மலை(க்கும்)யாள பிரம்மாண்டம்..; மரைக்காயர் : அரபிக் கடலின் சிங்கம் 3.75/5

மலை(க்கும்)யாள பிரம்மாண்டம்..; மரைக்காயர் : அரபிக் கடலின் சிங்கம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால், சுனில் ஷெட்டி, சுஹாசினி, அசோக் செல்வன், ஹரீஸ் பீராடி, நெடுமுடி வேணு, முகேஷ் மற்றும் பலர்.

இசை : ராகுல்ராஜ், அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல்
ஒளிப்பதிவு : திரு
கலை : சாபு சிரில்.
இயக்கம் : பிரியதர்ஷன்
தமிழ் வசனம் & பாடல்கள் : ஆர்பி. பாலா
தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்.

ஒன்லைன் : 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்ற கடற்படை தலைவன் பற்றிய வீர வரலாறு.

கோழிக்கோடு நாட்டை ஆண்ட சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதியாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வாழ்க்கை கதை.

கதைக்களம்..

பெரும் செல்வந்தர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார் குஞ்ஞாலி மரைக்காயர். இதனால் இவரது சமூகத்தில் இவரது செல்வாக்கு மேலோங்கி நிற்கிறது.

ஒரு கட்டத்தில் கோழிக்கோடு சாம்ராஜ்யத்தை ஆளும் சாமூத்ரி ராஜ்ஜியத்தின் நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கின்றனர்.

இதனால் கொள்ளைக்காரனான குஞ்ஞாலியின் உதவியை நாடுகின்றனர் சாமூத்ரிகர்கள். அதன்படி அரசின் கடற்படைத் தளபதி பதவியும் கொடுக்கப்படுகிறது.

குஞ்ஞாலி மரைக்காயர் எப்படி போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

மேலும் குஞ்ஞாலியின் தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் உணர்வுப்பூர்வமான காதல் கதையும் உண்டு.

இதனிடையில் குஞ்ஞாலிக்கு கொடுக்கப்பட்ட பதவி சில சிற்றரசர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் அரசவையில் இருந்தும் கொண்டும் வெளியேறியும் குஞ்ஞாலிக்கு எதிராக சதிதிட்டம் போடுகின்றனர்.

இதனை முறியடித்தாரா குஞ்ஞாலி..?

கேரக்டர்கள்..

போர்ச்சுக்கீசியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த குஞ்சாலி மரைக்காயர் கேரக்டரில் மோகன்லால். உடல்மொழியும் தமிழ் உச்சரிப்பும் கூடுதல் ப்ளஸ். ஆக்சனிலும் அசத்தல் இந்த குஞ்ஞாலி லாலேட்டன்.

இளமைப்பருவ கேரக்டரில் அவரது நிஜ மகன் பிரணவ் மோகன்லாலே நடித்துள்ளார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரணவ் பின்னி எடுத்துள்ளார். இவரின் அம்மாவாக சுகாசினி. பாசமான அம்மாவாக கவர்கிறார்.

அழகான நாயகியாக வந்து சில நிமிடங்களிலேயே உயிரை விடுகிறார் கல்யாணி. இவர் இப்பட இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

ஹரீஷ் பெராடியின் மகன்களாக அர்ஜுன் & அசோக் செல்வன் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட வில்லன் வேடத்தில் அசோக் செல்வன். ஆனாலும் அசத்தல். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு வில்லத்தனம் செய்திருக்கிறார் அசோக் செல்வன்.

ஆக்சன் கிங் என்பதால் அர்ஜூனுக்கு ஏற்ற அனல் பறக்கும் சண்டைகளும் உள்ளன. ஆனால் இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.

முகேஷின் மகளாக கீர்த்தி சுரேஷ். கேரளத்து அழகில் கிறங்கடித்துள்ளார். அதுவும் அந்த சைனீஷ் வீரன் + கீர்த்தி காதல் வேற லெவல். டூயட் பாடலில் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி.

சைனீஷ் நடிகர் ஜெய் ஜே ஜக்ரிட்டின் ஆக்சன் காட்சிகள் அசத்தல்.

மோகன்லாலில் நண்பனாக பிரபு. சீரியஸ் படத்தில் கொஞ்சம் கலகலப்பூட்டி இருக்கிறார். உடல் எடையை குறைக்கலாமே சார்.

தலையில் முக்காடு.. வாடிய முகம்.. கணவனை இழந்த விதவை என கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர். இவரது கேரக்டர் க்ளைமாக்ஸ் எதிர்பாரத்த ஒன்றுதான். ஆனாலும் ஸ்கோர் செய்கிறார் மஞ்சு.

மோகன்லாலின் சித்தப்பாவாக சித்திக், நல்ல ராஜாவாக மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அமைச்சராக சுனில் ஷெட்டி & ஹரீஷ் பெராடி என அனைவரும் நம் மனதில் நிறைகின்றனர்.

