மிக மிக அவசரம் படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து வெளியிடும் சத்யமூர்த்தி

மிக மிக அவசரம் படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து வெளியிடும் சத்யமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளார் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் இவருடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி அவர்களும் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளார்.

தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்த வி.சத்யமூர்த்தி அவர்கள் நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்களை அண்மையில் வெளியிட்டார்.

மேலும் கோலி சோடா 2 பட வெளியீட்டு உரிமையையும் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram

மப்புல கார் ஓட்டி போலீஸிடம் சிக்கிய சினிமா புரொடியூசர்

மப்புல கார் ஓட்டி போலீஸிடம் சிக்கிய சினிமா புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police arrested Producer PL Thenappan in Drunk and drive caseகுடி பழக்கம் தீங்கானது என எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தாலும் குடிப்பவர்களை திருத்தவே முடியாது.

குடித்து விட்டு கலாட்டா செய்வது, வாகனம் ஓட்டுவது என்ற பல்வேறு புகார்களை நாம் தினம் தினம் பார்க்கிறோம்.

நாம் பார்க்கும் சினிமாவில் கூட நடிகர்கள் மது அருந்தும் காட்சிகள் வந்தால், குடி குடியை கெடுக்கும் எனற் வாசகங்களை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பாளரே குடித்து விட்டு நிஜ போலீஸிடம் சிச்கிய ஒரு செய்தியைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

நேற்று இரவு சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

அந்த காரை பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பி.எல்.தேனப்பன் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அவரை போலீசார் பரிசோதித்த போது அவர் குடி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த போலீசார், பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police arrested Producer PL Thenappan in Drunk and drive case

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivanபாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் தயாரித்து நடித்திருந்தார் சூர்யா.

இப்படம் வெற்றிப் பெறவே தன் இயக்குனருக்கு ஒரு புதிய காரை அன்பளிப்பாக கொடுத்தார் சூர்யா.

இதனையடுத்து ஹரி இயக்கிய சிங்கம் 3 படம் வெளியானது. இப்படம் முதல் இரண்டு பாகங்களை போல பேசப்படவில்லை என்றாலும் அந்த இயக்குனருக்கு காரை பரிசளித்தார் சூர்யா.

இந்நிலையில் இந்தாண்டு 2018 பொங்கலுக்கு வெளியானது தானா சேர்ந்த கூட்டம்.

இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு புதிய காரை பரிசளித்துள்ளார் சூர்யா.

கிட்டதட்ட 13 வருடங்களுக்கு முன் தன்னை இயக்கி சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிப்பதை வாடிக்கையாகி கொண்டிருந்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் வழியில் சூர்யாவும் செல்கிறாரோ? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivan

pandiraj car

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஜய்யும் ஏஆர். முருகதாஸ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்டபத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகர் விபின் அனேஜா இப்படத்தில் ஒர பாடலை பாடவிருக்கிறாராம்.

இதுகுறித்து விபின் கூறும்போது,..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என் கனவாக இருந்தது. இந்தி பாடல்களை பாடி வந்த என்னிடம், தமிழில் பாட விருப்பமா? என கேட்டார். நான் உடனடியாக ஓகே என்று கூறிவிட்டேன்.

இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62

நீங்க ஸ்டிரைக் நடத்துங்க; நாங்க படத்த போடுறோம்… அபிராமி ராமநாதன்

நீங்க ஸ்டிரைக் நடத்துங்க; நாங்க படத்த போடுறோம்… அபிராமி ராமநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abhirami Ramanathanடிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டணங்களை எதிர்த்து கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

இதனால் தியேட்டர்களில் வசூல் குறைய ஆரம்பித்தது.

இதனிடையில் நாளை மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களும் 8 சதவீத கேளிக்கை வரிவிதிப்பு, திரையரங்கு உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் நிறைய கிட்டதட்ட 147 மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து அபிராமி ராமநாதன் கூறியதாவது…

‘சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் இயங்கும்.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும்’ என்று தெரிவித்தார்.

இவை அனைத்திலும் பழைய ஹிட் படங்களே திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

அவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்களோ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்

ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Rajini Kamal movies Shankar likely to join with Vikram for 3rd timeரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து லைகா தயாரிப்பில் கமல் நடிக்க, இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல் படத்தை அடுத்து விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை ஷங்கர் இயக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

அப்படம் அந்நியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அந்நியன் மற்றும் ஐ படங்களில் ஷங்கரும் விக்ரமும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

After Rajini Kamal movies Shankar likely to join with Vikram for 3rd time

More Articles
Follows