உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்

நடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர், ஆடம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் – ஆஷிப் குரேஷி
இசை – நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா
தயாரிப்பு – உதயா
பிஆர்ஓ. – நிகில் முருகன்

கதைக்களம்…

சிறுவயது முதலே கோட் சூட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் உதயா. ஆனால் இவருடைய ஏழ்மையால் அது கிடைக்காமல் போகிறது.

எனவே நிறைய சம்பாதித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டே வளர்கிறார்.

இவர் அடிக்கடி இவரை பற்றி பில்டப் கொடுப்பதால் இவரை நண்பர்கள் கூட நம்புவது கிடையாது. ஆனால் இவரை ஒரு நாயகி சின்சியராக காதலிக்கிறார்.

ஒரு நாள் இவர் ஓவர் மப்பில் எங்கோ சென்று படுத்து உறங்கி விடுகிறார். இவர் ஒரு நாள் மட்டும் எங்கோ சென்றதாக நினைக்கிறார். ஆனால் இவரின் நண்பர்கள் 30 நாட்கள் இவரை காணாமல் தேடுகின்றனர்.

அப்படியிருந்தால் தான் 30 நாட்கள் வரை எங்கிருந்தேன்.? தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி போகிறார்.

இவரை அறியாமல் இவருக்குள் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கட்டளைகளை இவர் செய்யவிட்டால் இவரை டார்ச்சர் செய்கிறது.

அதன்படி இவர் உத்தரவு மகாராஜா… உத்தரவு மகாராஜா என செய்துக் கொண்டே இருக்கிறார்.

அப்படியென்றால் தன் மூளைக்குள் என்ன நடக்கிறது? என்ன ஆனது? என்பதை புரியாமல் தவிக்கிறார்.

ஒரு மருத்துவ பரிசோதனையில் அதில் ஒரு மைக்ரோ சிப் இருப்பது தெரிய வருகிறது, அப்படி என்றால் இவரை இயக்குவது யார்? அவரின் நோக்கம் என்ன? இதனால் அவர் அடையும் லாபம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் முதல் பாதிவரை நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் என்கிற அளவுக்கு ஒரு குழப்பக்காரனாய் உதயா அசத்தியுள்ளார்.

சில காட்சிகள் அது ஓவராய் தெரிந்தாலும் அந்த கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை 2ஆம் பாதியில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.

இப்படத்தை உதயாவே தயாரித்து நடித்துள்ளார். இதுநாள் வரை வெறுமனே வந்து செல்லும் கேரக்டர்களில் வந்திருந்தாலும் அதை எல்லாம் சேர்த்து வைத்து இதில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உதயாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் 3 கட்டங்களில் வருவதால் 3 நாயகிகள் உள்ளனர். ஒரு நாயகியின் கேரக்டர் இவருக்கு தொடர்பு இல்லாமல் பிரபு உடன் பயணிக்கிறது.

விண்வெளிக்கு செல்ல ஆசைப்படும் அந்த ப்ரெண்ட் கேரக்டர் நாயகி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். டிரைவர் ப்ளாக்பேக்கில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு.

இதில் 2வது ஹீரோ ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் பிரபு. டாக்டராகவும் போட்டோகிராபராகவும் என கச்சிதம்.

ஆனால் அந்த இளம் பெண் உடன் நட்பில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ப்ளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை.

நடிகர் சங்கத்தில் தனக்கு நன்கு பரிட்சயமான நடிகர்களை இதில் அதிகளவில் நடிக்க வைத்துள்ளார் உதயா.
காவல்துறை அதிகாரிகளாக கோவை சரளா, ஸ்ரீமன் நடித்துள்ளனர். காமெடிதான் எடுபடவில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி நல்ல தேர்வு. குட்டி பத்மினிக்கு அந்த லோக்கல் குரல் கொடுத்தவர் யாரோ? இவருக்கு பொருத்தமாக இல்லை.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.

பிரபு பாடும் அந்த பாடல் நன்றாக இருந்தாலும் அந்த நாயகி மீது பிரபு கொண்ட நட்பு நம்பும் படியாக இல்லை. குறுகிய காலத்தில் அப்படியொரு நட்பில் அழுத்தம் இல்லை. பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

உதயா பைத்தியம் பிடித்து ஓடும் காட்சிகளில் பின்னால் வரும் குதிரைகள் கிராபிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது.

முதல் பாதியில் கதை கடுப்பாக ஆனாலும் 2ஆம் பாதியில் அதை சரி செய்து நமக்கு புரிய வைத்துள்ளார் டைரக்டர் ஆஷிப் குரேஷி.

தாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு தவறு செய்தால், அதன் விளைவு நம்மை என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வழியில்பாதிக்கும் என ஆணித்தரமாக சொன்ன குரேஷிக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம்.

வித்தியாசமான கதைக்களம் இருந்தும் ஒரு வலுவில்லாத நட்புக்காக இந்த பழிவாங்கல் இந்த கதை பயணிப்பதுதான் நம்பும் படியாக இல்லை.

கோடீஸ்வரான இருக்கும் உதயா உடையில் கூட கஞ்சத்தனம் செய்வது ஏன்? கோடீஸ்வரனாக அவரை காட்டியிருக்கலாமே. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ஜாய் கூட செய்யவில்லையே.

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா

Utharavu Maharaja review

Comments are closed.

Related News

பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே…
...Read More
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…
...Read More
தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர்…
...Read More