மன்னிச்சுடுங்க கார்த்திக் நரேன்; நான் விலகி விடவா?.: கௌதம் மேனன்

மன்னிச்சுடுங்க கார்த்திக் நரேன்; நான் விலகி விடவா?.: கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon apologises to Karthick Narenகடந்த சில தினங்களாக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் மற்றும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் மோதல் கருத்துக்கள் இருந்து வருகிறது.

தான் இயக்கிய நரகாசூரன் படத்தை தயாரித்த கெளதம் மேனன் தன்னை ஏமாற்றி விட்டதாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மோதல் குறித்து வெளிப்படையாக கௌதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி கார்த்திக் நரேன் அப்படி ட்வீட் செய்துவிட்டதால், நான் அப்செட் ஆகிவிட்டேன். அதனால் தான் பதில் டுவீட் ஒன்றை பதிவு செய்தேன்.

நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. எனவே நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நரகாசூரன் திரைக்கதை விஷயத்தில் நான் தலையிட்டதே கிடையாது. அதுமட்டுமின்றி அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு நான் முதலீட்டாளர்களிடம் கூறினேன்.

அவருக்கு முழு சுதந்திரம் அளித்தேன். அவர் கேட்ட நடிகர்களை அதிகம் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தோம். இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடைய உழைப்புதான்.

பின்னணி இசையை மேசிடோனியாவில் உருவாக்கினார் கார்த்திக். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளோம்.

துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் பெரியது அல்ல.
நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.

நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் வெளியேற தயார்.

ஒரு வேளை நான் வெளியேறிவிட்டால் அந்த படம் என் பொறுப்பு அல்ல. சினிமா மார்க்கெட் தற்போது எப்படி உள்ளது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் நரேனுற்கு கோபம் வந்துள்ளது என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார் கௌதம்.

Gautham Menon apologises to Karthick Naren

மீண்டும் ஜிவி.பிரகாஷுடன் இணையும் விஜய்

மீண்டும் ஜிவி.பிரகாஷுடன் இணையும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijayஇயக்குனர் விஜய் இயக்கிய முதல் படம் ‘கிரீடம்’.

அஜித், த்ரிஷா ஜோடியாக நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.

இதனையடுத்து பல படங்களில் விஜய்யுடன் இணைந்திருந்தார் ஜிவி.பிரகாஷ்.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிகராக பிசியாகிவிட்டதால் அண்மைக்காலமாக விஜய் இயக்கிய படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய் அடுத்து இயக்கவுள்ள படத்தின் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Actor GV Prakash teams up with Director Vijay

விஜய்யின் 63வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா..?

விஜய்யின் 63வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vetrimaaranஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சினிமா ஸ்டிரைக் காரணமாக எல்லா பணிகளும் நிறுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையில் விஜய்யின் 63வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் அப்படியொரு செய்தியை பதிவிடவில்லை.

இதுகுறித்து விசாரித்த போது, விஜய் தன் படத்தை முடிவு செய்யவில்லை என்றும் அப்புறம் எப்படி வெற்றிமாறன் இயக்குவார்? என்ற செய்தி வெளியாகும் என தெரிவித்தனர்.

5 மணி நேர மேக்அப்; 3 கெட்டப்… அசத்த போகும் அதர்வா

5 மணி நேர மேக்அப்; 3 கெட்டப்… அசத்த போகும் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaமூன்று விதமான வேடங்களில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்கிறார்.

இப்படத்தை இயக்கி மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் தானே தயாரிக்கிறார் ஆர் கண்ணன்.

இப்படத்திற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறாராம் அதர்வா.

மேக்கப் துறையில் சிறந்த கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா ஆகியோர் அதர்வாவுக்கு மேக் அப் போடுகின்றனர்.

இவர்கள் பத்மாவத், மாம் ஆகிய படங்களில் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது…

“இந்த கதையும், அதர்வாவின் கேரக்டரும் உருவான போது அதற்கு 3 விதமான தோற்றங்கள் தேவைப்பட்டது.

எனவே அதன்படி அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை அளவெடுத்து சென்றனர் மேக் அப் மேன்கள்.

அதன்பின்னர் சூட்டிங்கின் போது ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள்.

அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது.” என்றார்.

ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய முதல்வர் எடப்பாடி

ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய முதல்வர் எடப்பாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and edapadi palani swamyமதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு முதல்வர் பேசியதாவது…

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று புதிதாக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

இங்கு காலியிடங்கள் எதுவும் இல்லை. எல்லாம் புல்லாகிவிட்டது. வேறு மாநிலத்திற்கு செல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மறைமுகமாக தாக்கினார் முதல்வர்.

அண்மையில் ஒரு விழாவில் வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalகடந்த 2017 வருடம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெர்சல்’.

விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் ரூ. 120 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் ஏழு நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மெர்சல், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More Articles
Follows