’ஒன் வே’ ONE WAY விமர்சனம்.; உயிரோடு விளையாடும் மிருதன்கள்

’ஒன் வே’ ONE WAY விமர்சனம்.; உயிரோடு விளையாடும் மிருதன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக நாயகன் பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஒன் வே’.

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கி உள்ளார்.

கதைக்களம்…

நாயகன் பிரபஞ்சன் நல்லதொரு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். இவரின் அம்மா கோவை சரளா, தங்கை ஆரா.

இவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியதால் பணம் கொடுத்த வினோத் சார்லஸ் திருப்பி கேட்கிறார்.

அதே சமயம் கடனை திருப்பி கொடுக்காத குடும்ப பெண்களை தனது ஆசைக்காக வற்புறுத்துகிறார்.

அதுபோல ஆரா-வையும் அனுப்பி வைக்க சொல்கிறார். வினோத்தின் கடனை அடைக்க பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக நினைக்கிறார்.

பணத்தை ரெடி செய்து வெளிநாட்டுக்கு போகும்போது மும்பையில் சிக்கிக்கொள்கிறார். இதனால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்.

அப்போது நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

ஏழை அப்பாவிகளின் உயிரை வைத்து பணக்காரர்கள்்விளையாடும் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு.

அந்தப் போட்டியில் வென்றால் கோடீஸ்வரன்.. தோற்றால் மரணம்..

இறுதியில் நாயகன் அதில் வெற்றி பெற்றாரா? அல்லது உயிரை விட்டாரா?, அந்த விளையாட்டு என்ன? என்பதே இந்த ‘ஒன்வே’.

கேரக்டர்கள்…

நாயகனாக பிரபஞ்சன். கிராமத்து யதார்த்த இளைஞனாக பொருந்துகிறார். குடும்ப சென்டிமெண்டிலும் பாஸ் மார்க் பெறுகிறார். தந்தை இறந்தபின் குடும்ப பாரத்தை சுமக்கும் போது பாவமாக தெரிகிறார்.

உயிரை எடுக்கும் பயங்கர விளையாட்டில் இவரின் தயக்கம் பயம் சிறப்பு. ஆனால் முக பாவனைகளில் மெச்சூரிட்டி போதவில்லை.

நாயகனின் தங்கையாக ஆரா. இயல்பாக இருக்கிறார். அப்பாவை இழந்த பின் இவர் காட்டும் சோகம்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் காட்டும் வேகம்.. என இரண்டிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.்

நாயகனின் அம்மாவாக கோவை சரளா. காமெடியில் கலக்கிய சரளா இதில் குணச்சித்திர நடிகையாக தன்னை நிரூபித்துள்ளார். இனி இவருக்கு ஏராளமான அம்மா வேடங்கள் வரும்.

சார்லஸ் வினோத்தின் நடிப்பு படம் பார்ப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்.

டெக்னீஷியன்கள்…

இந்த ‘ONE WAY’ படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பக்க பலமாய் அமைந்துள்ளது.

முக்கியமாக முத்துக்குமரனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.

குறிப்பாக உயிரை குறி வைத்து விளையாடப்படும் போட்டியை நம்மை அறியாமல் நம்மை பதற வைக்கும்.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கிராமத்தை அழகை காட்டும் போது கேமராவை ஓவராகவே ஆட்டி (Shaking) உள்ளது ஏன் என்று தெரியவில்லை.??

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் ஓகே.கிளைமாக்ஸ் காட்சியில் ஒலிக்கும் ‘சின்னஞ்சிறு கிளியே…’ பாடல் இதமான தாலாட்டு.

படத்தொகுப்பாளர் சரண் சண்முகம் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.சக்திவேல்.

விவசாயிகள் அவர்களது குடும்பம் படும் துயரங்களை முதல் பாதியில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அதே சமயம் ஏழைகளின் உயிரோடு விளையாடும் தொழில் அதிபர்களின் கோர முகத்தையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்த உலகில் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற ஆச்சரியத்தோடு காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.

ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் அந்த விளையாட்டையே காட்சிகளாக வைத்திருப்பது போர் அடிக்கிறது.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் வித்தியாசமான விளையாட்டை சொன்ன இயக்குநர் சக்திவேலுக்கு பாராட்டுக்கள்…

ஆக இந்த ‘ஒன் வே’… உயிரோடு விளையாடும் மிருதன்கள்

One Way movie review in tamil

நிவின்பாலி அதிதி நடித்த ‘படவேட்டு’ விமர்சனம்

நிவின்பாலி அதிதி நடித்த ‘படவேட்டு’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நிவின் பாலி, அதிதி பாலன், விஜயராகவன், மனோஜ் ஓமன், ஷம்மி திலகன், ஷைம் டாம் சக்கோ

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு : தீபக் டி மேனன்

இயக்கம்: லிஜ்ஜு கிருஷ்ணா

தயாரிப்பு: யோட்லி பிலிம்ஸ், சன்னி வயோன்

கதைக்களம்…

வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறார் நிவின் பாலி. இதனால் இவரது அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்குகிறார். ஒரு கட்டத்தில் இவர்களது ஏழ்மை நிலையை கண்டு அரசியல்வாதி ஒருவர் தன் சார்பாக அந்த வீட்டை புதுப்பித்து தருகிறார்.

மேலும் இந்த வீட்டிற்கு தாங்கள் தான் ஸ்பான்சர் என ஒரு கல்வெட்டு வைத்து செல்கிறார். இதனால் மக்களின் அவமான சொற்களை பெறுகிறார் நிவின்பாலி.

ஒரு கட்டத்தில் அந்த கல்வெட்டை இடித்து தள்ளுகிறார் நிவின். அந்த கல்வெட்டை இடித்தது கூட எதிர்க்கட்சி தான் என அரசியல் ஆதாயம் தேடுகிறார் அந்த அரசியல்வாதி.

மேலும் விவசாய நிலங்களை அபகரிக்க முயல்கிறார். இதனால் அந்த அரசியல்வாதியின் சூழ்ச்சி வலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முற்படுகிறார் நிவின்பாலி.

இறுதியில் வென்றது யார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நிச்சயமாக நிவின் பாலியை இந்த கேரக்டரில் அவரது ரசிகர்கள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மிகவும் குண்டாக மந்தமாக ஒரு துணை நடிகர் போலவே வருகிறார்.

இடைவேளைக்குப் பிறகுதான் தன் ஹீரோயிசத்தை காட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளும் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.

படத்தில் பெயரளவில் தான் நாயகி ‘அருவி’ அதிதி பாலன் வருகிறார். பெரிதாக காட்சிகள் இல்லை.

மற்றபடி படத்தில் வில்லனாக நடித்தவரின் நடிப்பு பேசப்படும். ஏதாவது ஒரு விஷயத்தை செய்து விட்டு அதில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அவரது கேரக்டர் தோலுரித்து காட்டுகிறது.

டெக்னீஷியன்கள்…

’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்தில் இசையமைத்துள்ளார். பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது.

பல காட்சிகளை தன் இசையால் மிரட்டி இருக்கிறார். ஆனால் இசைக்கு ஏற்ப காட்சிகள் தான் இல்லை.

ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனன் தன் பணியில் சிறப்பு.

ஒற்றுமையின்மையால் மக்கள் படும் அவஸ்தைகளையும்… நிலத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் வாழ்வியலோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் லிஜ்ஜு கிருஷ்ணா.

ஆக.. படவேட்டு… நில அரசியல்

காலங்களில் அவள் வசந்தம் 3.5/5.; காதலின் புது வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம் 3.5/5.; காதலின் புது வசந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி…

இயக்கம் – ராகவ் மிர்தத்

இசை – ஹரி எஸ்ஆர்

தயாரிப்பு – அறம் என்டர்டெயின்மென்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ்

ஒன்லைன்…

கல்யாணத்திற்கு பின் வரும் காதலைப் பற்றி சொல்கிறது இந்த படம். கணவன் – மனைவி இடையே ஈகோவையும் சொல்கிறது இந்த காதல் கதை.

கதைக்களம்…

நாயகன் கௌசிக் ராம். ஒரு பெண்ணை எப்படியெல்லாம் சினிமா பாணியில் காதலிக்க வேண்டும் என எழுதி வைத்து காதலிக்கிறார்.

அதன்படி சில பெண்களையும் காதலிக்கிறார். ஒரு நாள் ஹெரோஷினியிடம் கொட்டும் மழையில் நனைந்தப்படியே காதலை வெளிப்படுத்துகிறார்.

இதனிடையில்தான் கௌசிக்கை திருமணம் செய்ய விரும்புகிறார் அஞ்சலி நாயர். இருவருக்கும் திருமணமும் நடக்கிறது.

சில தினங்களில் அவரின் சினிமாத்தனமான காதலை பற்றி தெரிந்துக் கொள்கிறார் அஞ்சலி. உனக்கு சினிமாதான் காதல்.. என் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தாலும் நீ இப்படிதான் காதலிப்பாய் எனக் கூறி இவர்களுக்குள் ஈகோ சண்டை வருகிறது. இதனால் பிரிகின்றனர்.

அந்த சமயத்தில் முன்னாள் காதலி ஹிரோஷிணியை சந்திக்கிறார் கௌஷிக்.
அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை.

கேரக்டர்கள்…

செம ஸ்மார்ட்டாக.. துறுதுறு இளைஞனாக சாக்லேட் பாய்யாக வருகிறார் கௌஷிக்.

ஆக்ஷனில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் ரொமான்ஸில் பாஸ் மார்க் பெறுகிறார்.

எல்லாரையும் விட கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் அஞ்சலி நாயர். கணவனை உருகி உருகி காதலிப்பதாகட்டும்… அதன் பின்னர் பிரிவதாகும்… தனது நடிப்பில் மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார்.

அனுராதாவாக வரும் ஹெரோஷினி ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களை கவர்கிறார்.

நாயகனின் அப்பா மேத்யூ, அம்மா ஜெயா சுவாமிநாதன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

மழைக்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் எனும் ஒவ்வொரு காலத்தையும் தன் கேமரா கண்களில் படம் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்.

படத்தின் ஆரம்பம்.. இடைவேளை.. கிளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சிகளிலும் தன் ஃப்ரேமை நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.

ஹரி எஸ்.ஆரின் இசை படத்திற்கு கூடுதல் பலம். காதலர்களை கவர இசைதான் முக்கியம் என்பதை உணர்ந்து படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்.

எஸ்.கே. கலை இயக்கம் வேற லெவல். நாயகனின் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட ரசிக்க வைக்கிறது.

ராகவ் மிர்தத் படத்த இயக்கி இருக்கிறார். மொத்தமே படத்தில் ஒரு பத்து கதாபாத்திரங்களை வைத்து காதல்.. மோதல்.. குடும்பம்.. பெற்றோர் சிந்தனை.. காதலர்களின் மன மாற்றம்.. என அனைத்தையும் கலந்து கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.

ஆக காலங்களில் அவள் வசந்தம்.. காதலின் புது வசந்தம்

Kaalangalil Aval Vasantham movie review and rating in tamil

சர்தார் விமர்சனம்.; WATER MAFIA

சர்தார் விமர்சனம்.; WATER MAFIA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும் சைபர் கிரைம் பற்றி பேசிய இயக்குனர் 2வது படத்தில் கல்விக்கான அவசியத்தை பேசி இருந்தார்.

இந்த ‘சர்தார்’ படத்தில் தண்ணீருக்கான அவசியத்தை பேசி இருக்கிறார்.

இந்திய உளவுத் துறையின் உளவாளியாக நடித்திருக்கிறார் கார்த்தி.

கதைப்படி…

ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது ஒரு தனியார் நிறுவனம்..

இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் முழுக்கத் தனியார்மயமானால்… அதற்கும் விலை வைக்கப்பட்டால் என்னென்ன பிரச்சினைகளை இந்த நாடு சந்திக்கும்.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கார்த்தி இதற்கு முன் சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

இந்த படத்தில் வயதானவர் கெட்டப் இளமையான கெட்டப்.. ஆனால் வயதான கெட்டப்பிலும் இளமையாகவே இருக்கிறார்.

முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் இளமையான கார்த்திக் சண்டை போடுவது போலவே உள்ளது. உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன். ஆனால் மூவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

முனீஸ்காந்த் நடிப்பில் கவர்கிறார். வில்லன் சங்கி பாண்டே ஸ்மார்ட் வில்லன்.

