செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, அர்ச்சனா, ராஜ்குமார், வைபவ் அண்ணன் சுனில், பக்ஸ், மௌலி, பார்வதி நாயர், பாரதிராஜா, ரம்யா நம்பீசன், காயத்ரி மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி தரணிதரன்
ஒளிப்பதிவு – சரஸ்காந்த்
இசை – கோவிந்த வசந்த்,
எடிட்டர் – ஆர். கோவிந்தராஜ்
தயாரிப்பு – சுதன், உமேஷ், அருண் வைத்யநாதன், பேஷன் ஸ்டூடீயோஸ்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

செத்தும் கொடுத்தான் சீதக்காதி.. என்பதை கான்செப்ட்டாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர்.

பழம்பெரும் நாடக நடிகர் அய்யா ஆதிமூலம். இவரின் நாடகத்திற்கு தமிழகமே ரசிகர். நாளடைவில் நாடக மோகம் குறைந்து, சினிமா வளர்ச்சி காண்கிறது.

இதனால் இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும் நாடகமே தன் உயிர் மூச்சு என வாழ்கிறார்.

இந்நிலையில் இவரின் பேரனுக்கு ஆப்ரேசன் செய்ய பணம் தேவைப்படுகிறது. ஆனால் பெரும் தொகை தேவைப்படுவதால் செய்வது அறியாமல் தவிக்கிறார்.

அதன் பின்னர் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. (அதை சொன்னால் கதை வெளியே தெரிந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியாது. படக்குழுவினர் கேட்டுக் கொண்டதால் அதை தவிர்க்கிறோம்.)

அதன் பின்னர் என்ன செய்தார்? சினிமாவில் நடித்தாரா? ஆப்ரேசன் நடந்ததா? அய்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மாறுபட்ட கதைக்களத்தில் விஜய்சேதுபதியும் பாலாஜி தரணி தரனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒரு காட்சியில் நாடக நடிகராக ஒரே டேக்கில் நடித்து அசத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. தன் உடல் மொழியை கூட வயதான தோற்றத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார். 75 வயதான ஆதி மூலமாக நடிப்பில் மிளிர்கிறார்.

ஆனால் மேக் அப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தியன் தாத்தாவிடம் பார்த்த அந்த மேக்அப் இதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இவருக்கு இணையாக வில்லன் சுனிலும், ராஜ்குமாரும் ஸ்கோர் செய்கின்றனர்.

ராஜ்குமார் ரொமான்ஸ் காட்சியில் டேக் வாங்கும்போது ரசிகர்களின் சிரிப்பலையை அடக்க முடியாது.

வைபவ்வின் அண்ணன் சுனில் வில்லனாக நடித்துள்ளார். இனி இவருக்கு பல வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கும். மார்க்கில் நின்னு நடிங்க சார் என்று டைரக்டர் கெஞ்சும் காட்சிகளில் உங்கள் சிரிப்பை அடக்கவே முடியாது.

இறுதியில் அந்த கோர்ட் சீன் நம்பும் படியாக இல்லை. கருணாகரன், மகேந்திரன் ஆகியோருக்கு அதிகப்படியான காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

காயத்ரி மற்றும் ரம்யா நம்பீசனுக்கு காட்சிகளே இல்லை. பாவம் அவர்கள் விஜய்சேதுபதிக்காக நடித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

அர்ச்சனா, டைரக்டர் மௌலி ஆகியோர் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இதில் தன் இசையால் சீதக்காதிக்கு உணர்வூட்டியிருக்கிறர்.

நாடகம் முதல் சினிமா வரை காலத்திற்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுத்திருப்பது ரசிக்கும் ரகம். அதிலும் நடிக்கும் ஹீரோக்கள் பல்பு வாங்கும்போது இவர் கொடுக்கும் இசை உச்சக்கட்டம்.

ஒளிப்பதிவாளரும் தன் பணியை கச்சிதமாக செய்துள்ளார். நாடகம் சினிமா என வெரைட்டி காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆனால் எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

நியூஸ் 7 விவாதம் காட்சிகள் தேவையில்லாத ஒன்று. அதுபோல் நாடக காட்சிகளை சிலவற்றை வெட்டியிருக்கலாம். இவையில்லாமல் சினிமாவில் டேக் வாங்கும் காட்சிகளும் அதிகப்படியாக இருக்கிறது. இது ரசிகர்களை அதிகம் சோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி தரணிதரன்.
அந்த படத்தில் கிரிக்கெட் பந்தில் அடிப்பட்டு குழம்பிய (மிடுல ஆப்ளகேட்டா) ஒருவரின் கதையை படமாக்கியிருந்தார்.

இதில் எவரும் யூகிக்க முடியாத நாடகம், சினிமா, ஆத்மா என கதையை நகைச்சுவையாக படமாக்கியிருக்கிறார்.
பொதுவாக பேய் படங்களில் மட்டுமே இதுபோன்ற கதைகள் வரும். அதை வித்தியாசமான கோணத்தில் விஜய்சேதுபதியை வைத்துக் கொடுத்திருக்கிறார்.

நீளமான காட்சிகளை வெட்டிவிட்டால் சீதக்காதி பிழைத்துக் கொள்வான். நாடக காட்சிகள் இன்றைய மாணவ ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பது சந்தேகம்தான். விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு அது திருப்தி தருமா? என்பது தெரியவில்லை.

விஜய்சேதுபதிக்கு இது 25வது படமா? என்பதுதான் நம்ப முடியவில்லை.

சீதக்காதி.. செத்தும் கொடுத்தான்…

Seethakaathi review rating

Comments are closed.

Related News

சீதக்காதி படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும்…
...Read More
சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக லட்சுமி…
...Read More
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி…
...Read More
விஜய்சேதுபதி நடிப்பில் 25வது படமாக வளர்ந்துள்ள…
...Read More