நடிகர்கள்: சசிகுமார், நந்திதா, வசுமித்ரன் மற்றும் பலர்.
இயக்கம் – மருதுபாண்டியன்,
ஒளிப்பதிவு – எஸ்ஆர். கதிர்
இசை – கோவிந்த மேனன்
தயாரிப்பு – லீலா லலித்குமார்
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா
கதைக்களம்…
வில்லன் வசுமித்ரன் ஒரு மளிகை கடை வைத்திருக்கிறார். இவருக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்துக் கொண்டே இருக்கிறது. அதுவே அவருக்கு செம எரிச்சலை உண்டாக்குகிறது.
அதன் அடுத்த கட்டமாக பேச ஆரம்பிக்கிறது அந்த குரல். அவர்தான் சசிகுமார். உன்னை கொல்லப் போகிறேன் என மிரட்டுகிறார்.
இதன் பின்னரும் எப்போதும் சாவு பயத்தை காட்டுவது போல ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கடி பின் தொடர்கிறார்.
அவன் யார்? எதற்காக கொல்ல வேண்டும்? என்பது புரியாமலே தவிக்கிறார்.
இதனையடுத்து ஆட்களை செட் செய்ய, அவர்களையும் அடித்து துவைக்கிறார் சசி. அதன்பின்னர் போலீஸ் உதவியை நாட ரவுண்ட் கட்ட ஆரம்பிக்கின்றனர்.
அதன்பின்னர் என்ன நடந்தது..? போலீஸ் வலையில் சிக்கினாரா.? வசுமித்ரனை கொன்றாரா? என்பதுதான் ‘அசுரவதம்’ பட மீதிக்கதை.
கேரக்டர்கள்…
வழக்கமான சசிகுமார் படம் என்றால் குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்திருக்கும். மேலும் நிறைய காட்சிகளில் சசிகுமார் அடிக்கடி அட்வைஸ் செய்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்.
ஆனால் இதில் ஆக்சனை தவிர மற்றவை மிஸ்ஸிங். சீரியசனா மனிதராக சிறப்பான ஆக்சனை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் இருந்தாலும் அதில் அலட்டிக் கொள்ளாத நடிப்பு.
ஒரு முறை போனில் பேசிக்கொண்டே சசிகுமார் கதறும் காட்சி சபாஷ் பெறுகிறது. மற்ற இயக்குனர்கள் அந்த காட்சியை வழக்கமாக எடுத்திருப்பார்கள். அப்போது வன்முறை இல்லாமல் அதை அருமையாக காட்டியுள்ளனர். (படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்)
வசுமித்ரனுக்கு சசிகுமார் கொடுக்கும் டார்ச்சர்கள் செம. அவர் எதற்காக டார்ச்சர் கொடுத்தார் என்பது தெரிய வரும்போது அவனை எல்லாம் சும்மாவிட கூடாது என அந்நியன் போல கோபம் வருவது நிச்சயம்.
வசுமித்ரனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒரே காட்சியின் மூலம், சொல்லியிருக்கும் விதம் சூப்பர்.
இவர்களைத் தவிர படத்தில் நந்திதா, அவரது மகள், போலீஸ்கார் என பலர் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
சசிகுமாரின் மகளாக வரும் அந்த சிறுமி நம்மை ஈர்க்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனனின் இசையும் படத்திற்கு பெரிய பலம். அந்த லாட்ஜ் பைட் சீன் அதனை தொடர்ந்து வரும் வயல்வெளி காட்சிகள் மிரட்டுகிறது.
க்ளைமாக்ஸ் பைட்டில் பின்னணி இசையே நம்மை பயமுறுத்தும். சூப்பர் ஜி.
பைட் மாஸ்டர் தீலிப் சுப்பராயன் அனல் பறக்க செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் கதையை சொன்ன டைரக்டர் முதல்பாதியை கொஞ்சம் கவனித்திருக்கலாம். பயம், டார்ச்சர், பயங்கர கத்தல் என அப்படியே கொண்டு செல்வது பயங்கர போரடிக்கிறது.
ஆக்சன் ரசிகர்களுக்கு படத்தை பிடிக்கும்படி செய்துவிட்டார். ஆனால் க்ளைமாக்சில் ஒரு மெசேஜ் சொல்லி தன்னை காப்பாற்றிவிட்டார்.
அசுரவதம்… அலட்டிக் கொள்ளாத அசுரன்
Asuravadham movie review rating