குட்டி பையன் ரித்விக். நல்ல அறிமுகம்.. ஆனால் ப்ளூ பிரிண்ட் பாத்தேன்.. என இவர் சொல்ல சொல்ல கார்த்திக்கு சொல்வது எல்லாம் ரொம்ப ஓவர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவில் குறையில்லை.. கலர்ப்புல்லாகவே இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்க விடுகிறது.. பாடல்கள் சுமார் ரகமே..

முக்கியமாக படத்தின் வசனங்களை ஓவர்டேக் செய்கிறது பின்னணி இசை. இதனால் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

நாம் தற்போது குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.. வருடங்கள் செல்ல செல்ல துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் கிடைக்கும் நீரும் முழுக்க முழுக்க வியாபாரம் ஆனால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திப்போம் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் தண்ணீரால் எத்தனை நாடுகளில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? என்பதையும் சொல்லி இருக்கிறார்.

ஆனால் தண்ணீர் வியாபாரத்தை இன்னும் விரிவாக சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

ஆக சர்தார்… Water Mafia

 

பிரின்ஸ் விமர்சனம்.; சிவகார்த்திகேயன் சிரிக்க வைத்தாரா.?

பிரின்ஸ் விமர்சனம்.; சிவகார்த்திகேயன் சிரிக்க வைத்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு இந்திய பையன்.. அதுவும் தமிழ் பையன் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறார்.. இவர்களின் காதலும் இந்த காதலுக்கும் கிடைத்த எதிர்ப்புமே இந்த படம்..

கதைக்களம்…

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் சில பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் தங்கள் நாட்டுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.

அப்படி ஒரு குடும்பத்து வழியில் வந்தவர் நாயகி ஜெஸிகா (மரியா). இவர் ஒரு பள்ளியில் பணிக்கு சேர்கிறார்.

பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் மரியா அழகில் மயங்கி் காதலிக்க தொடங்குகிறார்.

முதலில் காதலுக்கு ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ்.. பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பதால் மறுப்பு தெரிவிக்கிறார்.

இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பெண்ணும் காதலில் இணைந்தார்களா? என்பதே பிரின்ஸ் கதை.

கேரக்டர்கள்…

காமெடி என வந்து விட்டால் சிவகார்த்திகேயனை கேட்கவே வேண்டாம். தன்னால் முடிந்தவரை எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

ஆடல் பாடல் என சிவகார்த்திகேயனின் வழக்கமான ஜாலியான கேரக்டரை பார்க்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் முகம் டல்லாக தோன்றுகிறது.

நாயகி மறியா அழகாக சிரிக்கிறார். நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்.

சத்யராஜ் காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல எவரும் எதிர்பாராத வகையில் சூரி ஒரு காட்சியில் வந்து அசத்துகிறார்.

ஆனந்தராஜ் வரும் காட்சி தியேட்டரில் அலப்பறை தான். பிரேம்ஜி காட்சி ஓகே.

டெக்னீஷியன்கள்…

தமன் இசையில் உருவான பாடல்கள் இளம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசை பரவாயில்லை.

மனோஜ் பரமாம்ஸாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நடன இயக்குனர்களுக்கு எக்ஸ்ட்ரா பாராட்டை தெரிவிக்கலாம்.

பிளஸ் பாயிண்ட் படத்தின் எடிட்டிங் தான். என்னதான் ஜாலியாக போனாலும் படத்தின் கதை மிகவும் எளிமையானது.

நீளம் அதிகமாக இருந்தால் பெரும் குறையாக இருந்திருக்கும். அதனை கரெக்டாக எடிட்டிங் செய்துள்ளார் எடிட்டர் ப்ரவீன் கே. எல்.

முக்கியமாக பள்ளிக்கூட காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

நிச்சயமாக 10 காட்சிகளில் நீங்கள் வாய்விட்டு சிரித்து மகிழ்வீர்கள்.

ஒரு சிம்பிளான கதையை ஜாலியாக சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குனர் அனுதீப்.

சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகாத நகைச்சுவை. காரணம் நகைச்சுவையை திணித்துள்ளார்.

ஆக இந்த தீபாவளிக்கு.. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்று பிரின்ஸ் படத்தை பார்க்கலாம்.

 

ஷூ பட விமர்சனம்.; டைம் மிஷின் எப்படி லக்கி?

ஷூ பட விமர்சனம்.; டைம் மிஷின் எப்படி லக்கி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை விற்கும் கும்பலிடம் இருந்து ஒரு ஷூ மூலம் சிறுமிகளை ஹீரோ காப்பாற்றுகிறார்.

