டேக் டைவர்ஷன் விமர்சனம்..; திசை மாறிய காதல் பயணம்

டேக் டைவர்ஷன் விமர்சனம்..; திசை மாறிய காதல் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு பிரச்சினையில் சிக்கிய நாயகன்.. மற்றொரு பிரச்சினையில் சிக்கிய நாயகி.. இருவரும் வேறொரு பிரச்சினையால் இணைந்து சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்ல அவர்களின் வாழ்க்கை எப்படி டேக் டைவர்ஷன் ஆகிறது என்பதே இந்த படம்.

சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.

இதில் சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய்டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

கதைக்களம்…

நாயகன் சிவகுமாருக்கு 5 வருடங்களாக பெண் தேடும் படலம் நடக்கிறது. பெண்ணோட கண் பெருசா இருக்கு.. மூக்கு ஷார்ப்பா இருக்கு என பல பெண்களை தவிர்த்து வருகிறார்.

இதனால் நாயகனுக்கு திருமணம் ஆகாமலே வருடங்கள் ஓடுகிறது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலில் பார்த்த கண் பெருசா இருக்கிற காயத்ரி திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.

பாண்டிச்சேரியில் இவரின் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் புறப்பட ரெடியாகிறார் சிவகுமார்.

அப்போது இவரின் ஆபிஸ் மனேஜர் ஜான் விஜய் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். ஒரு பெண்ணை கூட்டி வந்து தன் ஆசைக்கு இணங்க ஒப்படைக்க சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் வேலை இருக்காது என மிரட்டுகிறார்.

ஆனால் அந்த பெண்ணோ (பாடினி குமார்) தாதா ராம்ஸிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். 8 லட்சம் கொடுத்தால் அந்த பெண்ணை விட்டு விடுகிறேன் என்கிறார் ராம்ஸ்.

ராம்சை ஏமாற்றி பாடினியை காரில் ஏற்றி சிவக்குமார் பாண்டிச்சேரி பயணிக்கிறார்.

அதே வழியில் பாடினியை காதலிக்கும் மற்றொரு இளைஞனும் சிவகுமாரின் வருங்கால மனைவியான காயத்ரியும் காரில் அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படுகிறது.

பின்னர் என்ன ஆனது? காயத்ரி? பாடினி? யாரை திருமணம் செய்தார் சிவகுமார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கதையின் நாயகனாக சிவகுமார் நடித்துள்ளார். இவரின் காட்சிகள் 3 வருடங்களாக காட்டப்பட்டுள்ளது. அதற்காக கொஞ்சம் ஹேர் ஸ்டைல் தாடியை மாற்றி இருக்கலாம். எப்போது ஒரே போலவே இருக்கிறார். நடிப்பில் பெரிதாக ஸ்கோப் இல்லை. இன்னும் நல்ல முயற்சி வேண்டும்.

காரில் செல்லும்போதே சின்ன சின்ன பாவனைகளில் நம்மை ஈர்க்கிறார் பாடினிகுமார். ஒரே உடையில் வந்தாலும் ரசிக்கலாம். காரின் பயணத்தின் போதே அடிக்கடி மேக்அப் மாறுகிறது. திடீர் திடீரென கண் மை, லிப்ஸ்டிக் பூசிக் கொண்டாரோ என்னவோ…

நாயகி காயத்ரியின் கண்களும் பெரிதாக உள்ளது. இதனால் நாயகியை தேடலில் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது.

வில்லனாக ஜான் விஜய், 70 கிட்ஸ் காதல் தாதாவாக ராம்ஸ் நடித்துள்ளனர்.

இவர்களுடன் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் மற்றவர்களும் படத்தில் உண்டு.

டெக்னிஷியன்கள்…

ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. தேவா பாடிய மஸ்தானா மாஸ் மைனரு… சாண்டி நடனம் அமைத்துள்ள யாரும் எனக்கில்லை ஏனடி? என்ற பாடலும் பார்க்கலாம்.

ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை டூ பாண்டிச்சேரி பயணம் பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தொகுப்பு – விது ஜீவா,

வித்தியாசமாக ஒரு நாளில் நடக்கும் கதையாக படத்தை இயக்கியுள்ளார் சிவானி செந்தில். ஆனால் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இந்த டேக் டைவெர்ஷன் பரபரப்பான படமாக இருந்திருக்கும்.

ஆக.. இந்த டேக் டைவேர்ஷன்.. திசை மாறிய காதல் பயணம் எனலாம்.

