இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movieமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’

இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது.

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம்’.

இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.

இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ தயாராகியிருக்கிறது.

படத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movie

velvet nagaram varalaxmi

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்திற்காக தாராவி இளைஞராக மாறிய இஷான்

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்திற்காக தாராவி இளைஞராக மாறிய இஷான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Beyond the clouds movie news and release updatesஎந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது.

அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார்.

பிரபலமானவராக இருந்தாலும், இந்த படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்க வைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள்.

ஆகாசும், இஷானும் நெருங்கிய நண்பர்களாக படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படபிடிப்பு தளத்திற்கு பின்னாலும் ஒன்றாக சுற்றி வந்தனர். அவர்களின் இந்த பந்தம் திரையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி படக் குழுவினரிடம் கேட்ட போது,‘ இந்த படத்தில் இஷானின் நடிப்பிற்கு பின்னணியாக இருந்தது இயக்குநர் மஜீத் மஜிதியின் திரை பார்வை தான்.

இஷான் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் முன் அந்த காட்சியைப் பற்றி மிகவும் அக்கறையுடன் கேட்டு தெரிந்துகொண்டு, இயக்குநரின் எதிர்பார்ப்பை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பிற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்கவிருக்கும் தாராவி பகுதி இளைஞர்களுடன் இஷான் ஒன்றாக பழக ஆரம்பித்துவிட்டார்.

அவர்களுடன் பழகி அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை உற்று கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? என்பதை அறிந்து அதனை அப்படியே காட்சியில் பிரதிபலித்திருக்கிறார் இஷான்.

படப்பிடிப்பிற்கு முன்னரும், படப்பிடிப்பிற்கு பிறகு இஷானும் ஆகாசும் ஒன்றாகவே திரிவார்கள். படப்பிடிப்பிற்கு முன்னரே இஷானுக்கு, ஆகாஷ் ஒரு ராப்பர் என்று தெரிய வந்திருக்கிறது.

ராப் இசையில் பாடக்கூடிய திறமைப் பெற்றவர் என்பதை அறிந்ததும், அவரிடமிருந்து ஒரு சில பாடல் வரிகளை இவரும் கற்றிருக்கிறார். படத்தில் இஷான் குத்துச் சண்டை தெரிந்தவராக நடிக்கிறார். தனித்தனி திறமைகளுடன் இருக்கும் இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த ஆகாஷைப் பற்றி இஷான் பேசும் போது,‘ இந்த படத்திற்காக ஆகாஷை தேர்ந்தெடுக்கும் போது இவரும் இவரது நண்பர்களான ராகுல், நவீன் மற்றும் பால் ஆகியோர் தாராவி பகுதியில் சிறந்த ராப் கலைஞர்களாக இருந்தனர்.

இவர்களை இப்படத்திற்கு பைனல் ஆடிசன் போது சந்தித்தேன். இயக்குநர் மஜீத் சார், இவர்களுடன் என்னையும் வைத்து ஒரு டெஸ்ட் சூட் நடத்தினார். அப்போது சென்ஸ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஆகாஷ் சிறப்பாக நடித்தார். பிறகு அவர்களுடன் இணைந்து ராப் பாடலை கற்றுக் கொண்டே குத்துச்சண்டை போடுவதற்கும் பயிற்சி பெற்றோம்.

அதன் பின்னரே தாராவி பகுதியை அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தோம். அப்போது உண்மையிலேயே என்னுடைய அமீர் என்ற கேரக்டரை எனக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டேன்.

என்னைப் போன்றே அவர்களும் இசை மற்றும் நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் அனைவரும் ஒன்றாக கூடி பழக முடிந்தது. படப்பிடிப்பு முடிந் தபிறகும் தற்போது கூட நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். சந்தித்து நட்பு பாராட்டுகிறேன்.’ என்றார்.

ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் தி க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.

Beyond the clouds movie news and release updates

beyond the clouds still

எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricketகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.

இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் அதையும் பார்ப்போம் என சிலர் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால் ஐபிஎல் போட்டியை தற்காலிமாக இங்கே நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் போராட்டங்கள் செய்வோம் என்று தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதனால் இனி 2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாடலாசிரியர் பா விஜய் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக ஒரு கவிதையை படித்து வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில்…

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!