கதைக்களம்…

இரண்டு டைம் டிராவல் மெஷின்களை கண்டுபிடிக்கிறார் திலீபன். அவை இரண்டையும் தன் இரண்டு ஷூக்களில் வைத்துக் கொள்கிறார்.

ஒரு ஷூ ஆனது பத்து நிமிடத்திற்கு முன்பு அழைத்துச் செல்லக்கூடியது. மற்ற ஷூவானது பத்து நாட்களுக்கு முன்பு அழைத்துச் செல்லக்கூடியது.

ஒரு கட்டத்தில் இவர் போலீஸில் சிக்கிக் கொள்ளவே தப்பிக்க ஷூவை ஒரு புதருக்குள் மறைத்து வைக்கிறார்.

இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு புறத்தில்… தனக்கு ராசியான கிழிந்த ஷூவை ப்ரியா என்ற சிறுமியிடம் தைக்க சொல்லி கொடுக்கிறார் யோகி பாபு.

ஆனால் அந்த சிறுமியின் குடிகார தந்தையோ அந்த ஷூவை தொலைத்து விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் புதருக்குள் கிடந்த ஷூவை யோகி பாபுவக்கு கொடுக்கிறார் பிரியா.

இதன் மூலம் யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டங்கள் அடிக்கிறது. எனவே தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த பிரியாவுக்கு உதவ நினைக்கிறார் யோகி பாபு.

இதனிடையில் சிறுமிகளை கடத்தும் பாலியல் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார் பிரியா.

அதன் பிறகு என்ன ஆனது? திலீபனுக்கு ஷூ கிடைத்ததா? யோகி பாபுவுக்கு அந்த ஷூவின் மகிமை தெரிந்ததா? பிரியா மீட்கப்பட்டாளா? என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

சிறிமி ப்ரியா அவ்வளவு அழகான நடிப்பை கொடுத்துள்ளார். யோகி பாபுவிடம் செல்லச் சண்டை போடுவதாகட்டும்… தன் தாயை இழந்து அவர் உருகுவதாகட்டும்.. எல்லா சிறுமிகளையும் மீட்க போராடும் முயற்சியாகட்டும் அனைத்தும் சிறப்பு.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அழகு அம்மாவாக உருகும் சிந்து நடிப்பையும் பாராட்டலாம்.

குடிகார தந்தையாக நடித்தவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.

யோகி பாபு கிங்ஸ்லி KPY பாலா மூவரும் நடித்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது சில காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர்.

திலீபன் ஷூவை எப்படி உருவாக்கினார் என்பதெல்லாம் படத்தில் காட்சிகளாக காட்டவில்லை?!

இந்த டைம் ட்ராவல் ஷூ யோகி பாபு கையில் கிடைத்தவுடன் அவருக்கு எப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அதுபோல திலீபன் ஷூவை புதருக்குள் மறைத்து வைக்கிறார். அதற்கு பதிலாக வெறுமனே ஷூ-வை அழுத்தினால் டைம் டிராவல் செய்து போலீஸிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இது போன்ற லாஜிக்கே இல்லாத காட்சிகளை படத்தில் வைத்துள்ளார் கல்யாண்.

கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென ஷூ மூலம் டைம் ட்ராவல் செய்து அந்த சிறுமிகளை காப்பாற்றுகிறார் திலீபன்.

அப்போதுதான் அந்த ஷூ என்ன மிஷன் என்று நமக்கு தெரிகிறது. இது படத்தின் பெயர் குறையாக உள்ளது. மற்றபடி டைம் ட்ராவல் மெஷின் படத்தில் காட்சியில் கூட காட்டவில்லை. மறைத்து வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சிஜி கிராபிக்ஸில் மட்டும் லைட்டிங் வருகிறது.

10 வயது கூட நிரம்பாத சிறுமிகளுடன் வயதானவர்கள் உறவு வைத்துக் கொள்ள தயாராகும் மாதிரியான காட்சிகளை வைத்திருப்பதை காண முடியவில்லை.

குழந்தைகளுக்காக இந்த படத்தை பார்க்கலாம். மற்றபடி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆக இந்த ஷூ… பெரிதாக கவரவில்லை.

Shoe movie review rating

More Articles
Follows