ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

நடிகர்கள்: ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர்.
இயக்கம் – ஜெய், ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி,
இசை – பிரசாத் பிள்ளை,
படத்தொகுப்பு – பிரபாகர்,
கலை – செந்தில் ராகவன்,
ஆடை வடிவமைப்பு – தாட்ஷா பிள்ளை,
பாடல்கள் – குட்டி ரேவதி, மோகன்ராஜன்,
சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்
தயாரிப்பு – ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா
பிஆர்ஓ. : குமரேசன்

கதைக்களம்…

ஜெய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம்தான் இது. மேலும் பிரபல ஓவியர் ஏபி. ஸ்ரீதரும் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு ஜமீன்தார் அவருடைய இளம் மனைவி. அவர்களிடம் தஞ்சம்டையும் நான்கு திருடர்கள். திருடன் ஒருவனிடம் ஜமீன்தார் மனைவி காதல்.

நான்கு திருடர்களிடம் ஒரு ப்ராஜ்க்டை ஒப்படைக்கிறார் ஒரு தாதா. அந்த திருடர்கள் பணத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை தேடி வரும் தாதா. இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஆறடி உயரத்தில் அசத்தலாக நாயகன் ராஜ்பரத். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது உயரத்திற்கு ஆக்சன் கொடுத்திருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

தேஜஸ்வினியும் அவரது தேகமும் ரசிகர்களை ஈர்க்கும். அவரது உயரம் இந்த பட நாயகனுக்கு பொருத்தமாக இருந்தாலும் மற்ற நாயகர்களுக்கு செட்டாகுமா தெரியல. அண்ணாந்து பார்க்க வைக்கிறார்.

தன் உணர்ச்சிகளை கண்களாலே பேசிவிடுகிறார். ரொமான்சிலும் இந்த தேஜஸ்வினி கெத்துதான்.

பூஜா தேவரியா? அவருக்கு இந்த கேரக்டர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

ஏபி ஸ்ரீதர், வினோத் கேரக்டர்கள் கச்சிதம். தேவைக்கு ஏற்ற நடிப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.

காதல் சேர்ந்த அந்த காம காட்சி ரசிகர்களை சூடேற்றும்.

பழைய ஜமீன் வீடு, அந்த சுற்றுபுற பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கலை இயக்குனருக்கு கைகொடுக்கலாம்.

பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். எடிட்டர் பிரபாகர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

பாளக் ஹூயூமர் பாணியில் படத்தை எடுத்துள்ளார் ஜெய். ஆனால் பட இடங்களில் ஹீயூமர் வரவில்லை.
நிறைய காட்சிகளில் பொறுமை தேவை. வில்லனையும் காமெடியனாக்கி விட்டார்கள்.

ஆந்திரா மெஸ்… சுவை குறைவு

Comments are closed.

Related News

சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை…
...Read More