First on Net சாமி ஸ்கொயர் விமர்சனம்

First on Net சாமி ஸ்கொயர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் மற்றும் பலர்
இசை – தேவி ஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ்,
எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்
பாடலாசிரியர் – விவேகா,
கலை – பி.சண்முகம், பி.வி.பாலாஜி,
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா,
ஆடை வடிவமைப்பு – நீராஜா கோனா,
தயாரிப்பு – சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி,
எழுத்து, இயக்கம் – ஹரி.
பி.ஆர்.ஓ. – யுவராஜ்

கதைக்களம்…

முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்றுவிட்டு காணாமல் போனதாக காட்டிருப்பார். அதன் தொடர்ச்சியா இப்படம் தொடர்கிறது.

காணாமல் போன அண்ணாச்சி என்ன ஆனார்? என்பதை தெரியாமல் அவரின் அடியாட்கள் தவிக்கிறார்கள். தகவல் இலங்கையில் உள்ள அண்ணாச்சி குடும்பத்திற்கு பறக்கிறது. உடனே பெருமாள் பிச்சையின் 3 மகன்களும் திருநெல்வேலிக்கு வருகிறார்கள்.

தன் தந்தை என்ன ஆனார் என இறங்குகிறார் 3வது மகன் பாபி சிம்ஹா. அப்போதுதான் ஆறுச்சாமி தான் தன் தந்தையை கொன்றார் என்பது தெரிய வருகிறது.

அதன்பின்னர் அவரின் குடும்பத்தையே காலி செய்கிறார் பாபி சிம்ஹா.

ஆறுச்சாமிக்கு பிறக்கும் மகன் பின்னர் விஸ்வரூபம் எடுத்து சில வருடங்களுக்கு பிறகு வருகிறார். அவர் எப்படி வில்லனை பழி வாங்கினார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சாமி ஸ்கொயர் என்ற பெயரிலேயே தெரிகிறது. 2 சாமிகளின் பவர். ஆறுச்சாமியாக கலக்கியவர் இதில் ராமசாமியாக களம் இறங்கியுள்ளார்.

தாய் வயித்துல பொறக்கல பேய் வயித்துல பொறந்தேன்..… சாமி இல்ல பூதம் என (நல்ல வேளை படத்தில் பேய் டயலாக் இல்லை) பேசி வசனத்திற்கு ஏற்ப பிரித்து மேய்ந்திருக்கிறார்.

முதல் பாதியில் மினிஸ்டர் பிரபுக்கு பாதுகாப்பு ஆபிசராக அமைதியாக வந்து அசத்துகிறார். ஆறுச்சாமியின் வரலாறு தெரிந்த பின் அவதாரம் எடுக்கும் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு அல்வா. பைட் சீன்களில் அனல் தெறிக்கிறது.

10 வருடங்களுக்கு பிறகும் அதே உடல்வாகுடன் விக்ரம் வருவது உண்மையிலேயே அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

கீர்த்தி சுரேஷ் முதலில் திமிராக வந்து பின்னர் விக்ரமையே சுற்றி சுற்றி திரிகிறார். மினிஸ்டர் மகள் என்றாலும் நார்மல் சுடிதார் என ஹோம்லியாகவே வருகிறார். மாடர்னாக வந்திருக்கலாமே அம்மணி…

மினிஸ்டர் மகள் கீர்த்தியின் கிழிந்த சுடிதாரை ஐஏஎஸ் மாணவர் தைத்து கொடுப்பது எல்லாம் ஓவர். கீர்த்தியுடன் கெமிஸ்ட்ரி இல்லையே விக்ரம் சார்.? என்னாச்சு

புது மெட்ரோ ரயில் பாடல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் விக்ரம் மற்றும் கீர்த்தியின் குரல்கள் பழைய கரி ரயிலை போல கரகர இருக்கிறது. தயவுசெய்து பாடல்களை படிக்க வேண்டாமே கீர்த்தி.

காக்கா முட்டை, தர்மதுரை படங்களில் நம்மை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நம்மை ஏமாற்றிவிட்டார். அவர் பாஷையில் சொன்னால் நம் கண்களில் மிளகாய் பொடியை போட்டு எரிச்சலை ஏற்படுத்திவிட்டார்.