டெக்னீஷியன்கள்..

ராகுல்ராஜின் பின்னணி இசையுடன் அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல் ஆகியோரின் பாடல்களும் பின்னணி இசையும் தெறிக்கவிட்டுள்ளனர்.

கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் போற்றப்பட வேண்டியவர்கள். காட்சிகளை அவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளனர்.

தமிழில் வசனம் & பாடல்கள் எழுதிய ஆர்.பி. பாலாவின் பங்கு அளவிட முடியாது. மலையாள மணமே தெரியாத அளவிற்கு தமிழ் வாசனையை படரவிட்டுள்ளார்.

இடைவேளை சமயத்தில் வரும் கடல் சண்டை அசத்தல். தண்ணீரே இல்லாமல் ஃகிராபிக்ஸ் வைத்து சூட் செய்துள்ளனர். கலை இயக்குனருக்காவே இந்த படத்தை மற்றொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுத்துள்ளார் சாபுசிரில்.

போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. சாமுத்ரி & மரைக்காயர் படைகள் மோதும் யுத்த களம் வேறலெவல்.

பொதுவாக இதுபோன்ற பாகுபலி படத்துடன் ஒப்பிடப்படும். பாகுபலியில் 2000 போர் வீரர்கள் இருந்தால் இதில் 500 வீரர்கள் உள்ளனர். படத்தின் பட்ஜெட்டால் அது அப்படி அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட அரண்மனையை வெளியே காட்டாமல் உட்புறத்தில் காட்டியுள்ளனர்.

படத்தின் பெரிய பிரச்சினையே மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைக்கதை தான். ஆங்காங்கே யூகிக்க முடியாத சில ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

கிராபிக்ஸ், சிறந்த நடிகர்கள், பின்னணி இசை, கலை ஒளிப்பதிவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் உலகத் தரத்தில் ஒரு மலையாள சினிமாவை கொடுத்துள்ளார் தேசிய விருதுகளை வென்றுள்ள பிரியதர்ஷன்.

இந்த பிரம்மாண்ட மரைக்காயர் படத்தை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

ஆக… மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படம் மலையாள சினிமாவின் மலைக்க வைக்கும் பிரம்மாண்டம்.

Marakkar: Arabikadalinte Simham Movie Review and rating in Tamil

இயற்கை இல்லையேல் இன்பமேது..? வனம் விமர்சனம்… 2.75/5

இயற்கை இல்லையேல் இன்பமேது..? வனம் விமர்சனம்… 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… இயற்கையின் முக்கியத்துவத்தை மறுபிறவி, பழி வாங்கல் என திகிலோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.

கதைக்களம்..

அழகம் பெருமாள் FINE ARTS கல்லூரியை நடத்தி வருகிறார். அங்குள்ள விடுதியில் 1013 என்ற அறையில் தங்கி படித்து வருகிறார் நாயகன் வெற்றி.

அந்த அறையில் தொடர் தற்கொலைகள் நடக்கிறது. ஒரு பட்டாம் பூச்சி பறந்துவரும் போதெல்லாம் இந்த சம்பவம் நடப்பதை அறிகிறார் வெற்றி. அப்போது தன் சிறுவயது தோழி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு தன்னுடைய யூடிப் சேனலுக்கு டாக்குமெண்டரி படம் எடுக்க வருகிறார்.

அப்போது அந்த தொடர் தற்கொலைகள் குறித்தும் அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது குறித்தும் ஸ்மிருதியிடம் சொல்கிறார் வெற்றி.

எனவே இவர்கள் இணைந்து சில ஆராய்ச்சிகளை செய்து அந்த தற்கொலைக்களுக்கான காரணங்களை தேடுகின்றனர்.

வெற்றி அதை கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க என்ன காரணம்? அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

நாயகனாக ஜீவி படத்தில் நடித்த வெற்றி நடித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. தன் கேரக்டரில் நிறைவு.

ஆனால் இவரைப் போன்ற நடிகர்கள் ஏன் தாடியை எடுப்பதில்லை என்று தெரியவில்லை. தாடியுடன் இருப்பதால் இவரை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. (எல்லாம் மாணவர்களுமே இப்போது தாடியுடன் தான் இருக்கிறார்கள் என்பது வேறுகதை.)

வண்ணாத்திப்பாறை என்ற அழகிய கிராமத்திற்கு ஏற்ப மிக அழகாக இருக்கிறார் அனு சித்தாரா (இவர் மலையாள சினிமாவில் பிரபலம்). தன் உருண்ட விழிகளால் நம்மை ரசிக்கவும் வைக்கிறார். அழவும் வைக்கிறார்.