Take diversion movie review

முத்துநகர் படுகொலை (PearlCity Massacre) விமர்சனம்..; அராஜக அரசியல்.. நீதி கிடைக்குமா?

முத்துநகர் படுகொலை (PearlCity Massacre) விமர்சனம்..; அராஜக அரசியல்.. நீதி கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு தனி நபருக்காக வளைந்துக் கொடுத்த அரசு.. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசை எதிர்த்த மக்கள்… இந்த உண்மைச் சம்பவத்தை தூத்துக்குடி மக்களின் கண்ணீர் பதிவுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். இவரே தான் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. மே 20ஆம் தேதி TamilsOTT & Vimeo ல் ரிலீசாகிறது.

கதைக்களம்..

உலகத்தை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாக கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய அறவழிப் போராட்ட 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.

இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் காப்பர் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. அரசு கொடுத்த அளவை மீறி அளவுக்கு அதிகமான அளவில் காப்பர் எடுக்கப்பட்டு வந்தது.

இதன் கழிவுகளால், அத்தொழிற்சாலை அமைந்திருக்கும் இடங்களை சுற்றி தரிசு காடுகளே உருவானது. மண்ணை வறட்சியாக மாற்றியது.

மேலும் பலர் கேன்சர் நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். இதனையடுத்து மக்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தங்கள் போராட்டங்களை அவ்வப்போது எடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுப்போம் என அரசுகள் மாறி மாறி இவர்களை ஏமாற்றியுள்ளது.

எனவேதான் 2018 பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை மக்கள் தொடங்கியுள்ளனர்.

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன் கைவசம் இருந்த காவல்துறையை வைத்து மக்களை தடுத்தி நிறுத்தினர்.

ஆனால் 100வது நாளில் தான் இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்தது காவல்துறை. இதன்விளைவாக 13 பேரை கொன்றது தமிழக அரசு.

படம் பற்றிய அலசல்…

இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண்ணீர் விடாமல் இருக்க மாட்டீர்கள். பாதிக்கப்பட்ட மனிதர்களின் வலியை அப்படியே தன் கேமராவில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்.

வேதாந்தா நீ வேணான்டா…… காப்பர் உனக்கு.. கேன்சர் எனக்கா?……. என்ற வாசங்களும் கோஷங்களும் நம் மனதை கரைப்பதாக இருக்கும்.

குஜராத் கோவா மாநிலங்களில் இந்த காப்பர் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னரே வேதாந்தா குழு தமிழகத்தை குறிவைத்துள்ளது.

முதன்முறையாக 1990களில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் கருணாநிதி ஆட்சி வந்தபோதும் இது தொடர்ந்தது.

மேலும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளுக்கு கோடிக்கணக்கில் இந்த வேதாந்தா குழு நன்கொடை வழங்கியுள்ளது என்பதை ஆணித்தரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பணத்தை வாங்கிக் கொண்டு செயல்படும் அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை நிச்சயம் மக்களாட்சி என்பதே இருக்காது.

மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கும் அரசுகள் இருக்கும் வரை நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது. நச்சுத்தன்மை கொண்ட இதுபோன்ற தொழிற்சாலைகளின் காற்றையே சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

2018 மே 22ல் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு யார் பொறுப்பு? என்பதை நீதிமன்றம் விசாரித்து அந்த குற்றவாளிகளை மரண வலியோடு தண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெற கூடாது. மக்களை கொன்று தங்கள் வெறியை தீர்த்துக் கொண்ட மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் மட்டுமே இறந்துவிட்டதாக கணக்கு காட்டப்பட்டாலும் 15 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூடு நடந்த மறுநாளும் (மே 23) ஒருவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரையும் அடித்தே கொன்றுள்ளது போலீஸ்.

துப்பாக்கி சூடுக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. முதலில் போராடும் மக்களை எச்சரிக்க வேண்டும். பின்னர் வானத்தை நோக்கி சுட வேண்டும்.. அப்படியும் கூட்டம் கலையவில்லை என்றால் போராளிகளை இடுப்புக்கு கீழே மட்டுமே சுட வேண்டும். மேலும் நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்கிறது சட்டம்… இவைஎல்லாம் இங்கு மீறப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்பட்ட அந்த 13 பேருமே நெஞ்சு.. தலை.. ஆகிய இடங்களில் மட்டுமே குண்டு துளைக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பதுதான் வேதனை.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு லட்சங்களில் பணம் கொடுக்கப்பட்டால் மட்டும் போதுமா? இந்த உண்மைச் சம்பவத்தின் குற்றவாளிகளை யார் தண்டிப்பது.?