மீண்டும் ஜிகர்தண்டா வில்லன் பக்கா மாஸ். பாபி சிம்ஹா வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவரின் கண்கள் முதல் உடம்பு வரை பவர் ஏற்றி ராவணன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பிரபு அவரின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கச்சிதம். அதுபோல் சுதா சந்திரன் கேரக்டர் சிறப்பு.

பாபியின் அண்ணன்களாக வரும் ஜான்விஜய், சுந்தர் கேரக்டர்களில் வலுவில்லை. இதே கதைதான் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ், சுமித்ரா, டெல்லி கணேஷ் கேரக்டரிகளிலும் தொடர்கிறது.

முதல் பார்ட்டில் விவேக் காமெடி நன்றாக இருந்தது. ஆனால் இதில் சூரி… முடியலடா சாமி.. சூரி சார். வீ ஆர் வெரி சாரி சார். சூரியின் மொத்த காட்சிகளை எடுத்துவிட்டால் படம் நிச்சயம் காப்பாற்றப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தேவி ஸ்ரீபிரசாத் பின்னணி இசையில் மட்டுமே கவர்கிறார். மிளகாய் பொடி, டர்னக்கா பாடல்கள் தேவையே இல்லாத உணர்வை ஏற்படுத்துகிறது.

ஹரி படம் என்றாலே டாட்டா சுமோ இல்லாமல் இருக்குமா? இதிலும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதில் இன்னும் வித்தியாசமாக ஒட்டக சேஷிங் வேற வைத்துவிட்டார்.

பிரியன் ஒளிப்பதிவில் காட்சிகளை பிரியத்துடன் ரசிக்க முடிகிறது.

காஞ்சனா படம் போல் தனி தனியாக படம் எடுத்துவிட்டு காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று சொல்லாமல் சாமி படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை எடுத்துள்ள ஹரிக்கு முதலில் ஹாட்ஸ் ஆஃப் சொல்லிவிடுவோம்.

முதல் பாகத்தில் வந்த மாமி த்ரிஷா இல்லேன்னா என்ன? ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்துவிட்டார். ஆனால் மாமி வேடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாதவர். ரசிகர்கள் பாவம். மிஸ் யூ த்ரிஷா மாமி.

பிராமின் பாஷை சுட்டுப் போட்டாலும் கீர்த்திக்கும் சரி (ஒரு காட்சியில் பேசுவார்), ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் வரவில்லை.

ஹரி படம் என்றால் டாடா சுமோ சேஷிங், அதிரடி சண்டை, குடும்ப சென்டிமெண்ட், ஓவர் ஸ்பீடு காட்சிகள் இருக்கும். ஆக ஆறுசாமி அளவுக்கு ராமசாமி இல்லை என்பது வருத்தம்தான்.

சாமி ஸ்கொயர்… சாமி வேட்டையில் சூரி சேட்டை

Saamy Square aka Saamy 2 review rating

யுடர்ன் விமர்சனம்

யுடர்ன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமந்தா, ஆதி, ஆடுகளம் நரேன், நரேன், பூமிகா மற்றும் பலர்
இயக்குனர் – பவன் குமார்
இசை – அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி
ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி
வெளியீட்டு உரிமை : தனஞ்செயன்

கதைக்களம்…

சமந்தா ஒரு பத்திரிகையாளர். அங்குள்ள ஒரு சக ஊழியரை காதலிக்கிறார். இருவரும் சென்னையில் பணி புரிகின்றனர்.

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் செல்லும் ட்வீலர்கள் நடுவில் இருக்கும் கற்களை அகற்றி வைத்து யூடர்ன் போட்டு செல்கின்றனர். இதை பார்க்கும் சமந்தா அங்கு ப்ளாட்பார்மில் வசிக்கும் ஒருவரிடம் யுடர்ன் போடும் வண்டிகளின் நம்பர்களை குறித்து வைத்து தன்னிடம் தர சொல்கிறார் சமந்தா.

இதை வைத்து ஒரு செய்தியை வெளியிட நினைக்கிறார்.

