போத விமர்சனம்

போத விமர்சனம்

நடிகர்கள்: விக்கி, மிப்பு, உதயபானு (ராகுல் தாத்தா), வினோத், ஈஸ்வர், சண்முகசுந்தரம், வீர ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – சுரேஷ் ஜி
ஒளிப்பதிவு – ரத்னகுமார்
இசை – சித்தார்த் விபின்
எடிட்டர் – தியாகராஜன்

கதைக்களம்…

ஆண் விபச்சாரன் என்ற புதிய கதைக்களத்துடன் இறங்கியுள்ளார் இப்பட இயக்குனர் சுரேஷ்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் நாயகன் விக்கி. அதற்கு முதலில் குறும்படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

ஆனால் அதற்கே அவரிடம் பணமில்லை. எனவே ஒரு ஏஜெண்ட் மூலம் ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கிறது.

இந்த ஈஸ்வர் தான் சென்னை சிட்டி ஆண்களுக்கு அலையும் ஆண்டிகளுக்கு ஆண் விபச்சாரன்களை சப்ளை செய்கிறார். இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் உதவியுடன் செய்து வருகிறார்.

விக்கிக்கு ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கவே, நிறைய ஆண்டிகளுடன் செக்ஸ் வைத்து கொள்கிறார். அதன் மூலம் பணம் கிடைக்கிறது.

ஒருநாள் ஒரு ஆண்டிக்கு வீட்டுக்கு போகும்போது, அந்த சமயம் பார்த்து யாரோ வீட்டிற்கு வர ஒளிந்துக் கொள்கிறார்.

அப்போது அந்த ஆண்ட்டி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் போது, அந்த ஆண்டியின் புருசன் இவரை பார்த்து விடுகிறார்.

அவன்தான் தன் மனைவியை கொலை செய்த கொலைக்காரன் என போலீசில் புகார் கொடுக்கிறார்.

அடுத்து நாயகன் என்ன செய்தார்? தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்தாரா? ஆண்ட்டியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மதன் என்ற கேரக்டரில் அறிமுக நாயகன் விக்கி. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீசிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இன்னும் தவிப்பை கூட்டியிருக்கலாம். மற்றபடி முதல் படம் என்பதால் பாராட்டலாம்.

ஆக்சன் ரொமான்ஸ் இல்லாத காரணத்தினால் ஏதோ ஒரு குறை தெரிகிறது.

இவரின் நண்பராக வரும் மிப்பு அண்ட் ராகுல் தாத்தா இருவரும் கச்சிதம். அதிலும் ராகுல் தாத்தா இதில் அதிகப்படியான ட்விஸ்ட் கொடுத்து கதையின் நாயகனாக மாறிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஆண் விபச்சார புரோக்கர் சொப்பன கிருஷ்ணன் (ஈஸ்வர்) இருவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிச்சைக்காரன் படத்தில் கலக்கிய ஈஸ்வரும் மற்றொருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கரகாட்டக்காரன் புகழ் சண்முக சுந்தரம். ஆனால் அவருக்கு வேறு யாரோ? டப்பிங் கொடுத்துவிட்டார்கள் போல. அதை பழைய வாய்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் போத படத்திற்கு பின்னணி இசையில் போதை ஏற்றி விடுகிறார் சித்தார்த் விபின்.

படத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஆனால் எடிட்டர் தன் பங்கை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை.

யார் கொலை செய்தார்? என்ற விறுவிறுப்பான நேரத்தில் தேவையில்லாத குத்து பாடல் … அட என்னய்யா? இது என கேட்கத் தோன்றுகிறது.

கொலைக்காரன் யார்? என்றே ஆடியன்சுக்கு தெரிவிக்காமல் படத்தை முடித்துவிட்டு, பின்னர் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது செம.

அதுவும் இவர்தான் அந்த கொலைக்காரனா? என தெரிய வரும்போது… செம.

படம் ஆரம்பிக்கும்போது கூகுள் ஸ்டைலில்… Gigolos என போட்டுவிட்டு நாயகன், நாயகன் நண்பர் என ஒவ்வொருவராக டைட்டில் கார்டூ போடுவது புதிய முயற்சி. அந்த கற்பனையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் என்னாகும்? நம் போனில் நம் உரையாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்தால் என்ன பிரச்சினையாகும்? என்பதை பக்காவாக சொல்லிவிட்டார் விக்கி.

படம் ஆண் விபச்சாரனை பற்றிய படம் என்பதால் நாயகி வேண்டாம் என முடிவி செய்துவிட்டாரோ?

ஆம்பள ஐட்டம் என சொன்னாலும் ஒரு காட்சியில் கூட ஆபாசம் இல்லை. மேலும் இதில் த்ரில்லர் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆனால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இந்த போத இன்னும் எகிறியிருக்கும். கிக் ஏறவில்லை.

போத… ஆம்பள ஐட்டம்

Bodha aka Botha tamil movie review rating

Comments are closed.

Related News

"போத" படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து…
...Read More
பெரும்பாலும் போதை என்றாலே சரக்கு அடித்துவிட்டு…
...Read More