ஸ்ரீ பிரியங்காவின் ‛மிக மிக அவசரம்’ பட ரிலீஸ் தேதி இதோ…

Sri Priyankas Miga Miga Avasaram movie release date is hereஅமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

இதில் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சீமானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் போலீஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் 2௦௦ பெண் காவலர்களுக்கு இப்படத்தை திரையிட்டு காட்டியிருந்தார் சுரேஷ் காமாட்சி.

படம் எப்போதோ ரிலீசுக்கு தயாரானாலும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 11ல் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sri Priyankas Miga Miga Avasaram movie release date is here

Overall Rating : Not available

Related News

ஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து,…
...Read More
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக இயக்கி…
...Read More
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′,…
...Read More

Latest Post