மேலும் இந்த உயிர்களை பலிவாங்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. லண்டனில் வசிக்கும் அந்த தனி நபருக்காக நம் மக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சிப்பது ஏனோ..?

இந்த வரலாற்று சம்பவத்தை அப்படியே கண்முன் காட்டியுள்ளார் இயக்குனர் ராஜ். அவரால் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடியாமல் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்.

மக்கள் இந்த படத்தை பார்த்து உண்மை நிலையை அறிய வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது இலங்கையில் நடக்கும் பொருளாதார போர் இதற்கு ஒரு சான்றாகும்.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தால் மட்டுமே அந்த அரசு அதிகாரிகளுக்கு மரணத்தின் வலி தெரியும். அதுவரை அதிகார திமிரிலேயே வலம் வருவார்கள்.

ஆக.. இந்த முத்துநகர் படுகொலை.. அராஜக அரசியல் அறிவோம்.

PearlCity Massacre movie review

டான் விமர்சனம் 3.5/5..; பாசக்காரன்

டான் விமர்சனம் 3.5/5..; பாசக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான் விமர்சனம் : சிவகார்த்திகேயன் , பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் விமர்சனம் இதோ

ஒன்லைன்..

கல்லூரியில் சேட்டை செய்யும் மாணவன் ஒரு புரொபசரை எதிர்த்து நிற்கும் கதை தான் இந்த டான்.

நடிப்பு – சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி
ரிலீஸ் தேதி – 13 மே 2022
டைமிங் – 2 மணி நேரம் 43 நிமிடம்
சர்டிபிகேட் – U
இயக்கம் – சிபி சக்கரவர்த்தி
இசை – அனிருத்
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்

கதைக்களம்…

சிவகார்த்திகேயனின் அப்பா சமுத்திரக்கனி. தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட பிறப்பதோ மகன்.

மகனை மிக கண்டிப்புடன் வளர்கிறார். எதையாவது செய்து உயர்ந்து வாழ்க்கையில் சாதிக்க நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையும் பாருங்க | உலகெங்கும் ‘டான்’ படத்தை சரியான டைமிங்கில் டான்னு ரிலீஸ் செய்ய ஐபிக்ஸ் ப்ளான்

தனக்கு விருப்பம் இல்லாமல் தந்தை விருப்பப்படி இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு மோதல் ஏற்படுகிறது.

இறுதியில் வென்றது யார்.? மாணவர்.? ஆசிரியர்..? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதை நாயகனாக சிவகார்த்திகேயன். இளமை துள்ளல்… துறுதுறு ஆக்சன் என ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மேலும் ரொமான்ஸ்… டான்ஸ், டைமிங் காமெடி, சென்டிமென்ட் என ஸ்கோர் செய்திருக்கிறார். க்ளைமாக்சில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

இதையும் பாருங்க | ‘டான்’ விழா ஹைலைட்ஸ் : தமிழ் சினிமாவில் 2 டான்கள் – உதயநிதி..; இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன் – சமுத்திரக்கனி

சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடியாக பிரியங்கா மோகன். இவர்களின் ஸ்கூல் லவ் செம க்யூட் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பு.

மிரட்டல் பிரின்சிபால் எஸ்ஜே சூர்யா. மாணவனின் எதிர்கால நன்மைக்காக மன்னிப்பது ஆசிரியரின் பெருந்தன்மை.

கண்டிப்பான அப்பாவாக அசத்தல் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை கலகலப்புக்கு பெரிதும் உதவியுள்ளனர்.

சிவா அம்மாவாக ஆதிரா பாண்டிலட்சுமி.. இறுதிக் காட்சியில் மனதில் நிறைகிறார்.

சூரி, ராஜூ , ஷாரிக் ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.. நிறைய இடங்களில் ரஜினி பட பாடல்கள் காட்சிகள் உள்ளன.

டெக்னிஷியன்கள்…

பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. கலர்புல்லா இருக்கு.

படத்தை 10 நிமிடம் வெட்டியிருக்கலாம். காலேஜ் சூட்டிங் காட்சிகள் நீளமானவை

அனிருத் இசையில் ப்ரைவேட் பார்ட்டி.. பே பாடல்கள் செம ஹிட். ஆனால் அதே ட்யூன்.. . கொஞ்சம் மாத்துங்க பாஸ்.. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்துள்ளார்.

PARENTS MEET காட்சிகளை ஜாலியாக ரசிக்கலாம். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களை படிக்க சொல்லி எக்ஸாம் வைப்பது ஓவர்.

கோலிவுட்டில் ஒரு கலகலப்பான கல்லூரிக் கதையை இன்றைய இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் சிபி.

How to torchure Teachers காட்சிகள் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் STRICT இன்ஜினியரிங் காலேஜ்க்கு இது பொருந்தும்.

கல்லூரி கலாட்டா, அப்பா மகன் சென்டிமெண்ட் என இரண்டையும் கலந்துக் கொடுத்துள்ளார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக உள்ளது.

Love / Respect your parents when they are with you என்பதோடு நிறைவாகிறது படமும் நம் மனமும்..

ஆக… டான்… யூத்

டான் விமர்சனம் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

Sivakarthikeyan starrer Don movie review

அக்கா குருவி விமர்சனம் 3.5/5..; ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

அக்கா குருவி விமர்சனம் 3.5/5..; ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ‘அக்கா குருவி’. இந்த படத்தை இயக்குனர் சாமி இயக்கியுள்ளார்.

சிந்து சமவெளி, உயிர், மிருகம் என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர் சாமி. ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த அக்கா குருவி.

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பம். அதில் கணவன், மனைவி, மற்றும் 10 வயதில் மகன். 8 வயதில் ஒரு மகள். இவர்கள் கொடைக்கானல் பகுதியில் வசிக்கின்றனர்.

தினமும் கூலி வேலை செய்து தன் வாழ்க்கையை ஓட்டி வந்தாலும் தன் பிள்ளைகளை காஸ்ட்லியான கான்வெட்டில் படிக்க வைத்திருக்கிறார்.

ஒருநாள் தன் தங்கையின் கேன்வாஷ் ஷூ அறுந்துவிடவே அதை தைத்துக் கொண்டு வரும் வழியில் தொலைத்து விடுகிறான் அண்ணன். அப்பாவிடம் சொன்னால் அடிப்பார் என்பதாலும் அவரிடம் தற்போது பணமில்லை என்பதாலும் பெற்றோரிடமும் சொல்லமில்லாமல் பள்ளிக்கு செல்கின்றனர்.

அதாவது தங்கைக்கு காலையில் மட்டுமே பள்ளி. அண்ணனுக்கு மதியத்திற்கு மேல்தான் பள்ளி. எனவே தங்கை பள்ளி விட்டு வந்ததும் அண்ணன் அந்த ஷூவை அணிந்து பள்ளிக்கு செல்கிறார்.

இப்படியாக இவர்களின் பள்ளி நாட்கள் செல்ல செல்ல மற்றொரு ஏழை மாணவி அந்த ஷூவை அணிந்திருப்பதை தங்கை பார்க்கிறார்.
பின்னர் என்ன ஆனது.? ஷூ கிடைத்ததா? என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சிறுவன் மகீன் (படத்தில் தேவா) சிறுமி டாவியா (படத்தில் ஷாரா) இருவரும் உண்மையான அண்ணன் தங்கை போல சிறப்பாக நடித்துள்ளனர். இவரின் தந்தையாக நடித்தவரும் சிறப்பு.

தன் நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்துவிட்டதால் இவர் படும் அவஸ்தைகளும் ஜாமீன் போடுபவர்களுக்கு சரியான பாடம்.

பணம் வாங்கும்போது இனிக்குது.. திருப்பிக் கொடுக்கும்போது கசக்குதா? என்ற வசனங்கள் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத ஜென்மங்களுக்கு சவுக்கடி.

இதனிடையில் இளம் ஜோடிகளின் (ஹரிஷ் மீனாட்சி) காதல் கதைகளும் படத்தில் உள்ளன. அவர்களும் அருமையான தேர்வு. அதிலும் அந்த பெண் உதடுகளும் கண்களும் நம்மை ஈசியாக கவர்ந்துவிடும்.

டெக்னீஷியன்கள்..

அக்கா குருவி படத்திற்கு இளையராஜா இசையைமைத்திருக்கிறார். ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை. அதே சமயம்… காதோராம் லோலாக்கு… மழை பாடல்கள் என தன் பழைய காதல் பாடல்களை ஆங்காங்கே கொடுத்து பழைய நினைவுகளை சிதறவிட்டுள்ளார். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

உட்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. கொடைக்கானல் பகுதியின் மலைசார்ந்த காட்சிகள் அருமை.

