இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

நடிகர்கள் : அருள்நிதி, மஹிமா நம்பியார், சுஜா வருணி, ஜான் விஜய், அஜ்மல், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், சாயா சிங், வித்யா பிரதீப் மற்றும் பலர்
இயக்கம் : மாறன்
இசை : சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
எடிட்டிங்: சான் லோகேஷ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஆக்சஸ் பிலிம் பேக்டரி
வெளியீடு : 24 பிஎம்

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் அருள்நிதி. இவருடைய காதலி மகிமா. ஒரு நாள் இரவில் மகிமாவை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் அஜ்மல். அதுமுதல் மகிமாவை பின் தொடர்கிறார் அஜ்மல்.

இதனால் மகிமா அவரை கண்டிக்க, அருள்நிதியை காலி செய்ய நினைக்கிறார் அஜ்மல்.

இதனிடையில் மகிமாவுக்கு தெரிந்த சாயா சிங்குக்கு அஜ்மலால் ஒரு பிரச்சினை வர, அஜ்மலை கொல்ல திட்டமிடுகிறார் அருள்நிதி.

ஒரு நாள் இரவில் ஒரு பங்களாவில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவர் சுஜா வருணி.

அப்போது அந்த பங்களாவில் இருந்து அருள்நிதி வெளியே வர, ஒருவர் அவரை பார்த்துவீட்டு போலீசில் புகார் கொடுக்கிறார்.

ஆனால் தான் கொலை செய்யவில்லை என்று போராடும் அருள்நிதி அங்கிருந்து தப்பிக்கிறார்.

அதன்பின்னர் அவர் கொலையாளியை கண்டு பிடித்தாரா? அவரை கொல்ல என்ன காரணம்? அஜ்மல் அருள்நிதி மோதல் என்ன ஆனது? என்று பல பல திருப்படங்களுடன் எவரும் எதிர்பாரா வகையில் படம் முடிகிறது.

கேரக்டர்கள்…

படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன சின்ன ப்ளாஷ்பேக்குகள் இருக்கிறது.

அலட்டிக் கொள்ள நடிப்பில் அருள்நிதி. கதைக்கு ஏற்ற நாயகனாக நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.

நாளுக்கு நாள் மஹிமாவின் அழகு கூடிக் கொண்டே போகிறது. மகிழ்ச்சி மஹிமா நம்பியார்.

வில்லன் வேடத்தில் ஸ்மார்ட் அஜ்மல். இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

சில காட்சிகளே இப்படத்தின் காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார் ஆனந்த்ராஜ்.

வித்யா பிரதீப் மற்றும் சுஜா வருணி ஆகியோருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவு.

இவர்களுடன் ஆடுகளன் நரேன். எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கதைக்கு கை கொடுத்துள்ளது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் இரவு மழை காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மாறன் இயக்கத்தில் இந்த மர்ம படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.

த்ரில்லர் படம் என்றாலும் ஆக்சன் காட்சிகள் குறைவுதான். ட்விஸ்ட் வைக்கலாம். அதற்காக இத்தனை ட்விஸ்ட்டா என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்… பார்த்து ரசிக்கலாம்.

Comments are closed.

Related News

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
...Read More
கோலிவுட் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக…
...Read More