றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், கிஷோர், சதீஷ், கபீர் துகான் சிங், ஹரிஷ் உத்தமன், கேஎஸ் ரவிக்குமார், நாசர், ஸ்ரீரஞசனி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்,
படத்தொகுப்பு : பிரவீன் கேஎல்
இயக்கம் : ரத்தினசிவா
பிஆர்ஓ : கோபிநாதன்
தயாரிப்பாளர் : காமன்மேன் ஆர்ட்ஸ் கணேஷ்

கதைக்களம்…

உண்மையான காதலர்களை எந்த எதிர்ப்பு வந்தாலும், சேர்த்து வைக்கிறார் ரத்தினத்தின் மகன் சிவா. (இப்போ டைரக்டர் பேரு வந்துடுச்சா..?)

ரத்தினம் (கே.எஸ்.ரவிக்குமாரின்) மகன்தான் சிவா (விஜய்சேதுபதி)

ஒரு சூழ்நிலையில், வில்லன் ஹரீஷ் உத்தமன் கட்டிக்க போகும், பெண்னை கடத்தி விடுகிறார். இதனால் இருவருக்கும் பிரச்சினை எழுகிறது.

சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது, தான் பிரச்சினை செய்யாமல் இருக்க, மினிஸ்டர் பெண் லட்சுமி மேனனை கடத்த சொல்கிறார் ஹரீஷ் உத்தமன்.

எனவே இவரும் அவரை கடத்த, என்ன என்ன பிரச்சினைகள் நடக்கிறது. என்பதே இந்த றெக்க.

கதாபாத்திரங்கள்…

இதுவரை மற்ற ஹீரோக்களை தான் நாம் இப்படி பார்த்திருக்கிறோம். முதன்முறையாக விஜய்சேதுபதியை அனல் பறக்க காட்டியிருக்கிறார் டைரக்டர்.

லட்சுமி மேனன் இடைவேளை சமயத்திலே வருகிறார். ஆடை வடிவைமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மினிஸ்டர் மகள் என்றாலும் அதிலும் பெரிய வசதி தெரியவில்லை.

ஓவர் டைட்டாக ஆடைகள் அணிந்து பெரிய பெண் போல் வருகிறார். உடம்பை ஸ்லிம் ஆக்க முயற்சி செய்தால் நல்லது.

கிஷோர் மற்றும் விஜய்சேதுபதி அக்கா நல்ல தேர்வு. ஆனாலும் அவர் அக்கா போல் முதிர்ச்சியில்லை. அக்கா வேடத்துக்கு ஆள் கிடைக்கலையா?

சதீஷ் சீரியஸாக நடிக்க முயற்சித்து காமெடியை மிஸ் செய்துவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நல்ல ப்ரெண்ட்லி அப்பாக இருந்துக் கொண்டு, சைட் அடிப்பதும், பின்னர் மகனை திட்டுவதும் என ரசிக்க வைக்கிறார்.

வில்லன் ஹரீஷ் உத்தமன், கபீர் துகான் சிங், இருவரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இன்றைய தமிழ் சினிமாவின் மெலோடி கிங் இமான்தான். கண்ண காட்டு போதும்.. கண்ணம்மா ஆகிய பாடல்களே போதும்.

ஸ்ரேயா கோஷலின் குரல் பாடல் காட்சியை விட அழகாகவே இருக்கிறது.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மதுரை, கும்பகோணம் காட்சிகளில் பளிச்சிடுகிறது.

இயக்குனர் பற்றி….

கமர்ஷியல் மசாலா என்றாலும், ஹரி படத்தில் உள்ள போல குடும்ப காட்சிகளையும் விட்டு வைக்கவில்லை.

மேலும் ரன் படத்தில் உள்ள தேரோடும் வீதி பாடலை நினைவுப்படுத்துகிறது விர்..விர்ரு… பாடல்.

நீர் தேங்கி இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் 5 கிலோ மீட்டர் சுற்றுவதாக பேப்பரில் செய்தி வருகிறது. ஓகே. வெறும் கால் வரை இருக்கும் தண்ணீருக்காக அவர்கள் அத்தனை கிமீ. சுற்றுகிறார்கள்?

அதில் கரண்ட் வயர் இருந்தாலும், அட்லீஸ்ட் பள்ளி செல்லும் போதாவது கரண்டை கட் செய்து இருக்கலாமே. சேதுபதி அவ்ளோ அசல்ட் வருகிறாரே?

விஜய்சேதுபதியை வைத்து ஒரு கமர்ஷியல் மாஸ் கொடுத்து தனக்கும் வெற்றியை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

றெக்க கட்டி பறக்குது…

கொடி ட்ரைலர் விமர்சனம்

கொடி ட்ரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ்.

இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.

இதுவும் மாரி போன்ற மாஸ் ஆகஷன் நிறைந்த படம்தான் என தெரிய வந்துள்ளது.

kodi dhanush sac

அதில் ஒரு மாரியாக இருக்கும்போது வெளுத்து கட்டியிருந்தார் தனுஷ். தற்போது இதில் இரண்டு வேடம் கட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் எனலாம்.

மாரி படத்தின் ட்ரைலரில் காளி வெங்கட் குரல் ஒலிக்கும். அதில் மாரியை பற்றி சொல்வார்.

முதல்ல சாதாரண ஆள இருந்த மாரி, இப்போ வேற லெவர் இருக்கான் சார். நாம் எல்லாம் அவன தொடக்கூட முடியாது சார்.. என்பாரே… அதேபோலதான் இதிலும்.. கொஞ்சம் மாறுதல்களோடு.

நம்ம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க. அவன் பொறந்ததே அரசியலுக்காகத்தான்.. (அது எல்லாம் எப்படி நீங்க கேட்க கூடாது.)

dhanush kodi trailer

வந்தது… வாழ்ந்தது.. இதையெல்லாம் விட நமக்கு பிறகு என்ன நிக்குது. அதான் மேட்டரு என் தன் பிஏ காளி வெங்கட் இடம் சொல்வது போல தனுஷ் பன்ச் டயலாக்கோடு ஆரம்பிக்கிறார்.

பின்னணில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க. அடிதடிகளுடன் அடுத்த பன்ச் பேசுகிறார் தனுஷ்.

எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி என்கிறார்.

ஆனால் இவர் வீட்டிலோ இவரது அம்மா சரண்யாவோ இந்த வெட்டி பந்தாவ வச்சி நாக்க வழிக்க முடியும் என்று திட்டுகிறார்.

அதன் பின் த்ரிஷாவின் உதட்டை பிழிந்து ஒரு டூயட் பாடுகிறார் (சிறுக்கி வாசம் பாடல்)

இதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.

kodi anupama

தம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.

அதன்பின்னர்தான் அரசியல் காட்சிகள் சூடு பிடிக்கிறது. பாக்டரியில் இருந்து வரும் விஷவாயு அந்த ஊரையே தாக்குகிறது.

எனவே உள்ளுரில் பிரச்சினை எழ, அரசியல்வாதிகள் தலை எடுகின்றனர்.

இதில் மகளிர் தலைவியாக த்ரிஷா வருகிறார். அரசியல் ஜெயிக்கனும்ன்னா ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கனும் என்கிறார்.

இவங்க எல்லாம் பேசியே ஜெயிச்சவங்க. நான் ஜெயிச்சிட்டு பேசுவேன் என பன்ச் அடிக்கிறார் தனுஷ்.

kodi trisha

அதன் பின்னர் இவரது குடும்பத்திற்கு மற்ற அரசியல்வாதிகள் பிரச்சினை எழுகிறது. எஸ்ஏசி என்ன செய்ய போகிறாய் என் அதட்டி கேட்கிறார்.

எல்லாரும் சிங்கிளா பொறப்பாங்க… நான் பொறக்கும்போதே டபுளா பொறந்தவன் என்று கூறி புறப்படுகிறார்.

அரசியல் என்றால் மீடியா, பத்திரிகை இல்லாமல் இருக்குமா? இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை எல்லாம் விடுகிறார்.

அரசியலும் தெரியும். அதில உள்ள நல்லவங்களை தெரியும் என்கிறார்.

இறுதியாக ட்ரைலர் முடியும்போது  கொடி பறக்குதா? என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.

ஆக மொத்தம் இதில் டபுள் மாரியை பார்த்த மாஸ் எப்பெக்ட்தான்… கொடி பறக்க வாழ்த்துவோம்.

கொடி பாடல்கள் விமர்சனம்

கொடி பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி இருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் சந்தோஷ நாராயணனுடன் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ்.

இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள கொடி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக இருவேடங்களில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா, ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் நடித்துள்ளார்.

இதுவரை தனுஷ் படங்களில் பாடல் பாடாத சின்னக்குயில் சித்ரா இதில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒரு ஆராரிரோ பாடல்.

இதற்கு முன்பு ஜானகி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கொடி படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.

மற்ற பாடல்கள் குறித்த ஒரு பார்வை இதோ…

kodi parakudha

1) கொடி பறக்குதா…..
பாடியவர்கள் : தனுஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ்

கபாலி படத்தில் உள்ள வீர துரந்துரா என்ற அதே ட்யூனில் இப்பாடல் தொடங்குகிறது. அதாவது பாடல் என்பதை விட வீர வசனங்கள் நிறைந்த வரிகள்தான் இவை.

இதில் தனுஷ் உடன் நெருப்புடா புகழ் அருண்ராஜா  காமராஜ் இணைந்து பாடியிருக்கிறார்.

கொடி, நான் பறக்கிற நேரம் இதுடா. மவனே தேடி போய் செய்ய போறேன்டா…

என்ற பன்ச் வசனங்களோடு இப்பாடல் தெறிக்கிறது.

கொடி காட்டுல எப்பவும் மழைதான்.. அதனால நீ தூரம் நில்லு.. என்று வில்லனை எச்சரிக்கிறார்.

ei suzhali

2) ஏய் சுழலி…..
பாடியவர்கள் : விஜயன்ரெயின்

இது தனுஷ் மற்றும் அனுபமா இருவருக்கும் உள்ள பாடல். இதில் தனுஷ் தாடியில்லாமல் ஷேவிங் செய்த முகத்தோடு வருகிறார் போலும். அதற்கான படங்களே இப்பாடலில் உள்ளது.

ஏய் சுழலி, அழகி விலகி களைக்கட்டி போறவளே.. என்ற வரிகளோடு இப்பாடல் ஆரம்பமாகிறது.

பொட்டக் கோழி மற்றும் கிராமத்து பின்னணியில் உள்ள அழகான உயிர்களோடு தன் காதலியை வர்ணிக்கிறார் ஹீரோ.

இப்பாடல் கிராமத்து இளைஞர்களை பெரிதும் கவரலாம்.

kodi ariraro

3) ஆரிராரோ…..
பாடியவர் : சித்ரா

ஆரிராரோ அழகு தாமரையே என இப்பாடல் தொடங்குகிறது. அதில் தன் மகனை மீண்டும் கருவறைக்குள் வந்து ஒளிந்துக் கொள்ளச் சொல்கிறாள் தாய்.

கருவறையை விட பாதுகாப்பான இடம் ஒரு பிள்ளைக்கு அமைய போவதில்லை என தன் அழகான வரிகள் மூலம் உணரச் செய்கிறார் கவிஞர் விவேக்.

இதுபோன்ற வரிகளால் தாய் பாசத்தை நமக்கு ஊட்டுகிறார். இதுபோன்ற பாடல்கள் நிச்சயம் இன்றைய குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாய் இருக்கும்.

sirukki

4) சிறுக்கி வாசம்…..
பாடியவர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன்

கிறங்கி போனேன்… என் கன்னத்தில் சின்னம் வச்சான்.. என்ற ஸ்வேதா மோகனின் அழகான குரலிசையில் இப்பாடல் தொடங்குகிறது.