ஆனால் இவர் மட்டும் இவ்வளவு அழகாக சிகப்பாக இருக்கிறார். மற்ற மனிதர்கள் கறுப்பாக அழுக்காக இருக்கிறார்கள். எனவே அந்த கிராமத்து மனிதர்களுடன் இவரது கேரக்டர் ஒட்டவில்லை.

ஸ்மிருதி வெங்கட் அழகான திறமையான நடிகை. தடம் மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்தவர் இந்த ஸ்மிருதி. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளார்.

வெற்றிக்கும் ஸ்மிருதிக்கும் உள்ள டூயட் பாடல் அழகு. ஆனால் ரொமான்ஸ் தான் பத்தவில்லை.

அழகம் பெருமாள் திடீரென மாறுவது திரைக்கதையில் ட்விஸ்ட். வேல ராமமூர்த்தி வழக்கம்போல தன் கேரக்டரில் மிரட்டல். இவரின் சுயசரிதையை எழுத வரும் அந்த நபரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கலை இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே வேண்டும். ஜமீன்தார் காலத்திலும் சரி.. பைன் ஆர்ட்ஸ் காஜேஜ் என்பதாலும் அதற்காக நிறைய உழைத்துள்ளார். பழைய காலத்து பொருட்களை அடுக்கி வைத்து நம்மை அசரவைத்துள்ளார். சபாஷ் சார்.

த்ரில்லர் படங்கள் என்றால் இசையமைப்பாளருக்கு ஸ்வீட் சாப்பிடுவது போல. அதை சரியாக உணர்ந்து இசையை மிரட்டலாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோன் எதான் யோஹசன். பாடல்களும் ஓகே.

பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து பறக்க புறப்படும் காட்சி அழகோ அழகு. வண்ணாத்திப்பாறையை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். சில காட்சிகள் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்வது போல உள்ளது.

இன்றைய காலக்கட்டம்… அன்றைய ஜமீன்தார் காலம் என இரண்டையும் மாயக்கண்ணாடி மூலம் இணைத்திருப்பது நல்ல விஷயம்.

விவசாயத்தை காக்க விவசாயிகள் சிலர் தற்கொலை செய்வது போல காடுகளை காக்க அந்த மக்கள் இறப்பது நம்மை கண்கலங்க வைக்கும். ஆனால் எவரும் இறந்து எதையும் காப்பாற்றிட முடியாது. வாழ்ந்துதான் நமக்கு தேவையானவற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தொடர் தற்கொலைகள் நடந்தாலும் யாரும் எதையும் கண்டுக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்ப்பது சரியில்லை தானே. ஒரு போலீஸ் கூட வரவில்லையே. இதுபோன்ற லாஜிக்கை கவனித்திருக்கலாம்.

கதை சொன்ன விதத்தில் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஆர்ட்.. ஒளிப்பதிவு… இசை.. நடிகர்கள் என கவனம் செலுத்திய இயக்குனர் இன்னும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அந்த அறையில் உள்ளவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்பது என்ன காரணமோ? தெரியலையே. அவர்கள் செக்ஸ் வைப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு இந்த பிரச்சினை ஏன்.? அவரை குறிவைப்பது ஏன்.?

இறுதியாக இயற்கையை அழித்துவிட்டால் நமக்கு இன்பம் ஏது? என கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கூஜா(து)வம்சம்.. ராஜவம்சம் விமர்சனம்.. 2.25/5

கூஜா(து)வம்சம்.. ராஜவம்சம் விமர்சனம்.. 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம்புலி, யோகிபாபு, ஆடம்ஸ், சரவணா சக்திமணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தானலட்சுமி, சசிகலா, யமுனா, மணிசந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கதைக்களம்..

சென்னையில் மிகப்பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் சசிகுமார். இவருக்கு அடிக்கடி பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. பல காரணங்களால் பெண் கிடைக்காமல் திருமணம் தள்ளிப்போகிறது.

அந்த சமயத்தில் இவரை நம்பி ஒரு பெரிய ப்ராஜக்ட்டை எடுக்கிறார் கம்பெனி முதலாளி ஜெயப்பிரகாஷ்.

இந்த நிலையில் வீட்டு விசேஷத்தில் இருந்து தப்பிக்க நிக்கி கல்ராணியை தன் காதலியாக நடிக்க கேட்கிறார் சசிகுமார். அதற்கு பணமும் கேட்கிறார் நிக்கி.

