கில்லர் க்ளைமாக்ஸ்; டார்லிங் வரலட்சுமிக்கு விஷால் நன்றி

கில்லர் க்ளைமாக்ஸ்; டார்லிங் வரலட்சுமிக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal thanks to Darling Varalakshmi for Completing Sandakozhi 2“இரும்புத்திரை’ படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி நடித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது…

சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது.

கில்லர் கிளைமாக்ஸ். டார்லிங் வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த நடிகை அவர். அக்டோபர் 18ஆம் தேதி ரிலீசுக்காக காத்திருப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Vishal thanks to Darling Varalakshmi for Completing Sandakozhi 2

Vishal‏Verified account @VishalKOfficial
Wow. Coming to the final leg of shoot for #sandaikozhi2 n #pandemkodi2 it’s a wrap for @varusarath.its gonna be a Gud one.killer climax fight.:) 🙂 thank u so much darling Varu. one of the most professional actresses I’ve come across. Lookin fwd to #oct18.god bless

விஜய்-சூர்யா ரசிகர்கள் மோதல்; என்ஜிகே ரிலீஸ் குறித்து பிரபு விளக்கம்

விஜய்-சூர்யா ரசிகர்கள் மோதல்; என்ஜிகே ரிலீஸ் குறித்து பிரபு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK Producer SR Prabu clarifies about movie releaseஇந்த 2018 ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்து வரும் சர்கார் மற்றும் சூர்யா நடித்து வரும் என்ஜிகே ஆகிய படங்கள் வெளியாகும் என முதலியே அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் என்ஜிகே டைரக்டர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டில் தாமதம் ஆகும் என கூறப்பட்டது.

அதன்பின்னர் செல்வராகவன் ஆகஸ்ட் 2முதல் சூட்டிங்கை தொடங்கினார்.

இதனால் படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்களே யூகித்து விஜய் ரசிகர்களுடன் சண்டை போட ஆரம்பித்தனர்.

இதனால் ட்விட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல் அனல் பறக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து ’என்.ஜி.கே’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார்.

“நிறையப் பேர் என்.ஜி.கே படம் குறித்துக் கேட்கிறார்கள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். திட்டமிட்டதை விரைந்து முடிக்க முயற்சிக்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் படத்தைப் பற்றிய தகவலை சொல்கிறேன்.

அதேநேரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்துங்கள். அது அவ்வளவு முக்கியமானதல்ல. நண்பர்கள் தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் ரசிகர்களே…

NGK Producer SR Prabu clarifies about movie release

S.R.Prabhu‏Verified account @prabhu_sr Aug 5
Hey Guys! Many are asking for release update on #NGK .Sorry for delayed response. We are little behind schedule & trying to catch up. Will update in a weeks’ time. Meanwhile stop fighting with each other! Not worth it!! #HappyFriendshipDay

S.R.Prabhu‏Verified account @prabhu_sr
சண்டை போடாதீங்கன்னு சொன்னா..அதுக்கும் புது அர்த்தம் கண்டுபுடிச்சு அடிச்சுக்கறீங்களேப்பா? #HappyFriendshipDay #Peace

ராம் இயக்கத்தில் திரைப்பட்டறை வழங்கும் *மாணவன்* நாடகம்

ராம் இயக்கத்தில் திரைப்பட்டறை வழங்கும் *மாணவன்* நாடகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram directorial Thiraipattarai Maanavan dramaதிரைப்பட்டறை என்ற திரைத்துறை பயிற்சி கூடம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது.

இங்கு, கலைத்துறையில் பயில விரும்பும் நபர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் சுமார் 25 சிறுவர், சிறுமிகளும், 60க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிறு தினம் ‘மாணவன்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் அரங்கேறியது.

அந்த நாடகம் பற்றி ஒரு பார்வை…

படிக்காத ஒரு ஏழை தந்தை தன் மகனை இஞ்சினியராக ஆக்க ஆசைப்பட்டு ஒரு தனியார் கல்லூரியில் சேர்க்கிறார்.

அந்த ஏழை மாணவன் அரசுப் பள்ளியில் படிந்து வந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் பேச தவிக்கிறான்.

இதனால் கல்லூரியில் சீனியர் மாணவர்களால் ரேகிங் செய்யப்படுகிறான். ஆங்கில அறிவு இல்லாதவன் என அவனை கிண்டல் செய்கிறார்கள்.

தேர்வு வருகிறது. முதல் செமஸ்டரில் பெயில் ஆகிறார். இதனால் சீனியரின் கேலிக்கும் உள்ளாகுகிறார்.

எனவே தற்கொலை செய்துக் கொள்ள ரயில் முன் பாய நினைக்கிறார். அப்போது அங்கு ப்ளாட்பாரத்தில் கர்ச்சிப் விற்கும் ஒரு சின்ன பையன் அவனை தடுத்து அவனுக்கு பல மொழிகளில் அட்வைஸ் செய்கிறார்.

மேலும் ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அது அறிவு அல்ல என அறிவுரை செய்து அனுப்பி வைக்கிறான்.

அதன்பின்னர் கடுமையான முயற்சி செய்து, நன்றாக படிக்கிறார் அந்த மாணவன். இறுதியில் தன் ஆங்கில திறமையை தன்னை கேலி செய்த மாணவர்கள் முன் நிரூபிக்கிறான் அந்த மாணவன்.
இதனால் அவரது தந்தை உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர்.

கேரக்டர்கள்…

ஏழை மாணவன், மாணவனின் தந்தை, ரேகிங் செய்யும் சீனியர், கைத்துண்டு விற்பவன் என ஒவ்வொரு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீனியர் மாணவர் நிஜமாகவே தன் ரேகிங் செய்து அடித்தும் விட்டார்.