இப்பாடலுக்கு முன்பு  தனுஷ் மற்றும் த்ரிஷா இருவரும் எதிரிகள் போல இருந்துள்ளனர்.

ஆனால் அதன் பின்னர் இந்த கிளியானது வேறொரு கட்சியில் இருந்து இன்று இவன் வசமாகிய பட்சியாக மாறிவிட்டது என்கிறது இந்த வரிகள்.

இடைத்தேர்தல் வந்தால் இவன்தானே கொடி நாட்டுவான்… என்ற வரிகளில் காதல் தேர்தலையும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஆண் குரலில் இப்பாடல் வேகம் எடுக்கிறது.

vettu pottu

5) வேட்டு போட்டு…..
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன்

வேட்டு போட்டு கொண்டாடுடா… இவன் நம்மாளுடா.. விசில் பத்தாதுடா…  என நாயகனின் வெற்றியை வாழ்த்தும் பாடல் இது.

தொட்டு அடிச்சா பொறி பறக்கும்… எட்டு திசையும் கொடி பறக்கும்…

என மேள தாளத்துடன் இப்பாடல் தூள் கிளப்புகிறது.

இனி தனுஷ் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மொத்தத்தில் தாலாட்டு, மெலோடி, ஆவேசம், குத்துபாட்டு ஆகியவை கலந்து இந்த கொடி பறக்குது.

எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுஷாந்த் சிங் ராஜ்புட், அனுபம்கெர், பூமிகா, திஷா பட்டானி, கியாரா அத்வானி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர்.
இசை : அமால் மாலிக், ரோசக் கோஹ்லி
ஒளிப்பதிவு : சந்தோஷ் துண்டில்
படத்தொகுப்பு : ஸ்ரீ நாராயணன் சிங்
இயக்கம் : நீரஜ் பாண்டே
பிஆர்ஓ : ரியாஸ் கே அகமது
தயாரிப்பாளர் : அருண் பாண்டே (பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்)

கதைக்களம்…

கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவருக்கும் பிடித்த மனிதர் எம்.எஸ்.தோனி. அவரது கிரிக்கெட் வாழ்க்கை நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

ஆனால் அவர் பிரபலமாவதற்கு முன்னால், அவர் பெரிய கிரிக்கெட் வீரர் ஆவதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் என்ன? எப்படி ஆனார் என்பதே இதுவரை சொல்லப்படாத கதை. அதாவது எம்.எஸ்.தோனி – தி அண் டோல்ட் ஸ்டோரி.

ஒரு சராசரி மாணவன், பின் கிரிக்கெட் ஆர்வம், அதன் பின்னர் மாநில அளவில், தேசிய அளவில் பங்கேற்பு. இதன் தகுதி அடிப்படையில் இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்ட்டர் பணி.

அதன் பின்னர் அவர் எப்படி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார்? என்பதே முழுக்கதை.

CthnLsZWcAAT0WA

கதாபாத்திரங்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் இந்த தோனி. இவருக்கும் நிஜ தோனிக்கும் அவ்வளவு பொருத்தம்.

புட் பால் மட்டுமே விளையாடி கொண்டிரும் ஹீரோ, கிரிக்கெட் மீது, தன் கோச்சால் ஆர்வம் ஏற்பட, அதன்பின் அவர் பிடிக்கும் ஒவ்வொரு கேட்ச்சும் நமக்கும் பிடிக்கும். ஆரம்பத்தையே அசத்தலாய் உருவாக்கி இருக்கிறார்.

தன் கிரிக்கெட் கனவுகள் நிஜமாகாதா? என தனிமையில் அமர்ந்து ஏங்கும் அந்த காட்சிகள் நிச்சயம் ஒரு வெறியை ரசிகர்கள் மனதில் உருவாக்கும்.