அவர் குறித்து தரும் அந்த வண்டி ஓட்டுனர்கள் எல்லாம் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

காவல்துறையும் இதை ஒரு பொருட்டாக கருதாமல் விசாரணையை மூட நினைக்கின்றனர்.

ஆனால் நேர்மையான அதிகாரி ஆதியும் சமந்தாவும் குழப்பம் அடைகின்றனர்.

யுடர்ன் போடுபவர்கள் மட்டும் மரணமடைவது ஏன் என்பதை கண்டு பிடிக்க, தானே ஒரு நாள் யுடர்ன் போடுகிறார் சமந்தா. அதன்பின்னர் என்ன ஆனது?

அவர் மரண அடைந்தாரா? தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

மரத்தை சுற்றி ஆடி பாடி டூயட் இல்லாத கதை. அப்படி இருந்தும் இந்தை கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் சமந்தா. அதற்காகவே சமந்தாவுக்கு ஒரு பெரிய சபாஷ் சொல்ல வேண்டும்.

எனக்கு ஒன்னுமே தெரியாது. வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்? என அப்பாவியாக அவர் கேட்கும் கேள்வி முதல், கொலைக்கான காரணத்தை அவர் அறிய செய்யும் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

பின்னர் கொலை எப்படி நடக்கிறது? என்பதை தெரிந்துக் கொண்ட பின் ஏற்படும் பதட்டத்தையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நேர்மையான மிடுக்கான போலீசாக ஆதி அசத்தல். தன் கீழ் வேலை செய்யும் மற்ற போலீஸ்களை அதட்டாமல் அவர் வேலை வாங்கும் முறைகளை நிறைய நிஜ போலீசார் கற்றுக் கொள்ள வேண்டும்.

உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் இவருக்கு நேர் எதிர். கடுப்பான போலீஸ் அவர்.

பூமிகாவும் அவரது மகளும் சிறிய வேடத்தில் வந்தாலும் நிறைவு.

மலையாள நடிகர் நரேன் தன் மகளை தானே கொன்று விட்டதை எண்ணி எடுக்கும் முடிவில் ஒரு அன்பான அப்பாவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் இல்லாமல், படத்தின் பின்னனி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர். அவருக்கும் பாராட்டுக்கள்.

கொலை மேல் கொலை, யாரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட். தவறான எண்ணை பூமிகாவுடம் கொடுத்து விட்டோம் என சமந்தா தவிக்கும் அனைத்தும் செம ட்விஸ்ட்.

யுடர்ன் இடம், அந்த சாலைகளை அனைத்தையும் லாங் ஆங்கிளில் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

யுடர்ன் செய்ய, போக்குவரத்து விதிகளை மீறி நாம் செய்யும் அலட்சியத்தால் எத்தனை உயிர் போகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் பவன்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. அதை தவிர்த்திருந்தால் இன்னும் ஸ்பீடு கிடைத்திருக்கும்.

இந்த படத்தை பார்த்த பிறகாவது சாலை விதிகளை மதித்து யுடர்ன் அடிக்காமல் யாராவது திருந்தினால் அதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.

யு டர்ன் – ஆச்சர்ய யுடர்ன் அடிக்க ஒரு படம்

U turn review and rating

சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்
இசை – இமான்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – பொன்ராம்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா & ரேகா
தயாரிப்பு – 24ஏஎம். ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா

கதைக்களம்…

சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். அவரது தந்தை நெப்போலியன்.

ஒரு சூழ்நிலையில் தங்கள் சொத்தை ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

சொத்து போனாலும் ஊர் மக்கள் மத்தியில் கெத்தாக வாழ்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு கணக்கு பிள்ளைதான் சூரி.

பக்கத்து ஊரான புளியம்பட்டி டீச்சர் சமந்தா மீது காதல் கொண்டு அவர் பின்னாலேயே சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிங்கப்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் பிரச்சனை தொடர்கிறது.

புளியம்பட்டியில் பெரிய வீட்டுக்காரர் லால் மற்றும் சிம்ரன். ஒரு சூழ்நிலையில் சிம்ரனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் வலுக்கிறது.

அப்போதுதான் தன் குடும்ப பின்னணியையும் சமந்தாவின் தந்தை விவரமும் சிவாவுக்கு தெரிய வருகிறது.

