தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்‘.
இதில் ஸ்ரீ பிரியங்காவுக்கு ஜோடியாக அரீஷ்குமார் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சீமான் நடித்திருந்தார்.
இப்படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் இதன் ரீலீஸ் தள்ளிக் கொண்டே போனது.
தற்போது 150க்கும் அதிகமான தியேட்டர்களில் நவம்பர் 8-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியானது.
இதனிடையில் தியேட்டர்கள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலையில்தான் போடப்படுகிறது. அதாவது 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாகவே இருக்கின்றன.
இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி கோபமாக தெரிவித்துள்ளதாவது…
“கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு.
திரையரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என தெரிவித்துள்ளார்.
Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaram