஜெயிலர் பட ‘ஹூக்கும்..’ பாடலில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி பறிக்க என்ற வரிகள் இருந்தன.

எனவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டிக்கு ஆள் வந்து விட்டார் என்ற பயமா.? என ரஜினி ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Vijay Ajith fans trolls Rajinis Jailer Hukum song

‘விடுதலை 2’ பட வீடியோ வெளியிட்டு சூட்டிங் அப்டேட் கொடுத்த சூரி

‘விடுதலை 2’ பட வீடியோ வெளியிட்டு சூட்டிங் அப்டேட் கொடுத்த சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான  படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் கடந்த மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘விடுதலை -2′ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விடுதலை -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தங்களில் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

‘Viduthalai 2’ shoot begins Soori shares a video

இந்தாண்டில் ‘வாரிசு’ – ‘துணிவு’ – ‘PS2’ வரிசையில் இணைந்த ‘மாவீரன்’

இந்தாண்டில் ‘வாரிசு’ – ‘துணிவு’ – ‘PS2’ வரிசையில் இணைந்த ‘மாவீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் முதல் படமான ‘மண்டேலா’ படத்தின் மூலம் தேசிய விருதை வென்றவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவரது 2வது படமான ‘மாவீரன்’ படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

இதில் சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது பாசிட்டிவான விமர்சனங்கள் மட்டுமே வந்தன.

இந்த நிலையில் இப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

தற்போது முதல் 3 நாட்கள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ.42.4 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் படம் ரூ.27.4 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 2023 ஆண்டில் ‘வாரிசு’, ‘துணிவு’ மற்றும் PS2 ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களுக்கு பிறகு முதல் 3 நாட்களில் அதிக வசூலை ஈட்டிய படம் ‘மாவீரன்’ பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Maaveeran movie three days collection report

நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்.; விளையாட்டு வீரர்களுக்கு தனி திட்டம்

நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்.; விளையாட்டு வீரர்களுக்கு தனி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முன்னணி வரிசையில் வந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், FIR என பல தரமான படங்களை இவர் கொடுத்துள்ளார்.

தற்போது ரஜினியுடன் இணைந்து ‘லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இன்று ஜூலை 17ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடி வரும் விஷ்ணு விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால்

அதில்…

என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அந்த நற்பணிகளுக்கு ஓர் அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.

இதன் தலைவராக திரு. சீத்தாராம் அவர்களும், செயலாளராக திரு.KV.துரை அவர்களும் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஷ்ணு விஷால்

(விஷ்ணு விஷால் நற்பணி மன்ற தொடர்புக்கு : +91 7305111636 – 044 35012698)

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

இப்படிக்கு,

(விஷ்ணு விஷால்)

விஷ்ணு விஷால்

Actor Vishnu Vishal launched Narpani Mandram

More Articles
Follows