அப்படி என்ன பின்னணி? அதன்பின்னர் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? காதல் கை கூடியதா? என்பதே இந்த சீமராஜாவின் கதை.

கேரக்டர்கள்…

வேலையில்லாத வழக்கமான வாலிபர் கேரக்டர்தான் சிவாவுக்கு. ஆனால் அதையும் ரசிக்கும்படி கெத்து காட்டியிருக்கிறார் சீமராஜா.

சமந்தாவின் காதலுக்காக பின்னால் சுற்றுவது முதல் சந்தைக்காக சவால் விடுவது முதல் சிவகார்த்திகேயன் ராஜ்யம்தான்.

அரச பரம்பரை வம்சாவழி என்பதால் அதற்குரிய கெத்துடன் ரகளை செய்துள்ளார். சிவாவும் சூரியும் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லை. காமெடிக்கு புல் கியாரண்டி.

சத்யராஜ்-கவுண்டமணி காமெடி கூட்டணிக்கு நிகராக சிவகார்த்திகேயன்-சூரி காமெடி கால காலமாக நிற்கும்.
படம் முழுவதும் சூரியையும் இணைத்து கொண்டுள்ள சிவகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டலாம்.

இதில் சூரிக்கு சிக்ஸ் பேக். அவரும் அதற்கான உழைப்பை கொடுத்துள்ளார்.

பிடி டீச்சராக சமந்தா. பெண்கள் சிலம்பம் சுற்றினாலே அழகுதான். அதிலும் அழகு சிலை சமந்தா சிலம்பம் சுற்றினால் அது மிகச்சிறப்பு தான். ஆனால் பைட் ஆரம்பிக்கும்போது ஹீரோ வந்துவிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லியாக சிம்ரன். இவருடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளார் லால். இந்த ஜோடியும் கலக்கல்தான். ஆனால் அடிக்கடி சிம்ரன் கத்துவது ஏன் என்றே தெரியவில்லை.??

நெப்போலியன் கேரக்டரை நிமிர செய்திருக்கிறார்.

பீரியட் கால கதையில் அழகு ராணியாக கீர்த்தி சுரேஷ். சிறப்பு தோற்றம் என்றாலும் குறையில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் கிராமத்து மெல்லிசை. வாரேன் வாரேன் சீமராஜா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை கவரும். மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவு செம கலர்புல்லாக கொடுத்திருக்கிறார் பாலசுப்ரமணியம். இவரது பணியை பாராட்டியே ஆக வேண்டும்.

அரசர் கால கதை பின்னணி இசையில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். விஜய், அஜித் ரெப்பரசன் தவிர்த்திருக்கலாம். கட்டாயமாக சேர்த்து விட்டதாக தோன்றுகிறது.

கடம்பவேல் ராஜா கேரக்டர் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் நாம் பார்த்த அந்த கெமிஸ்ட்ரியை இதில் பார்க்க முடியவில்லை.

இது இளைஞர்களுக்கான படமா? காதல் படமா? விவசாயம் படமா? அரசர் காலத்து படமா? என்பதில் நமக்கே குழப்பம் வந்துவிடுகிறது.

முதல் பாதியில் இருந்த கலகலப்பு இரண்டாம் பாதியில் செம மிஸ்ஸிங். மற்றபடி கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சீரியஸ் என கலந்துக் கொடுத்துள்ளார் பொன்ராம்.

பழைய ரஜினிகாந்தின் கமர்சியல் படங்களின் கலவையாக இப்படத்தை கொடுத்துள்ளார் பொன்ராம்.

ஒரு சில குறைகள் இருந்தாலும் சிரித்து விட்டு வரலாம்

படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா நிறையவே செலவு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

சீமராஜா.. செம ராஜா

Seemaraja review rating

வஞ்சகர் உலகம் விமர்சனம்

வஞ்சகர் உலகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – குருசோமசுந்தரம், சிபி புவன சந்திரன், விஷாகன், ஜான்விஜய், அனிஷா ஆம்புரோஸ், சாந்தினி தமிழரசன், அழகம்பெருமாள், வாசு விக்ரம், மற்றும் பலர்.
இயக்குனர் – மனோஜ் பீதா
கதை & வசனம் – விநாயக்
இசை – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு – ரோட்ரிகோ டெல் ரியோ, சரவணன் ராமசாமி
பிஆர்ஓ- சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

ஜெயப்பிரகாஷ் மற்றும் சாந்தினி கணவன் மனைவி. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு அருகில் வீட்டில் இருக்கும் நாயகன் சிபி சந்திரன், திருமணமானவள் சாந்தினி என்பதை தெரியாமல் காதல் கொள்கிறார். இருவரும் செக்ஸ்ம் வைத்துக் கொள்கின்றனர்.