அதன்படி காதலர்களாக இருவரும் ஊருக்கு செல்கின்றனர். ஆனால் அங்கே இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

தன் பாசமான குடும்பத்திற்காக கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாரா சசி.? காதலியாக நடிக்க வந்த நிக்கி என்ன செய்தார்.? ஆபிஸ் ப்ராஜக்ட் முடிக்கப்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கிராமத்து கதை என்றாலும் சசிகுமாருக்கு வேஷ்டி சட்டை கொடுக்காமல் ஐடி கம்பெனி ஊழியர் என்பதால் ரேமாண்ட் மாடல் போல ஸ்மார்ட்டா காட்டியிருக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய ஆறுதல்

சமுத்திரக்கனி இல்லாத வேலையை இந்த படத்தில் செய்துள்ளார் சசிகுமார். யப்ப்பா இவரே அட்வைஸ் மழை பொழிகிறார். இதில் போதாகுறைக்கு நிக்கி கல்ராணி வேற…

க்ளைமாக்ஸ் சமயத்தில் குடும்ப உறவுகளின் தத்துவம் பேசுகிறார். எல்லாம் சரி தான். ஆனால் அதை அழகாக உணர்வுப்பூர்வமாக
சொல்ல வேண்டாமா? என்னமோ மனப்பாடம் செய்துவிட்டு பேசுவது போல உள்ளது.

இந்த முறை ஆக்சனில் மட்டும் அதிக அக்கறை எடுத்துள்ளார் சசிகுமார். மற்றபடி காதல் காட்சிகளில் சுத்தமாக ஒட்டவில்லை.
நிக்கியை தீடீரென ராதாரவி மகளாக பாவிப்பது நம்பும்படியாக இல்லை.

ராமராஜன் ஸ்டைலில் “செண்பகமே… செண்பகமே…” என்ற பாடலுடன் அறிமுகமாகிறார் யோகிபாபு. ஆனால் காமெடியும் வரலையேப்பா.. சிங்கம் புலி காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

சாம்ஸ், மனோபாலா, தம்பி ராமையா, ராஜ்கபூர், ராதாரவி இருந்தும் சரியாக காமெடிகள் இல்லை. ஒரே காட்சியில் தம்பி ராமையாவின் மீசை பெரிதாக இருக்கிறது. பின்னர் அதுவே சிரியதாக இருக்கிறது. இதை கூடவா உதவி இயக்குனர்கள் கவனிக்கவில்லை.

படத்தின் மைனஸ்…

சசிகுமார் செய்யவுள்ள ப்ராஜக்ட்க்கு 3 மாதங்கள் கொடுக்கப்படுகிறது. பின்னர் நாட்கள் குறைக்கப்படுகிறது. அப்போது 8 மணி நேரம் வேலையை இனி 16 மணி நேரமாக பார்ப்போம் என்கிறார் சசி. அதுவரை தான் ஆபிஸை காட்டுகிறார்கள். அதன்பின்னர் என்னாச்சு..? ஒரு முறை கூட எவருமே ப்ராஜக்ட் செய்வதாக காட்சிகள் இல்லை.

கேட்டால் சசி டீம் லீடர் என்பார்கள். ப்ராஜக்ட்டுக்காக தான் நிக்கியே சசிக்கு ஓகே சொல்கிறார். க்ளைமாக்ஸில் ப்ராஜக்ட் சக்ஸஸ் என காட்டுகிறார்கள். சரி ஆபிஸ் ஒர்க்கை தான் சரியாக காட்டவில்லை. குடும்பத்தையாவது சரியாக காட்டினார்களா? ஒரு காட்சியில் யோகிபாபுவே சிலருக்கு டயலாக் கூட இல்லை என கிண்டல் அடிக்கிறார்.

நிக்கி தான் ஒரு அனாதை என்கிறார். அதுநாள் வரை சசி குடும்பத்துடன் காணப்படும் நிக்கியை மணமேடைக்கு அழைக்கும் வரை யாருமே கூட இருக்கமாட்டார்களா? முகூர்த்த நேரத்தில் தேடுவது போல காட்டுகிறார்கள்..??

ராதாரவியின் 2 மகள்களை யோகிபாபு ஒரே நேரத்தில் மணக்க சம்மதிக்கிறார். ஒரே நேரத்தில் 2 பேரை மணப்பது எப்படி சாத்தியமாகும். சரி அப்படியே இருந்தாலும் அந்த 2 பெண்களை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.

சசியின் நண்பர் சதீஷ் ஓரிரு காட்சியில் சிரிக்க வைத்துள்ளார். இப்போது சதீஷ்ம் ஹீரோவாகிவிட்டதால் காமெடி வரவில்லையோ? இவர்களின் நண்பனாக வரும் ஆடம்ஸ் ஏன் படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. குடித்துவிட்டு மற்றவர்கள் டான்ஸ் ஆடும்போது தனியாகவே நிற்கிறார். ஆனால் அவரை அடிக்கடி காட்டுகிறார்கள். சரி ஏதாவது சொல்ல வருகிறார் இயக்குனர் என்றால் அதுவும் இல்லை.

ஜெயப்பிரகாஷ் மற்றும் ஐடி வில்லன்கள் என பயங்கர பில்டப் கொடுத்துள்ளனர். ஆனால் அவை பெரிதாக எடுப்படவில்லை.