பணக்கார பிள்ளைகளுக்கோ நடுத்தர பிள்ளைக்களுக்கோ ஷூ என்பது பெரும் விஷயமல்ல. ஆனால் ஒரு ஏழை குடும்பத்தில் ஷூ என்பது பெரிய விஷயம். அதை குழந்தைகளின பாச உணர்வுடன் அழகாக கொடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு சர்ச்சை படங்களை இயக்கியிருந்தாலும் தற்போது உணர்வுபூர்வமான ஒரு படத்தை கொடுத்துள்ள சாமிக்கு சபாஷ் சொல்லிடுவோம்.

அண்ணன் தங்கை இருவரும் கதை சொல்வதாக காட்சிகள் நகர்கிறது. அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் பேசும் வசனங்கள் சூப்பர். அவர்கள் யார்? என்ன சொன்னார்கள்? என்பதை சொன்னால் ட்விஸ்ட் போய்விடும் என்பதால் அது வேண்டாம்.

நிச்சயம் உங்கள் வீட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இந்த படத்திற்கு செல்லலாம். அவர்களும் ஏழை குடும்பத்தின் கஷ்டங்களை உணர்வார்கள்.

ஆக.. இந்த அக்கா குருவி.. ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

Akka Kuruvi movie review rating

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எஸ் ரவிக்குமார் , தர்ஷன் , லாஸ்லியா , யோகி பாபு நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா விமர்சனம் இதோ

ஒன்லைன்..

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இதன் தமிழ் ரீமேக்தான் கூகுள் குட்டப்பா.

கதைக்களம்…

கோயம்பத்தூர் மாவட்டத்தில் தன் மகன் தர்ஷனுடன் வசிக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவர் ஒரு விவசாயி. மகன் சிறுவயதில் இருக்கும்போதே தன் மனைவியை இழந்தவர்.

மிக்ஸி கிரைண்டர் செல்போன் என எந்த நவீன சாதனங்களையும் பயன்படுத்தாமல் எளிதாக வாழ்பவர்.

அம்மியில் அரைத்த மசாலாக்களையே சமையலுக்கு பயன்படுத்துபவர். இதனால் அவரின் வீட்டு வேலைக்கு கூட யாரும் வருவதில்லை.

ஒரு கட்டத்தில் அப்பாவின் நிபந்தனைகளால் வெறுத்துப் போகும் தர்ஷன் வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார்.

அப்பாவைப் பார்த்துக் கொள்ள தனது கம்பெனி பரிசோதித்து வரும் ஒரு ரோபோ ஒன்றை உதவிக்கு அனுப்பி வைக்கிறார்.

முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி (கே.எஸ். ரவிக்குமார்) பின்னர் நாளடைவில் அதை தன் குழந்தையாகவே பாவித்து வாழ ஆரம்பிக்கிறார்.

ரோபோ துணையுடன் பேஸ்புக் மூலமாக தன் பழைய காதலியுடனும் உரையாடுகிறார்.

4 மாத பரிசோதனைக்கு பிறகு அந்த ரோபோவை கம்பெனிக்காரன் தர்ஷனிடம் கேட்க அதை தர மறுக்கிறார் கேஎஸ். ரவிக்குமார்.

இதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தந்தை சுப்ரமணியாக கேஎஸ் ரவிக்குமார். இவர்தான் கதையின் நாயகன். சென்டிமெண்ட் காட்சிகளில் உருக வைத்துள்ளார். கோவை குசும்பு அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. யோகி பாபு முதல் ரோபோ வரை அனைவரையும்  நக்கல் அடித்து கலகலப்பாக்கியுள்ளார்.

தர்ஷன் மற்றும் அவரது காதலியாக லாஸ்லியா நடித்துள்ளனர். பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த கேரக்டரில் சிறப்பு.

யோகிபாபு மற்றும் பளாக் பாண்டி காமெடிகளை சில இடங்களில் ரசிக்கலாம்.

டெக்னிசியன்கள்..

ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. அர்வியின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக அமைந்துள்ளது.

இது ரோபோ என்றாலும் முழுக்க குழந்தைகளுக்கான படம் இல்லை எனலாம். தந்தையை கவனிக்காத மகன்… முதுமை வாழ்க்கையில் தனிமையில் வாடும் தந்தை ஆகியோரை பற்றிய கதை எனலாம்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மலையாளத்தில் உள்ளது போலவே முழுமையாக எடுக்காமல் தமிழுக்கு ஏற்றவாறு சில காட்சிகளை மாற்றியுள்ளனர். பைத்தியமாக ராகுல் என்பவர் நடித்துள்ளார். எனவே அவரை வில்லனாக சித்தரித்துள்ளனர் இயக்குனர்கள்.