இதனிடையில் ஒரு நாள் சாந்தினி கொலை செய்யப்படுகிறார். இதனால் காரணம் தெரியாமல் தவிக்கிறார் சிபி. ஆனால் உண்மையை வெளியே சொன்னால் தாம் மாட்டிக் கொள்வோம் என்பதால் மறைக்கிறார்.

இதை போலீஸ் ஒரு புறம் விசாரிக்கிறது. மற்றொரு புறம் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இதில் துப்பு துலக்க இறங்குகின்றனர்.

இந்த இரு விசாரணைகளும் ஒவ்வொரு பக்கம் செல்கிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? சிபி மாட்டிக் கொண்டாரா? அவரின் லீலைகள் தெரிந்துவிட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் படத்தின் ஹீரோவா அல்லது வில்லனா? என்பதே தெரியாத அளவுக்கு ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் ஸ்கோர் செய்கிறார்.

ஏன்டா? டான் எல்லாம் 6 அடிதான் இருக்கனுமா? என்னைப் போல 5.5 அடி இருந்தால் நம்ப மாட்டீங்களா? என்று போலீசை போட்டுத் தள்ளும்போது ரசிக்க வைக்கிறார்.

மாணவன், கேங்ஸ்டர் என இரண்டில் பயணித்தாலும் மாணவன் கேரக்டரில் இவரின் முக முதிர்ச்சி காட்டிக் கொடுத்து விடுகிறது. ஆனால் அதில் இவருக்கும் இவரது நண்பருக்கும் உள்ள உறவு நெருடலாக உள்ளது.

நாயகன் சிபி சந்திரனுக்கு இதுதான் முதல் படம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு கூலாக வருகிறார். தன்னுடன் பணி புரியும் பெண்ணைத் திட்டும் போது கெத்து காட்டுகிறார்.

ஆனால் சாந்தினியை திட்டும் போது டயலாக்கை மறந்துவிட்டது போல தோன்றுகிறது. நிறுத்தி நிறுத்தி பேசுவதை தவிர்த்திருக்கலாம்.

சாந்தமாக வந்து நடிப்பை ரசிக்க வைத்துள்ளார் சாந்தினி.

கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாளர்களாக வரும் ஆண், பெண் இருவரும் நல்ல தேர்வு. அந்த பெண் அனிஷா ஆம்ப்ரூஸ்ம் ரசிகர்களை ஈர்ப்பார்.

இவர்களுடன் ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி உள்ளிட்ட பாத்திரங்கள் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வசனங்களால் வர வைக்க முடியாத சிரிப்பை சில காட்சிகளில் சைகையால் வர வைத்துவிட்டார் டைரக்டர்.

முதல் பாதியை முழுவதுமாக கண் கொட்டாமல் பார்த்தாலும் பலருக்கும் படம் புரிய வாய்ப்பு இல்லை. இடைவேளை வரை என்ன படம்? என்பதை குழப்பமாகவே நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியில் நல்லவேளையாக காப்பாற்றி விட்டார்.

புதுவிதமாக ஒரு படத்தை கொடுக்க நினைத்துள்ளார் மனோஜ் பீதா.

