தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தன் கிராமத்து ஊர் மக்களின் உதவியுடன் தன் பாசமிகு தங்கையை மருத்துவம் படிக்க வைக்கிறார் ஆட்டோ டிரைவர் விமல்.
இவர் மர்மமான முறையில் மரணிக்கவே அந்த மருத்துவ கல்லூரிக்கு தன் தங்கையின் உடலை தானமாக வழங்குகிறார் விமல்.
தினமும் தன் தங்கை உடலை பார்த்து கொண்டிருக்கும் விமல் அங்கு படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக்கும் உதவி வருகிறார்.
இது ஒரு பிறமிருக்க.. மார்க் குறைவான பெண்களையும் ஏழை மாணவிகளையும் பணக்காரர்களின் காம பசிக்கு இறையாக்குகிறார் அந்த கல்லூரியின் ஆசிரியை.
ஒரு கட்டத்தில் இதற்கான ஆதாரங்கள் நாயகி தன்யாவிடம் சிக்கிக் கொள்ள அதன் பிறகு என்ன நடந்தது? விமல் என்ன செய்தார்? தங்கையின் மரணத்திற்கு காரணம் என்ன? அதுவே படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள்…
அதிகம் பேசாத.. அதிகம் சிரிக்காத… கேரக்டரில் விமல். தன் வீட்டு பெண்களை பெண்களை யாரை நம்பி விட்டுச் செல்வது என விமல் சொல்லும் போது கண் கலங்க வைக்கிறார். விமல் தன் கேரக்டர் நிறைவாக செய்திருந்தாலும் படத்தின் திரைக்கதை தடுமாற்றத்தை தருகிறது.
வித்தியாசமான வேடத்தில் வினோதினி வைத்தியநாதன்.. சிறப்பாக கையாண்டுள்ளார்.
இயக்குநர் சரவண சக்தியின் மகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வில்லன் கும்பலை பார்த்தால் சில காட்சிகளில் கோபம் வந்துவிடுகிறது.
தன்யா ஹோப், போஸ் வெங்கட், சரவண சக்தி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் இருந்தும் அவர்களின் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.. ஆனால் சப் இன்ஸ்பெக்டராக வருபவர் அதிகமாகவே கவனம் பெறுகிறார்.
விமல் – தங்கையின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் மற்றொரு மாணவி அழகாகவும் வருகிறார் சிறப்பாகவும் நடித்துள்ளார்.
டெக்னீஷியன்கள்…
குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார், ஆனால் வசனங்களில் எந்தவிதமான வலிமையும் இல்லை.
வைட் ஆங்கிள் ரவியின் காட்சிகள் சிறப்பு. மகாலிங்கத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.
ஆனால் விக்ரம் வேதா படத்தில் கேட்ட பின்னணி இசையே நினைவுக்கு வருகிறது.
படத்தில் நிறைய கொலைகள் காட்டிக்கொண்டே இருப்பதால் இது குலசாமியா அல்லது கொலசாமியா என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழும்.
இள பெண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் விழ வைத்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடும் கும்பலை பற்றி சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மேலும் சில விஷமிகளை காவல்துறை நினைத்தாலும் களை எடுக்க முடியாது இதற்கு ஒரு குலசாமி வேண்டும் என்பதை கருத்தாக முன் பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒருவனின் பார்வையில் இந்த சமூகம் எப்படி இருக்கும்? இதனால் வரும் பின் விளைவுகள் என்ன? என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.
ஆனால் அதை சொன்ன விதத்திலும் எடிட்டிங்கிலும் பெரும் குறை.
குலசாமி… வலுவில்லாத கொலசாமீ
Kulasamy movie review and rating in tamil