இப்படியாக நிறைய காட்சிகளில் கண்டியூனிட்டி இல்லை.

படத்தில் விஜயகுமார், சுமித்ரா, ரேகா, நிரோஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

ஊரிலேயே மரியாதையான குடும்பம் என்கிறார்கள். ஆனால் அப்பாவை வாடா போடா என அழைக்கிறார் யோகிபாபு. இவையில்லாமல் நிரோஷாவை அக்னி நட்சத்திரம் என்றும் ரேகாவை ஜெனிஃபர் டீச்சர் என்றும் அழைக்கிறார். (அவர்கள் நடித்த படங்களாக இருந்தாலும்) இது போன்ற டயலாக்குகள் எல்லாம் தேவையே இல்லாத ஆணிகள்.

டெக்னீசியன்கள்..

சில இடங்களில் பின்னணி இசையில் கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஆக்சன் காட்சிகள் நன்றாக உள்ளது.
ஒருவேளை இவருக்கு கிராமத்து சாங் செட்டாகவில்லையோ? பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. “மாப்ளே.. மஜா மஜா மாப்ளே…” என்ற பாடல் ரசிக்க வைத்துள்ளது.

சித்தார்த்தின் ஒளிப்பதிவுதான் படத்தை கொஞ்சமாச்சும் காப்பாற்றியுள்ளது எனலாம். சண்டைக் காட்சிகளையும், கிராமத்து காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.

படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனதில் ஒட்டும்படியான டயலாக் இல்லை. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் குடும்பத்தில் அவ்ளோ பேர் இருந்தும் அனைவரின் கேரக்டரும் மனதில் ஒட்டும்படியாக இருக்கும்.

ஏன் சுந்தர் சி படங்களிலும் அப்படிதானே இருக்கும். இப்பட இயக்குனர் கதிர்வேலு அவர்கள் சுந்தரின் உதவியாளராக இருந்தும் அவரின் டச் இவரிடம் இல்லை என்பது வருத்தமே.

ஆக ராஜவம்சம்.. கூஜா துவம்சம் தான்..

Rajavamsam movie review rating

எழுதப்பட்ட ரூபாய் நோட்டால் குழந்தை மரணம்.; ரூ 2000 விமர்சனம்

எழுதப்பட்ட ரூபாய் நோட்டால் குழந்தை மரணம்.; ரூ 2000 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..
ரூபாய் நோட்டுக்களில் சிலர் எழுதிவிடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தான் கதை. இதனால் ஒருவர் தன் குழந்தையையே இழக்கிறார். அப்படி என்ன தான் நடந்தது.?

கதைக்களம்..

திருமணமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கனுக்கு பிறகு அப்புசாமி என்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறக்கிறது.

குழந்தைக்கு சுவாசத்தில் பிரச்சினை இருப்பதால் அவசரமாக ஒரு மருந்தை வாங்கி வரச்சொல்கிறார் டாக்டர். அரசு மருத்துவனையில் இல்லாத காரணத்தால் வெளியே இருந்து வாங்கி வரச்சொல்கிறார்.

எனவே அப்புசாமி தனியார் ஏடிஎம்’ல் பணம் எடுக்கிறார். அதில் 500 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லாத காரணத்தினால் ரூ 2000 நோட்டு மட்டுமே கிடைக்கிறது. அந்த ரூபாய் நோட்டில் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. அவரின் வங்கி கணக்கில் வேறு பணமும் அவரிடம் இல்லை.

அந்த நோட்டில் எழுதப்பட்டதால் மருந்து கடைகளில் இந்த நோட்டு செல்லாது எனக்கூறி மருந்தினை தர மறுக்கின்றனர். அவர் செல்போனை வைத்துக் கொண்டு மருந்து கொடுங்கள் என கூறினாலும் அவர்கள் வாங்க மறுக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்று அந்த 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக வேறு ரூபாய் கேட்கிறார். ஏடிஎம்களில் இதுபோல் நோட்டுக்கள் இருக்காது. நீங்கள் எங்கள் வங்கி வாடிக்கையாள்ர் கிடையாது என பல காரணங்களை கூறி மேனேஜர் வேறோரு நோட்டு தர மறுக்கிறார்.

இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை செல்கிறது. இதுபோன்ற கால தாமத்தால் சரியான நேரத்திற்கு மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துவிடுகிறது.

20 வருடங்கள் காத்திருந்து பெற்ற குழந்தை இப்படி ரூபாய் நோட்டில் எழுதப்பட்டதாலும் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இறந்துவிட்டதே என ஆவேசப்படும் அப்புசாமி அவர்களுக்கு பாடம் புகட்ட புறப்படுகிறார்.

அப்போது அப்புசாமிக்கு உதவும் நோக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இவரை சந்திக்கும் சமூக சேவை வழக்குரைஞர் பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்கிறார்.

