சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

நடிகர்கள் : திலீப் சுப்பராயன், கீதா, பேபி மோனிகா மற்றும் 9 குழந்தைகள் மற்றும் பலர்
இயக்கம் : மாரிசன்
இசை : ஷபீர்
ஒளிப்பதிவு: ரவி கண்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: சினிமாவாலா பிக்ச்ர்ஸ் சதீஷ் அண்ட் லியோ விஷன்ஸ்

sangu villain

கதைக்களம்…

பொதுவாக பேய் படம் என்றால் பொறுமையாக காட்சிகளை நகர்த்தி பின்னர் பயமுறுத்த முயற்சி செய்வார்கள். அதிலும் ப்ளாஷ்பேக் இல்லாமல் பேய் படமே இருக்காது.

இந்த இரண்டையும் உடைத்தெறிந்துவிட்டார்கள் சங்குசக்கரம் படக்குழுவினர்.

ஆரம்ப காட்சியிலே பேய் படம் என்பதையும் சொல்லிவிட்டு ப்ளாஷ்பேக் இல்லாமல் கதையை முடித்திருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு பாழடைந்த பழைய பங்களா உள்ளது. கோடிக்கணக்கில் மதிப்பு பெறும் அந்த இடத்தை விற்று ப்ளாட் கட்ட நினைக்கிறார் ஒருவர்.

எனவே பேயை விரட்ட மந்திரவாதியை ஏற்பாடு செய்கிறார்.

பெரும் கோடீஸ்வரன் சிறுவன் ஒருவனை அவனது மாமா கொன்றுவிட்டு அந்த 500 கோடியை அள்ள நினைக்கிறார். எனவே பேய் பங்களாவில் வைத்து அவனை கொன்றுவிட்டால் பேய் மீது பழி போட நினைத்து அந்த சிறுவனை அங்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் ஏழு குழந்தைகளை திலீப் கடத்தி வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

இவர்கள் எல்லாரும் அந்த பங்களாவைதான் குறி வைக்கிறார்கள். அங்கு ஏற்கெனவே ஒரு அம்மா பேயும் சிறுமி பேயும் உள்ளது.

இவர்கள் எல்லாரும் அங்கு ஒன்று கூட என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

sangu chakram kids

கேரக்டர்கள்…

ஒரு பேய் குழந்தை உட்பட படத்தில் மொத்தம் 10 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒரு விதம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். பேய் மிரட்டும் என்றாலும் குழந்தைகளுடன் பார்க்கும்போது உற்சாகம் வருகிறது.

டாரு டமாரு என அடிக்கடி பேசி ரசிக்க வைக்கிறார் திலீப்சுப்பராயன்

பேயாக வரும் கீதா மற்றும் மோனிகா மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர். ஹேட்ஸ் ஆஃப்

அதிலும் தமிழ் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உலகத்தில் எந்த பதிலுமே கிடையாது. கேள்வி கேட்டே பேயை விரட்டு விடுகிறான்.

அந்த கேள்விகளில் சில….

ஸ்கூல் யூனிபார்மில் எல்லாருக்கும் சமம்ன்னா அப்புறம் ஏன் ஒவ்வொரு ஸ்கூலுக்கும் வேற வேற யூனிபார்ம்..?

நிறைவேறாத ஆசையிருந்தால் பேய்யாக வருவார்கள் என்றால் மகாத்மா காந்தி ஏன் பேயாக வரவில்லை என கேட்கிறார்.

பேய்க்கு பவர் இருக்குன்னா? அந்த பவர வச்சி கரண்ட் வர வைக்கமுடியுமா? இப்படி பல கேள்விகள்.

கடவுள் எங்கும் இருப்பார் என்றால் பேய் வீட்டில் அவர் ஏன் இல்லை? என பல கேள்விகள் கேட்டு பேய்க்கு பயம் காட்டியிருக்கிறார்கள்.

‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னும் நிரந்தமாக இருக்கு.

‘கெட்டவங்களை ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை…. அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’ என பேய் அடிச்ச மாதிரி பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

sangu team

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷபீரின் பின்னனி இசை படத்திற்கு பலம். பேய் படத்தில் பாடல்கள் இல்லாதது டைரக்டர் டச். தயாரிப்பாளருக்கும் சபாஷ் போடலாம்.

ஒரு பங்களா என்றாலும் அதில் ரவி கண்ணனின் கேமரா அழகாக சுற்றி வந்து ரசிக்க வைக்கிறது.

படத்தின் இறுதியில் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் மேளம் ஆட்டம்…. செம அப்ளாஸ்.

அப்போதும் நம்ம மந்திரவாதி பேசும் வசனங்கள் சூப்பர்…

ஏன்டா காய், மீன், அரிசி தனியா வித்துட்டு இருந்தோம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வச்சி எங்க பிழைப்ப கெடுத்தீங்க.. இப்போ பேய் ஓட்ட வந்து இந்த பிழைப்பையும் கை வக்கிறீங்களா? என கேட்டு மிரட்டுகிறார்.

க்ளைமாக்ஸில்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா? என கேட்டு எல்லாரையும் குழப்பிவிடுகிறான் அந்த சிறுவன்.
குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் குடும்ப படம் தந்துள்ளார் மாரிசன்

சங்குசக்கரம்.. பேயை தெறிக்கவிடும் குழந்தைகள்

Comments are closed.

Related News

மாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக…
...Read More
மாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக…
...Read More