தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.
புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீபிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் சீமான் நடித்துள்ளார்.
விஐபியின் பாதுகாப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் உச்சி வெயிலில் நிற்கும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கதைதான் இந்த படம்.
இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் வாங்கியிருந்தார்.
அதன்படி இப்படம் இன்றைக்கு (அக்டோபர் 11ல்) ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.
ஆனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதனால், படம் அடுத்த வெள்ளி அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.
ஆனால் ‘அருவம், பப்பி, பெட்ரோமாக்ஸ்’ ஆகிய மூன்று படங்கள் இன்று சொன்னப்படியே இன்று அக். 11ல் வெளியாகிறது.
Sripriyankas Miga Miga Avasaram movie again postponed