குழந்தையின் மரணத்திற்கு காரணமே ஏடிஎம்’ல் இருந்து எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுதான் என பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.

இதில், தவறு செய்தவர்களை நீதிமன்றம் எப்படி தண்டித்தது.? தண்டிக்க சட்டத்தில் இடம் உண்டா.? வழக்கறிஞர் எப்படி வாதாடினார்? அரசு தரப்பு வக்கீல் இவரை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

உண்மையான கடமை தவறாத வழக்குரைஞராக வந்த பாரதி கிருஷ்ணகுமார் தான் படத்தின் கதையின் நாயகன் எல்லாம். இவர் மறந்து கூட ஆங்கில வார்த்தைகளை பேசவில்லை படத்தில். செல்போனை கூட அலைபேசி என்றே அழைக்கிறார்.

கோர்ட்டில் ஜட்ஜை கூப்பிடும் போது கூட அம்மா அம்மா என்றே அழைக்கிறார். இவர் அப்புசாமிக்காக வாதாடும் போது இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

ஒரு சாதாரண ரூ 2000 நோட்டுதானே.. அதில் எழுதியது குற்றமா? என நாம் நினைக்கலாம். ஆனால் இதில் எத்தனை விஷயங்கள் அடங்கியுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பணி என்ன? அதற்கு அரசுக்கும் என்ன சம்பந்தம்?

வங்கியின் வேலை என்ன? ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏஜெண்ட் எப்படி? அவர்களின் பணி என்ன? செக்யூரிட்டியின் பணி என்ன? என பக்கம் பக்கமாக பாடம் நடத்தியுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் இத்தனை அதிகாரிகள் உள்ளார்களா? அவர்களின் பணி என்ன? தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசே இதில் தலையீடுவது ஏன்-? அரசு தரப்பு வக்கீல் சாட்சிகளை மாற்றுவது எப்படி? போலீஸ் அதிகாரிகள் எப்படி பொய் சாட்சிகளை உருவாக்குகிறார்கள்? என ஜெய்பீம் படம் போல கண் முன் காட்டியுள்ளார்.

பாவப்பட்ட ஆசாமியாக அப்புசாமி. அவரும் ஒரு டிவியில் நிகழ்ச்சியில் பேசும்போது கவனிக்க வைக்கிறார்.

அரசு வழக்குரைஞராக நடித்துள்ள கராத்தே வெங்கடேஷ் என்பவரும் நம்மை கவனிக்க வைக்கிறார். இந்த சின்ன விஷயத்திற்காக ரூ 1 கோடி வரை அவர் லஞ்சம் கொடுக்க ரெடியாகிறார். அப்படி என்றால் இந்த 2000 நோட்டின் விவகாரத்தை நீங்களே படம் பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் மருந்து இல்லாத காரணத்தினால் தானே அந்த குழந்தை இறந்தது. அதற்கு ஏடிஎம் மற்றும் வங்கி பொறுப்பல்ல. அரசு மருத்துவமனையே பொறுப்பு என இவர் சொல்லும்போது அரசுக்கு எதிராக இவரே செயல்படுவாரோ? என வியப்பும் வருகிறது.

இப்படத்தின் நடுவே சாதி திருமணம்… ஆணவக் படுகொலை என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ருத்ரன்.

இதனை காட்டியிருப்பதால் படம் வேறு ரூட்டில் சில நேரம் பயணிக்கிறது.

ஒரு நாட்டுக்கு தேவையான விழிப்புணர்வை சொல்ல வந்த இயக்குனர் ஒரு சீரியல் போல சொன்னதால் சோர்வை தருகிறது. மேலும் படத்தின் காட்சிகளில் நாடகத்தன்மை அதிகமாக உள்ளது.

படத்தின் முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை கோர்ட்டை மட்டுமே காட்டியிருப்பதுடன் அதில் சுவாரஸ்யம் கலந்து சொல்லியிருக்கலாம்.

இனியவனின் தன் இசையில் இன்னும் மெனக்கெட வேண்டும். பிரிமூஸ் தாஸின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் வைத்த கேமராவை அப்படியே வைத்தது போல உள்ளது. நிறைய காட்சிகளில் இதுவே எரிச்சலைத் தருகிறது.

நாம் அலட்சியமாக ரூபாய் எழுதுவதால் இத்தனை பிரச்சினைகளா? என வியக்க வைத்த இயக்குனர் ருத்ரனை பாராட்டலாம். இதற்காக ஒரு அரசாங்கமே இறங்கி வருவதும்.. உள்துறை அமைச்ச அதிகாரிகள் வரை பேரம் பேசுவதும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆக.. 2000 படம் இந்தியர்களுக்கு சரியான பாடம்.