மேலும் மிக்சர் தின்னும் ஒரு மாணவனும் காமெடி செய்து அசத்தினார்.

மாணவியாக வரும் ரேஷ்மாவும் அசத்தியுள்ளார்.

முக்கியமாக நாடகத்தின் காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.

இந்த நாடகத்தை இயக்கிய ராம் மற்றும் விஜி ஆகியோரை பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டி கௌரவித்தனர்.

Ram directorial Thiraipattarai Maanavan drama

நடிகர்கள்

ஏழை மாணவன் மாரிமுத்து : ராஜேஷ்
ஏழை அப்பா : ஆனந்த்
சீனியர் விக்கி:சரத்
சீனியர் ரேஷ்மா  :  சக்தி
மிச்சர் பாய் ;ஆனந்த்
கைக்குட்டை விற்பவன் :முருகன்
ப்ரொபசர் : நிவேதா
எழுத்து இயக்கம்: L.  ராம்
வசன உதவி : மதன் & விஜி

 

Maanavan drama

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்திய *நான் செய்த குறும்பு* படக்குழு

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்திய *நான் செய்த குறும்பு* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naan seidha kurumbu first lookரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘.

இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது.

தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது.

விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது. வேத மந்திரம் முழங்கியது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர்.

இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விழாவில் ‘நான் செய்த குறும்பு ‘. இயக்குநர் மகாவிஷ்ணு பேசும் போது

“நான் ஸ்டாண்ட் அப் காமடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில் சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

நான் அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை. காரணம் தப்பான கதை, தப்பான படக் குழு, தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான்.

ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ளது.

‘நான் செய்த குறும்பு ‘. ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம். இது பட்ஜெட் படம் தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும். தரம் இருக்கும்.. ” என்றார்.

நாயகன் கயல் சந்திரன் பேசும் போது, ” இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள்.

நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின். ‘ ஆஹா. ‘ படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால் தான் தெரியும் என்று சொல்கிற படம். படக் குழுவினர் நட்புடன் பழகிய விதம் எனக்குப் பிடித்தது, ” என்றார்

விழாவில் படத்தின் நாயகி அஞ்சு குரியன், நடிகர் மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா, இணைத் தயாரிப்பாளர் எஸ். பி. சுரேஷ், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு, பானு பிக்சர்ஸ் ராஜா, விநியோகஸ்தர் ஜேகே தொழிலதிபர்கள் ஆனந்த், விஜய் டோஹோ, ரகுநாதன், ரோஹன் பாபு, திருமதி ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த நலம் விரும்பிகள் படக் குழுவினரை வாழ்த்தினர்.

வருகை தந்தவர்களுக்கு ஜெயகிருஷ்ணன் எழுதிய ‘ பாரம்பரிய அறிவியல் ‘ ‘ சுகப்பிரசவம் ‘ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன. விழாவை ‘ வீ. ஜே ‘ ஷா தொகுத்து வழங்கினார்.

Baby Shower function conducted by Naan Seidha Kurumbu at movie Pooja

naan seidha kurumbu

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் சஸ்பென்ஸ் வைக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் சஸ்பென்ஸ் வைக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Devi Sri Prasads Music show in America news updatesராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.

இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது,‘ ராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன.

அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

‘சாமிஸ்கொயர் ’முதலில் வெளியான ‘அதிரூபனே…’ என்ற மெலோடி பாடலுக்கும். அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது.

இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை.

தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’ என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.

இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் தேவி ஸ்ரீபிரசாத்திடம்,‘ இந்த ஆண்டு நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சியில் புதிதாக என்ன செய்யவிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,‘ அதை இப்போதே சொல்லமாட்டேன்.

தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இதில் இடம்பெறும். ஏனைய விசயங்கள் சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்.’ என்றார்.

Devi Sri Prasads Music show in America news updates

*எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்* படத்தை வெளியிடும் கிளாப் போர்டு

*எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்* படத்தை வெளியிடும் கிளாப் போர்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Echarikkai Idhu Manithargal Nadamadum Idam theatrical rights bagged by Clap Boardஇன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற “ஆக்சிசன்” தான்.

நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.

நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி.

தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி,

அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது “எச்சரிக்கை” இது மனிதர்கள் நடமாடும் இடம் ” படத்தை பார்த்த சத்யமூர்த்தி பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தை. தயாரித்துள்ளனர்.

எடிட்டிங்..கார்த்திக் ஜோகேஷ்
தயாரிப்பு நிர்வாகம். சதீஷ் ரகு
தயாரிப்பு..C.P.கணேஷ் ,சுந்தர் அண்ணாமலை
எழுதி இயக்கி இருப்பவர்.. சர்ஜுன்.
இவர் யூ டியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர்..
அத்துடன் மணிரத்னம் AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தின் சிறப்பையும் மா லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்,

அவரிடம் படத்தை பற்றி கேட்ட போது…

இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.

சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் (கடத்தல்) பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்

ஒளிப்பதிவு.. சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ்
இசை.சுந்தரமூர்த்தி கே.எஸ்..
பாடல்கள்..கபிலன்
கலை.விஜய் ஆதி நாதன்
நடனம்.விஜய்சதீஷ்..சஅனுஷாசஸ்வாமி
ஸ்டண்ட்.மிராக்கில் மைக்கேல்

பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்த்மாக வாங்கி ரிலீஸ் செய்கிறார் .

இம்மாதம் படம் வெளியாகிறது. என்றார் இயக்குனர்.

கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது.

Echarikkai Idhu Manithargal Nadamadum Idam theatrical rights bagged by Clap Board

More Articles
Follows