சே..சே..னு கூட்டம் மிதப்புல மிதக்கலாம் சேப்பாக்காம்.
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்..!

கடற்கரை ஓரத்த பூட்டி வச்சிப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் யாருடா புத்திசாலி..!

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்கப் பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!

விளம்பரத்துல தன்னையே வித்தவனெல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..!

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!

ஆவட்டும் சாரே! ஆன வரைக்கும் ஊர ஏமாத்து..
எங்கப் பச்சத்தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உங்க பம்மாத்து..!

காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மிறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!

காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்புடி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!

பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள விரட்டி அடிச்சு, வெளுக்கத் தாண்டா இந்தப் போராட்டம்..!

என்று எழுதியுள்ளார். இதை அவரே பாடல்போலவும், படித்துள்ளார்.

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricket

இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா.? இந்த கேள்வியால் சூடான குஷ்பூ

இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா.? இந்த கேள்வியால் சூடான குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khusboo angry reaction because of wrong questionதிரையுலக பிரபலங்கள் என்றாலும் அரசியல் பிரபலங்கள் என்றாலும் தற்போது தாங்கள் நினைக்கும் கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் நடிகை குஷ்பூ தற்போது அரசியல்வாதி ஆகிவிட்டதால் ட்விட்டரில் அதிகமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

பெரும்பாலும் ட்விட்டரில் பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டால் சிலர் கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சித்து வருகின்றனர்.

அவர்கள் பதில் அளிப்பது இல்லை. ஆனால் குஷ்பூவோ கடுமையாக விமர்சித்தால் அதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் ஒருவர் இப்ப உன்னைய யாரு வெச்சிருக்கா? என்று ஆபாசமாக கேட்டுள்ளார்.

அதற்கு குஷ்பூ கொடுத்துள்ள பதிலடி இதோ…

உன் அம்மாவ யாரு வச்சிருந்தா? உன்ன போல ஒரு நாய பெத்து எடுத்துருக்கா? மொதல்ல அத தெரிஞ்சிட்டு வா. அப்புறம் என்னை பத்தி பேசு என பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிலுக்கு அவரது ரசிகர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.

“உங்க ரேஞ்சுக்கு நீங்க இதுக்கு பதில் சொல்ல வேண்டாம். உங்க பெயரை கெடுத்துக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளனர்.

Khusboo angry reaction because of wrong question

khusboo tweet hot

தமிழகம் வந்துள்ள மோடிக்கு வீடியோ & கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்

தமிழகம் வந்துள்ள மோடிக்கு வீடியோ & கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM President Kamal appeal to Prime Minister Modiகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தினம் தினம் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அருகே உள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார்.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியை பறக்க விட்டுள்ளனர்.

மேலும் ஆகாயத்திலும் கருப்பு பாலுன்களை பறக்கவிட்டு அதில் ஓடிபோமோடி #GOBACKMODI என்று எழுதி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,

ஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ,

தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை.

நினைவுறுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள்.

இன்றைய நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

MNM President Kamal appeal to Prime Minister Modi

மேலும் கடிதம் மூலமும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..

MNM Kamal request to Modi

திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள்; நடிகை சுலக்ஷனா வேண்டுகோள்

திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள்; நடிகை சுலக்ஷனா வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குமாரி மதுமிதாவின் பரதம் நாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சுலக்ஷனா திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள் என்று பேசினார்.

அந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு….

பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார் – அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.

குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன், நடிகை சுலக் ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதி ஹேமலதா போன்றவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்தினைக் கண்டு வியந்து போனார்கள்.

நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில்….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை.

பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.மதுமிதாவின் தாய்,தந்தையரின் அயராத ஊக்குவிப்பின் செயலை மிகவும் பாராட்டுகிறேன்.

நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம். அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.

இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்… நோய்நொடிகள் வரவே வராது.

கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்” மதுமிதா பரதக் கலையிலும், கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கும்,மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் மற்றும் பக்கவாத்தியக்காரர்களுக்கும் மதுமிதாவின் பெற்றோர் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

Actress Sulakshna participated in Miss Madhumithas bharathanatyam show

Baratham-18

 

Baratham-9

Baratham-4

More Articles
Follows