Rs 2000 movie review rating

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… டைம் லுப்பில் சிக்கி கொள்ளும் சிம்பு எப்படி தன்னையும் தன் சார்ந்தோரையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை. கடந்த வாரம் வெளியான ஜாங்கோ திரைப்படமும் இதே டைம் லூப் கதைதான். அதாவது ஒரு நாள் தனக்கு நடந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடப்பதே டைம் லூப்.

கதைக்களம்..

துபாய் நாட்டில் இருந்து தமிழகம் வருகிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இவர் டைம் லூப்பில் சிக்கிக்கொள்கிறார். மேலும் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் திறன் சிம்புக்கு கிடைக்கிறது.

விரைவில் நடைபெறவுள்ள ஒரு மிகப்பெரிய மாநாட்டில் முதல்வருக்கு அசம்பாவிதங்கள் நடைபெறவுள்ளதாக அறிகிறார். எனவே அந்த சூழ்நிலையை எப்படி மாற்றியமைக்கிறார் என்பதே கதை ஓட்டம்.

சிம்பு மற்றும் வில்லன் எஸ்ஜே சூர்யா… இருவருக்குமான மோதலே இந்த மாநாடு.

கேரக்டர்கள்..

சிம்புக்கு இந்த படம் ஒரு கம்பேக் எனலாம். மனிதர் தாறுமாறாக புகுந்து விளையாடி இருக்கிறார். படத்தில் சொல்வது போல பக்கா எனர்ஜியுடன் திரும்ப வந்துவிட்டார் சிம்பு. ஸ்டைலிஷ் லுக்… ஸ்லிம் சிம்பு என ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா என்று சொல்வதைவிட இவர்தான் 2வது ஹீரோ எனச் சொல்லலாம். அவருக்கே உரித்தான ரிப்பீட் டயலாக்குகள் படத்தல் ஏராளம்.. இருக்கு ஆனா இல்ல என்பாரே அது போலத்தான்.

நாயகி கல்யாணியை விட வில்லன் எஸ்ஜே சூர்யாவுடன் தான் சிம்புக்கு செம கெமிஸ்ட்ரி. பொதுவாக சிம்பு படங்களில் ரொமான்ஸ் செமயாய் இருக்கும். ஆனால் இதில் அந்த ஹீரோயின் ரொமான்ஸ் மிஸ்ஸிங்.

இவர்களுடன் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏ சந்திரசேகர், Y G மகேந்திரன் என்று அனைவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம். வெங்கட் பிரபு படம் என்றால் பிரேம்ஜி இல்லாமலா..? அவரும் உண்டு.

இடைவேளைக்கு பிறகு சிம்பு, எஸ் ஜே சூர்யா, Y G மகேந்திரன் மூன்று பேரும் இணைந்து வரும் காட்சிகளில் செமயாய் என்ஜாய் பண்ணலாம்.

டெக்னீஷியன்கள்…

தீவிரவாதிகளில் ஏதுடா சாதி மதம் எல்லாம் என சிம்பு பேசும் டயலாக்குகள் சூப்பர். அனல் தெறிக்கும் பைட்கள்.. செம மாஸ் எனலாம்.

போகிற போக்கில் அரசியலையும் லேசாக தட்டி சென்றுள்ளார் டைரக்டர் வெங்கட்பிரபு. படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து பல மாதங்கள் காத்திருந்து தியேட்டர்களில் வெளியிட்ட சுரேஷ் காமாட்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இது நிச்சயம் தியேட்டருக்கான படம் தான்.

பின்னணி இசையில் ஜீனியர் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் யுவன். ர்ர்….ர்ர்..ரட்ட்ட்டா… ர்ர்ரட்டா.. என்ற பின்னணி இசை நீங்கள் படம் முடிந்து வெளியே வந்தாலும் உங்கள் மைண்ட்டில் ரீங்காரமிடும்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தன் பணியில் மிகச்சிறப்பு. மாநாடு என்றாலே மிகப்பெரிய கூட்டம் இருக்கும். அதை நேர்த்தியாக அழகாக படம் பிடித்துள்ளார்.

இது டைம் லூப் படம் என்பதால் படத்தின் காட்சிகள் திரும்ப திரும்ப வரும். ஆனால் அதை சரியாக கையாண்டு இருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு.

ஒரு சில இடங்களில் சலிப்பு வருகிறது. அதை எடிட்டர் பிரவீன் கே எல் மிகைப்படுத்தாமல் கத்திரி போட்டிருக்கலாம்.

சிலருக்கு சில காட்சிகள் புரியாவிட்டாலும் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி கொடுத்திருப்பது சிறப்பு. மங்காத்தா படத்திற்கு பிறகு தனக்கும் ஒரு திருப்புமுனை எதிர்பார்த்தார் வெங்கட் பிரபு. அதை இந்த மாநாடு நிச்சயமாக கொடுக்கும்.

இந்த பட கதைக்காக சிம்பு என்பதை காட்சிகளில் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு.

