அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

நடிகர்கள் – பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன், சத்யா, யோகிபாபு, டி.பி.கஜேந்திரன், சபரி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரூபாஸ்ரீ,
இயக்குனர் – கேசவன்
இசை – டேவிட் ஷார்ன்
ஓளிப்பதிவு –நவநீதன்
பிஆர்ஓ – ஜான்சன்
தயாரிப்பார் – கதிரவன் ஸ்டூடியோஸ் கதிரவன்

கதைக்களம்…

படத்தில் நான்கு ஹீரோக்கள். எனவே அவர்களுக்கு நான்கு காதல் கதைகள்.

3 நண்பர்களின் காதலும் தோல்வியில் முடிகிறது. (3 காதலும் அவர்களின் பிரிவுக்கான காரணம் அனைத்தும் ரசிக்க வைக்கும்).

இவர்கள் காதலில் தோல்வி அடைந்து விட்டதால், சேர முடியாதவர்களை சேர்த்து வைப்பதே தங்கள் லட்சியம் என்று கொள்கையை வைத்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் 4வது வரும் நண்பரின் காதலை சேர்த்து வைக்க கேரளாவுக்கு பயணிக்கின்றனர்.

இவர்களின் மற்றொரு நண்பரான பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.

அங்கு என்ன ஆனது.? நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது? நண்பனின் காதலை சேர்த்து வைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் நாயகனாக பூவரசன். நாயகியாக அனுபமா பிரகாஷ். எல்லாருக்கும் இது முதல் படம் என்பதால் இன்னும் நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சிக்க வேண்டும். ஜாலியாக நடித்து கொடுத்துவிட்டுள்ளனர்.

நண்பர்களாக நடித்திருப்பவர்கள், அவர்களின் காதலிகள் அந்த பிரிவுகள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கும்.

யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்தும் காமெடியில் இல்லை. ஏதோ ஒரு சில காட்சியில் சிரிப்பு மூட்டுகிறார் யோகிபாபு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தோனும். நவநீதனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

சின்ன சின்ன காதல் கதையை இளைஞர்களுக்காக உருவாக்கியுள்ளார் டைரக்டர். முதல் பாதி செல்வதே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.

அவளுக்கென்ன அழகிய முகம்… பார்க்கும் முகமே…

Comments are closed.

Related News

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம்…
...Read More
அவளுக்கென்ன அழகிய முகம் படத்திற்காக கதிரவன்…
...Read More