உள்குத்து விமர்சனம்

உள்குத்து விமர்சனம்

நடிகர்கள் : தினேஷ், நந்திதா, சரத்லோகித்ஸ்வா, பாலசரவணன், ஸ்ரீமன், செப் தாமு, திலீப் சுப்பராயன் மற்றும் பலர்
இயக்கம் : கார்த்திக் ராஜு
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: பிகே பிலிம்ஸ் விட்டல் ராஜ்

கதைக்களம்…

தான் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்று மீனவ குப்பத்தில் உள்ள பாலசரவணன் உடன் அறிமுகமாகிறார் தினேஷ்.

படித்தவனை தன்னுடன் வைத்துக் கொண்டு அங்கு சுறா சங்கர் என்ற அட்டகாசம் செய்கிறார் பாலசரவணன்.

இதனிடையில் பாலாவின் தங்கை நந்திதாவை காதலிக்கிறார் தினேஷ்.

எனவே தன் தங்கை படித்தவனுக்கு கட்டி வைத்து அவனது சொத்தை கைப்பற்றி விடலாம் என ப்ளான் போடுகிறார் பாலா.

ஒரு கட்டத்தில் ஊர் தாதா சரத் லோகிதாஸ்வானின் மகன் திலீப் சுப்பராயனை கத்தியால் குத்தி கொலை செய்கிறார் தினேஷ்.

அப்படியென்றால் தினேஷ் யார்? எதற்காக கொல்கிறார்? அவரது பின்னணி என்ன? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

 

DSLvrnFV4AIpufX

 

கேரக்டர்கள்..

ஏற்கெனவே தினேஷ்க்கு ரொமான்ஸ் வராது. எனவே தனக்கு ஏற்றவாறு ஒரு அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிலும் மீனவ மக்களின் லுங்கி, சட்டை என அப்பட்டமாக அவர்களைப் போல் வாழ்ந்திருக்கிறார்.

நந்திதா அழகாக வருகிறார். ஆனால் இவரது கேரக்டர் அந்த மீனவ பகுதியில் ஒத்து போகவில்லை.

‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று பன்ச் பேசியே ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார் பாலசரவணன்.

DSM3hJGVwAAQ3cr

 

இவரை தன் குருநாதர் என தினேஷ் வில்லனிடம் மாட்டிவிட அதிலிருந்து மீள முடியாமல் மிரட்டி பேசுவது ரசிக்க வைக்கிறது.

உன்னை விசாரணை படத்துல அடிச்சது தப்பே இல்லைடா என்னும்போது நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்.

முதல்பாதியில் ஸ்ரீமனுக்கு சரியாக கேரக்டர் இல்லையே என நினைக்க தோன்றுகிறது. ஆனால் 2ஆம் பாதியில் அதை ஈடு செய்துவிட்டார் டைரக்டர்.

ஸ்ரீமன், ஜான்விஜய், சாயா சிங் ஆகிய மூவரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.

சரத்லோகிஸ்த்வா மற்றும் திலீப் சுப்பராயன் இருவரிடமும் மிரட்டலான நடிப்பை கேட்டு வாங்கியிருக்கிறார். இருவரும் வில்லன் கேரக்டரை தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் பேசும் விதமே நமக்கு கோபத்தை வரவைக்கிறது.

பஞ்சாயத்து தலைவராக வரும் செஃப் தாமுவும் நம்மை கவர்கிறார்.

DRoaWqzVoAAqxWr

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் பலம் சேர்க்கின்றனர்.

அதிலும் பின்னணி இசை கோர்ப்பு செம குத்து.

மீனவ பகுதி வீடுகள் அது சார்ந்த இடங்கள் மார்கெட் அனைத்தும் சபாஷ் ரகம்.

தினேஷ் யார்? அவருக்கு பின்னணி என்ன? உள்ளிட்ட ப்ளாஷ்பேக் காட்சிகளை நன்றாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மீனவ மக்கள் மொழி நம் மொழியில் இருந்து சற்று மாறுபடும். ஆனால் இதில் கொஞ்சம் கூட இல்லை.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படம் முழுவதும் ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார் இயக்குனர்.

உள்குத்து.. மாஸ் குத்து

Comments are closed.