‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர்

‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Productions bagged theatrical rights of Miga Miga Avasaramவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து இந்த ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண்காவலர்கள் ’மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன், இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள்.

அதற்கேற்றபடி காவல்துறை உயர் அதிகாரிகளே இப்படத்தை பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள்.. அந்த விதமாக காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, பெண்களின் வலியை அப்படியே ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்துகின்ற படமாகவும் இது உருவாகி இருக்கின்றது.. நிச்சயமாக தாய்க்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார்கள்..

அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’மிக மிக அவசரம்’ வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வருகிறது..

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.

Libra Productions bagged theatrical rights of Miga Miga Avasaram

Libra Productions bagged theatrical rights of Miga Miga Avasaram

 

‘சத்யா’ கூட்டணியில் நடிகை நந்திதாவை இணைத்த தனஞ்செயன்

‘சத்யா’ கூட்டணியில் நடிகை நந்திதாவை இணைத்த தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandita Swetha gets on board for Director Pradeep Sibiraj filmதமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்களின் டாக்டர் ஜி.தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் ஆகியோர் இந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமானதைக் குறித்து பேசிய கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில்…

“இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, அனைவரிடமும் பாராட்டுக்களை குவிப்பதில் வல்லவர். அவரது ஈடுபாடு இப்படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நானும், இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு, நாட்டமுள்ள நடிகைகளால்தான், அவர் தனது பாத்திரத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். இந்த அம்சத்தில், நந்திதா ஸ்வேதாவின் செயல்திறன் மற்றும் தமிழ் பேசும் பண்புகளைக் கண்டு அவர்தான் சரியான தேர்வாக இருப்பார் என்று உணர்ந்தோம்.

கிரியேட்டிவ் என்டர்டெயினர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நந்திதாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த தருணத்தை எதிர்பார்க்கிறோம். ”

இப்படம் செய்தி வந்தவுடனேயே மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது, ஏனெனில் இயக்குனர் பிரதீப் மற்றும் சிபிராஜ் ஆகியோரின் சமீபத்திய வெற்றி பெற்ற படமான ‘சத்யா’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஒன்றாக இணைகிறார்கள்.

இப்படத்தில் நாசர், சம்பத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சைமன் கே கிங்கின் இசையும், ஜான் மகேந்திரனின் வசனங்களும் ஏற்கனவே இந்த படத்திற்கு கூடுதல் தூணாக மாறிவிட்டன.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 நவம்பரில் தொடங்கி 2020 ஜனவரியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும், அதைத் தொடர்ந்து உலகளாவிய திரையரங்கில் மார்ச் 2020 இல் வெளியிடப்படும்.

Nandita Swetha gets on board for Director Pradeep Sibiraj film

பல இன்னல்கள் கடந்து ‘TPTK’ படத்தை ரிலீஸ் செய்கிறோம் – கயல் ‘சந்திரமெளலி’

பல இன்னல்கள் கடந்து ‘TPTK’ படத்தை ரிலீஸ் செய்கிறோம் – கயல் ‘சந்திரமெளலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kayal chandranஅறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 Movie Buff ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில், கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும்.

பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.’ என்று கூறினார்.

எழுத்து & இயக்கம் – சுதர், ஒளிப்பதிவு – I.மார்டின் ஜோ, இசை – அஷ்வத்,

அசோக் செல்வன், ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே

அசோக் செல்வன், ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh my kadavule‘ஓ மை கடவுளே’ என்பது சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான வாசகம். வெற்றிப்படமொன்றின் பாடலுக்கு இடையே வரும் இந்த வசனம் இப்போதும் பல சந்தர்பங்களிலும், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஓ மை கடவுளே என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

அழகு நாயகன் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நாளைய இயக்குநர் போட்டியின் இறுதிச் சுற்றுவரை வந்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. அசோக் செல்வனும் அபிநயா செல்வமும் இணைந்து துவக்கியிருக்கும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ், இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி ஜி.டில்லிபாபுவுடன் சேர்ந்து தயாரிக்கிறது.

மணமக்கள் கோலத்தில் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் சாதரண கண்ணாடி டம்ளரில் டீ சாப்பிடுவதுபோல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே, ரசிகர்களிடம் படம் குறித்த ஆர்வத்தை பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் அபிநயா செல்வம் கூறும்போது, “ஓரு கனவு நிறைவேறும் மகத்தான தருணமாக இதை நான் உணர்கிறேன். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் போன்ற வெற்றிப் படங்களுக்கு தூணாக துணை நின்ற, ஆக்ஸஸ் பிலிம்ஸ் டில்லிபாபு சார், எங்களது கனவு நனவாக ஆதார சக்தியாக அமைந்திருப்பதை பெருமையுடனும் பெருமகிழ்வுடனும் பகிர்ந்து கொள்கிறோம். அவர் இந்தப் படத்தில் பங்கு கொண்டிருப்பது எங்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறது.

காதல் எப்படி சாகாவரம் பெற்றதோ அதுபோல், காதல் கலந்த நகைச்சுவைப் படங்கள் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் படங்களாகத்தான் இருக்கும். ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பாரத்துவிட்டு திரையலகைச் சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தன் முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் மிக அழகாக செதுக்கி தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார் அபிநயா செல்வம்.

‘மேயாத மான்’ மற்றும் ‘எல்.கே.ஜி.’ படங்களுக்கு ஓளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றிய விது அய்யன்னா ‘ஓ மை கடவுளே’ படத்துக்கு ஓளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip Praveenயோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும் உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.

இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது…

சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது என்றார்.

இப்படம் பற்றி நடிகை சுனைனா கூறியது…
இப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செயத்து போலவே இருந்தது. அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இப்படத்தில் என் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாப்பத்திரங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.

அறிமுக நாயகனுடன் நடிப்பது பற்றி அவர் கூறியது…
அனுபவம் வாய்ந்த நடிகர் புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.

தயாரிப்பாளர் A விஸ்வநாதன் Sai Films Studios சார்பில் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 11 பூஜையுடன் துவங்கியது.
இப்பூஜையில் தயாரிப்பாளர் A விஸ்வநாதன், நாயகன் நடிகர், தயாரிப்பாளர் பிரவீன், லக்‌ஷ்மி பிரியா, அதுல்யா , கருணாகரன், இயக்குநர் சாம் ஆண்டன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சக்தி, இயக்குநர் தாஸ் ராமசாமி, இயக்குநர் சத்யமூர்த்தி, விஸ்வாசம் மற்றும் இரும்புத்திரை வசனகர்த்தா சவரிமுத்து, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவாளர் உதயசங்கர், எடிட்டர் தீபக், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, உடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், நடன அமைப்பாளர் சக்தி ராஜு, இசையமைப்பாளர் சித்து குமார், இணை தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் தேனி தமிழ் உட்பட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் இருந்து தலக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. தளக்கோணத்தின் தொடர்ச்சியாக 38 நாட்களும் மற்றும் கொடைக்கானலில் 2 நாட்கள் என
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இந்த இருவருக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jigarthanda telugu remakeகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேன்ன் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.

2014ல் வெளியான இப்படம் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்று தந்துள்ளது.

தற்போது 5 ஆண்டுகளுக்னு பிறகு ‘வால்மீகி’ என்ற பெயரில் தெலுங்கில்ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டுள்னர்.

அங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

தமிழில் சித்தார்த் நடித்த கேரக்டரில் தமிழ் நடிகர் அதர்வா நடிக்க, பாபி சிம்ஹா கேரக்டரில் வருண் தேஜ் நடித்துள்ளார்.

More Articles
Follows