ஆக மாநாடு… இது சிம்பு ரசிகர்களுக்கான டைம் லூப்

Simbu in Maanaadu movie review and rating in tamil

சச சச சச சபாஷ் சாண்டா..; சபாபதி விமர்சனம் 3.5/5

சச சச சச சபாஷ் சாண்டா..; சபாபதி விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன் : திக்குவாய் பிரச்னை உள்ள சந்தானம் வாழ்வில் விதி விளையாடுகிறது..

சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

கதைக்களம்…

திக்கி திக்கி பேசும் பிரச்சினை உள்ளதால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார் சந்தானம் (சபாபதி).

எதிர் வீட்டுப் பெண் சாவித்ரியும் இவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அப்போது இருந்தே சபாபதிக்கு துணையாக இருக்கிறார் சாவி (ப்ரீத்தி ஷர்மா).

திக்குவாய் பிரச்னைகளால் பல வேலை வாய்ப்புகளை இழக்கிறார் சந்தானம்.

சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர் தன் பணி ஓய்வுக்கு பிறகு சந்தானத்தை நம்பி தானே குடும்பம் இருக்கிறது. அவனுக்கு வேலை கிடைக்காதததால் விரக்தியில் இருக்கிறார்.

ஒருநாள் சந்தானத்தின் நண்பன் புகழ் இவரை சரக்கடிக்க தூண்டி விடுகிறார்.

முதன்முறையாக சந்தானம் குடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார். அன்று முதல் விதி அவரது வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

விதியின் விளையாட்டில் சிக்கிய சபாபதி என்ன செய்தார்? எப்படி சமாளித்தார்.? எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நக்கல்… நையாண்டி… கவுண்டர் குடுத்தே பழக்கப்பட்டவர் சந்தானம். ஆனால் இதில் கேரக்டருக்கு ஏற்ப அடக்கி வாசித்துள்ளார். சபாஷ் சாண்டா… (சந்தானத்தை ரசிகர்கள் இப்படிதான் அழைப்பார்கள்)

தன்னால் கவுண்டர்கள் கொடுக்காமல் நடித்தும் அசத்த முடியும் என நிரூபித்துள்ளார். அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கிறது.

அதுவும் குடித்த விட்ட அன்றும் அடுத்த நாளும் சந்தானம் செய்யும் சேஷ்டைகள் சிரிப்புக்கு கியாரண்டி. ஹீரோயினை விட எம்எஸ் பாஸ்கருடன் சந்தானத்திற்கு செம கெமிஸ்ட்ரி. அதகளம் செய்துள்ளனர்.

எம்எஸ் பாஸ்கர் எப்போதும் போல அசத்தல்.

அழகு பெண்ணாக ப்ரீத்தி ஷர்மா. கவர்ச்சி காட்டாமல் கண்களால் கவர்கிறார். இன்னும் நடித்திருக்கலாம். சாரி ப்ரீத்தி.

விஜய் டிவி பிரபலம் புகழ் நண்பராக வருகிறார். புகழ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட குடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். பெரிய காமெடிகள் இல்லை.

உமா, சாண்டா சிஸ்டர், ஹீரோயின் அம்மா, மயில்சாமி, மதுரை முத்து, குடிகார மாறன், கோதண்டம் உள்ளிட்ட பலர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இவர்களை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

லொள்ளு சபா சுவாமிநாதன் வழக்கமான பாணியில் சிரிக்க வைத்துள்ளார். ரிட்டையர்மெண்ட்க்கு அப்புறம் வீட்டில் படும் அவஸ்தைகளை அப்பட்டமாக சொல்லி நடித்துள்ளார்.

வம்சி & சாயாஜி ஷிண்டே வில்லன் நடிப்பில் கச்சிதம். தேவைக்கேற்ற நடிப்பு.

டெக்னிஷீயன்கள்..

சாம் சி.எஸ்-ஸின் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். எடிட்டர் லியோ ஜான் பால் தேவையற்ற நடிகர்களின் காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம்.

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

சந்தானத்தை வித்தியாசமாக காட்டிய இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் அவர்களை நிச்சயம் பாராட்டலாம்.

முக்கிய மைனஸ் : படம் முழுக்க திக்கு வாயாக வரும் சந்தானம் டூயட் பாடலில் மட்டும் நன்றாக பாடுகிறார். அதை திக்குவாயாக வித்தியாச பாடலாக காட்டியிருக்கலாம்.. அல்லது பின்னணியில் பாடல் ஒலிக்க இவர்கள் ஆடுவதாக காட்டியிருக்கலாம். பல இயக்குனர்கள் பாடல் காட்சியில் மட்டும் இதை கருத்தில் கொள்வதில்லை.

மற்றபடி குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் சபாபதியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக… சச சச சச… சபாஷ் சாண்டா

Sabhapathy movie review and rating in tamil

More Articles
Follows