நிறைய காட்சிகளை வெட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் எடிட்டர் கவனிக்கவில்லை போலும். ஜான் விஜய் கடலில் பேசும் காட்சிகள் எல்லாம் நீளத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

பின்னணி இசையில் தன் மிரட்டலை கொடுத்துள்ளார் சாம்.சி.எஸ்.. வன்முறை காட்சியில் ஒரு கர்நாடிக் பாடலை போட்டு வித்தியாசம் காட்டியுள்ளார். பாடகியின் குரலும் அந்த காட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

வஞ்சகர் உலகம்… வித்தியாச உலகம்

Vanjagar Ulagam Movie review rating

அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன், சத்யா, யோகிபாபு, டி.பி.கஜேந்திரன், சபரி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரூபாஸ்ரீ,
இயக்குனர் – கேசவன்
இசை – டேவிட் ஷார்ன்
ஓளிப்பதிவு –நவநீதன்
பிஆர்ஓ – ஜான்சன்
தயாரிப்பார் – கதிரவன் ஸ்டூடியோஸ் கதிரவன்

கதைக்களம்…

படத்தில் நான்கு ஹீரோக்கள். எனவே அவர்களுக்கு நான்கு காதல் கதைகள்.

3 நண்பர்களின் காதலும் தோல்வியில் முடிகிறது. (3 காதலும் அவர்களின் பிரிவுக்கான காரணம் அனைத்தும் ரசிக்க வைக்கும்).

இவர்கள் காதலில் தோல்வி அடைந்து விட்டதால், சேர முடியாதவர்களை சேர்த்து வைப்பதே தங்கள் லட்சியம் என்று கொள்கையை வைத்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் 4வது வரும் நண்பரின் காதலை சேர்த்து வைக்க கேரளாவுக்கு பயணிக்கின்றனர்.

இவர்களின் மற்றொரு நண்பரான பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.

அங்கு என்ன ஆனது.? நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது? நண்பனின் காதலை சேர்த்து வைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் நாயகனாக பூவரசன். நாயகியாக அனுபமா பிரகாஷ். எல்லாருக்கும் இது முதல் படம் என்பதால் இன்னும் நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சிக்க வேண்டும். ஜாலியாக நடித்து கொடுத்துவிட்டுள்ளனர்.

நண்பர்களாக நடித்திருப்பவர்கள், அவர்களின் காதலிகள் அந்த பிரிவுகள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கும்.

யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்தும் காமெடியில் இல்லை. ஏதோ ஒரு சில காட்சியில் சிரிப்பு மூட்டுகிறார் யோகிபாபு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தோனும். நவநீதனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

சின்ன சின்ன காதல் கதையை இளைஞர்களுக்காக உருவாக்கியுள்ளார் டைரக்டர். முதல் பாதி செல்வதே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.

அவளுக்கென்ன அழகிய முகம்… பார்க்கும் முகமே…

First on Net தொட்ரா விமர்சனம்

First on Net தொட்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிருத்வி பாண்டிராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் மற்றும் பலர்.
இசை – உத்தமராஜா
ஒளிப்பதிவு – ஆஞ்சி
படத்தொகுப்பு – ராஜேஷ் கண்ணன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – இயக்குநர் பாக்யராஜின் சீடர் மதுராஜ்
பி.ஆர்.ஓ. – அ. ஜான்
தயாரிப்பு – ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் (ஜெய்சந்திரா சரவணக்குமார்)

கதைக்களம்…

தொட்ரா.. தைரியம் இருந்தா தொட்டு பார்ரா என்பார்களாலே அந்த தோனியில் தொட்ரா என்ற தலைப்பில் வந்திருக்கும் படம் தான் இது.

தர்மபுரியில் நடைபெற்ற இளவரசன் திவ்யா ஜாதி கலப்பு திருமணத்தை அடிப்படையாக கொண்டு கமர்சியல் கலந்து ஓர் உண்மைச் சம்பவத்தை படமாக்கியுள்ளார் மதுராஜ்.

அந்த தைரியத்திற்காகவே அவரை பாராட்டி இந்த விமர்சனத்தை தொடங்கலாம்.

தன் ஜாதி கௌரவத்தை காப்பாற்றுவதற்காகவே வாழ்ந்து வருபவர் எம்.எஸ். குமார். இவரின் மனைவி மைனா சூசன்.

குமாருக்கு ஓர் அழகான தங்கை வீணா. அவரை காதலிக்கிறார் நாயகன் பிருத்வி பாண்டியராஜன்.