ஆக.. இந்த கூகுள் குட்டப்பா… நீ GOOD அப்பா…

இந்த கூகுள் குட்டப்பா விமர்சனம் போல் மற்ற பிற படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே காணலாம் .

Koogle Kuttapa movie review

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்‌கே சுரேஷ் , பூர்ணா , மது ஷாலினி , பகவதி பெருமாள் நடிப்பில் வெளியான விசித்திரன் விமர்சனம் இதோ . இசை – ஜி‌வி பிரகாஷ் . இயக்கம் – பத்மகுமார்.

ஒன்லைன்…

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய் என்ற பேரில் நடக்கும் மெடிக்கல் மாஃபியாக்களின் கதை.

இந்த படம் மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தின் ரீமேக் தான் இந்த விசித்திரன்.

கதைக்களம்…

மகள் மனைவியை இழந்து ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி விரக்தியால் இருக்கிறார். அவர் தன் நண்பர்களுடன் இணைந்து கொலை வழக்குகளை எப்படி அசால்ட்டாக கையாள்கிறார் என்பதுடன் படம் தொடங்குகிறது.

மாயன் என்ற கேரக்டரில் ஆர்கே. சுரேஷ். இவரின் காதல், திருமணம், வழக்கு விசாரணை, வாழ்க்கை, என படம் பயணிக்கிறது.

இவரின் முன்னாள் மனைவியின் இன்றைய கணவன் என்ற கிளைக்கதையும் இதில் அடங்கும்.

தன் மகள் மற்றும் மனைவி இருவரையுமே அடுத்தடுத்த விபத்துக்களில் பறிகொடுக்கிறார் ஆர்கே. சுரேஷ். அவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.

ஆனால் அது திட்டமிட்ட படுகொலை என்பதை அறிகிறார் நாயகன்.

அந்த கொலைகள் யாரால் செய்யப்படுகிறது. ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

120 கிலோ… 90 கிலோ… 80 கிலோ என தன் உடல் எடையை அதிகரித்து அதற்கேற்ப தன் உடல்மொழியை மாற்றியுள்ளார் ஆர்கே. சுரேஷ். வயிற்றில் தொப்பையை அதிகரித்து காட்ட ஒவ்வொரு காட்சிக்கும் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்திருக்கிறாராம். அதுபோல் இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் அந்த நபர் போல தினமும் 50 பீடிகளை குடித்தாராம் ஆர்கே. சுரேஷ். இந்த அர்ப்பணிப்புக்காகவே பாராட்டலாம்.

ஐங்கரன் விமர்சனம். 3/5..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி

பூர்ணா மற்றும் மதுஷாலினி என இரு நாயகிகள். இருவரும் சிறப்பு. பூர்ணா ஒரு படிமேலே சென்று தன் நடிப்பால் கவர்கிறார்.

இவர்களுடன் இளவரசு, மாரிமுத்து, பக்ஸ் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஜிவி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இந்த கோடைக்காலத்தில் நம் கண்களுக்கு விருந்தாக கொடைக்கானலின் முழு அழகை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கோடிகளில் கொட்டி கொடுக்கின்றனர் சிலர். ஆனால் அவை சீனியர்ட்டி அடிப்படையில் செயல்படுவது போல தோன்றினாலும் அந்த உறுப்புகள் ஒருவருக்கு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் சரியாக கவனிப்பதில்லை.

அதிகமாக பணம் கொடுக்கும் மற்றொரு நபருக்கு அது பொருத்தப்படுகிறது. இதை தன் பாணியில் கண்டுபிடித்து தன் உயிரை பணயம் வைத்துள்ளார் நாயகன்.

ஒரு மலையாள படத்தை அதே சாயலுடன் தமிழில் கொடுத்துள்ளார் இயக்குனர் பத்மகுமார். வாழ்த்துக்கள்..

ஆக.. இந்த விசித்திரன்.. வித்தியாசமானவன் தான்.

விசித்திரன் விமர்சனம் போல் மேலும் சில பட விமர்சனங்களை நம் தளத்தில் கீழே காணுங்கள் .

Visithiran movie review

More Articles
Follows