இவர்களின் காதலுக்கு ஜாதி ஒரு தடையாக இருக்கிறது. இவர்களின் காதலை தெரிந்துக் கொண்ட அண்ணன் தன் தங்கையை அவர்களின் ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் செய்து வைக்கிறார்.

இதனை மீறி வீணாவை அழைத்துக் கொண்டு பறக்கிறார் பிருத்வி.

ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கிறார் வெங்கடேஷ். அதே சமயம் வீணாவை மீது காமம் கொண்டு அவளை அடைய நினைக்கிறார்.

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் நடித்து வீணாவின் அண்ணனிடம் இவர்களை காட்டிக் கொடுக்கிறார்.
அதன்பின்னர் என்ன நடந்தது..? வில்லனிடம் சிக்கினாரா பிருத்வி..? தன் மனைவியை எப்படி காப்பாற்றினார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் விடை கொடுத்துள்ளார் டைரக்டர் மதுராஜ்.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பத்து யதார்த்த இளைஞராக பிரகாசிக்கிறார் பிருத்வி. பேப்பர் போட்டு தன் குடும்பதை காப்பாற்று முதல் நாயகியுடன் டூயட் வரை பாடி செல்கிறார். முக பாவனைகளில் இன்னும் முதிர்ச்சி தேவை.

நாயகனை மிஞ்சி தன் மிரட்டல் நடிப்பால் ஜொலிக்கிறார் தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான எம்எஸ். குமார். ஜாதி கௌரவம் ஒரு பக்கம், தங்கை பாசம் மறு பக்கம் என மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

தன் மனைவியின் பணத்தாசை மீறி இறுதியில் இவர் எடுக்கும் ஒரு முடிவு ஒரு பாசமலரை நினைவுப்படுத்தும்.
காதல், அண்ணன் பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்தையும் கண்களில் காட்டி நம்மை தவிக்க விட்டுள்ளார் வீணா. நைட்டி, சுடிதார், புடவை என அனைத்து உடையில் நம்மை ஈர்க்கிறார்.

அழகும் திறமையும் நிறைந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வர வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இவரது பூர்விகம் கேரளா.

நாயகி வீணாவை வைத்து கேமராவில் கவிதை வாசித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி.

கல்யாணம் என்று வந்துவிட்டால் பெரும்பாலான பெண்கள் காதலனா? குடும்பமா? என தவிப்பார்கள். அதையும் நாசூக்காக தன் நடிப்பில் சொல்லிவிட்டார் வீணா,

உதவி செய்வதுபோல் நடித்து டபுள் கேம் விளையாட்டில் வென்றுள்ளார் வெங்கடேஷ். இவருக்கு பக்கபலமாக கூல் சுரேஷ்.

மைனா படத்தில் போலீஸ் மனைவியாக கலக்கிய சூசன் இதிலும் மிரட்டல். தன் கண்களிலேயே அதிரடி காட்டியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் உத்தம ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சிம்பு குரலில் ஒலிக்கும் பக்கு பக்கு என்ற பாடலும் நிச்சயம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

அதிலும் ஒளிப்பதிவாளர் ஆஞ்சியின் காட்சியமைப்பு அருமை.

படம் முடிகிறது என்று நாம் நினைக்கையில், அதன் பின்னர் ஒரு ட்விஸ்ட் கொடுத்து படத்தை இன்னும் நீட்டிவிட்டார் எடிட்டர். இதனால் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

பாக்யராஜ் சீடர் என்றாலும் அவரை போல சமாச்சாரங்களை இடம் பெறாமல் செய்துள்ளார் மதுராஜ்.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என முதல் படத்தை ஏனோ தானோ கொடுக்காமல் ஜாதியை ஒழிக்க டைரக்டர் எடுத்துள்ள முயற்சிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஜாதி என விஷ காற்றை நாம் சுவாசித்தால் ஆபத்து என்பதையும் அடித்து சொல்லியிருக்கிறார் மதுராஜ்.

ஒரு நல்லவனை அவன் சாதி அதன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கெட்டவன் அவன் சாதியை தன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொல்(ள்)கிறான் என்பதே டைரக்டர் டச்.

தொட்ரா… ஜாதி வெறியர்களுக்கு காதல் சவுக்கடி

Thodra aka Thodraa movie review rating

More Articles
Follows