முன்னாள் காதலி இல்லாதபோது, அடுத்த காதலியே தன் மனைவி என ஒரு யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

காதலியாக வரும் திஷா பட்டானி ஒரு அழகு என்றால் மனைவி ஆவதற்கு முன்னாள் வரும் 2வது காதலி கியாரா அத்வானி அழகு கவிதை.

இருவரையும் அவர் நேசிக்க சொல்லப்பட்ட காரணங்கள் நச். அதிலும் தன் லட்சியத்திற்காக காதலை ஒதுக்குவதும், மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒளிய வேஷமிடுவதும் மறக்க முடியாதவை.

தோனியை சந்திக்கும் போது, கியாராவின் தோழியாக வரும் பெண்ணின் முகபாவனைகள் அசத்தல்.

உலக கோப்பையை வென்ற பின், அனுபம் கெர், பூமிகா உள்ளிட்டவர்களின் ஆனந்த கண்ணீரில் நிச்சயம் நாமும் கரைந்து போவோம்.

ஸ்கூல் கோச், கிரிக்கெட் வாரிய தலைவர், நண்பர்கள், ராஞ்சி வாழ்க்கை, என ஒவ்வொரு பாத்திரமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

CtmGQEJUEAA9iwA

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அமால் மாலிக் மற்றும் ரோசக் கோஹ்லி இசையில் பாடல்கள் இனிமை.

சந்தோஷ் துண்டில் ஒளிப்பதிவில் கிரிக்கெட் உலகமே அழகாய் தெரிகிறது.

படத்தின் ப்ளஸ்…

 • இரண்டாம் பாதியில் காதல், திருமணம் என கலந்து ரசிக்க வைக்கிறார்.
 • அருமையான வசனங்கள் + ஒளிப்பதிவு. கலர்புல்லான காதலிகள்
 • நிஜ கிரிக்கெட்டையும் சினிமா கிரிக்கெட்டையும் சேர்த்தாலும் கிராபிக்ஸ் தெரியவில்லை.

CtmPq38VIAAaPa9

வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்

 • இந்திய கிரிகெட் அணியில் இருக்கும் இவரை ஒருவருக்கு தெரியாத போது, சாரி என்று சொல்வார். அப்போது… என்னை நீங்கள் தெரிந்துக் கொள்ளும் அளவு நான் இன்னும் சாதிக்கவில்லை. அதற்கு ஏன் நீங்கள் சாரி சொல்கிறீர்கள்.
 • இவர் பிரபலமாக இருந்தாலும் ஹோட்டல் ரிசப்டனிஸ்ட்டுக்கு இவருக்கு தெரியாமல் ஐடி கார்ட்டை கேட்கும்போது உள்ள வசனங்கள்.

இப்படி பல காட்சிகளில் உள்ள வசனங்களை உதாரணமாக சொல்லலாம்.

 • முக்கியமாக இவரது ரயில்வே நண்பராக வரும் சத்யாவின் காமெடிக்கு சிரிக்காதவர்கள் இருக்கமுடியாது.
 • அந்த பொண்னுக்கு காசு இல்ல போல. குட்ட பாவாடை போட்டு இருக்கு. டிரெஸ் எடுத்து கொடுப்பா என்னும்போது நிச்சயம் கைத்தட்டி ரசிக்கலாம்.

படத்தின் மைனஸ்

 • கிரிக்கெட்டை மட்டுமே முதல் பகுதியில் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த விளையாட்டை பிடிக்காதவர்களுக்கு சலிப்பு வரலாம்.
 • பள்ளி பருவத்தில் உள்ள அவரது குறும்புகளையும் படமாக்கியிருக்கலாம்.

அழகான கிரிக்கெட் கதையை யதார்த்த குடும்ப வாழ்க்கையுடன் பின்னி கமர்ஷியல் பைட் எதுவும் கொடுக்காமல் அசத்தியிருப்பதற்கு இயக்குனருக்கு பொக்கே கொடுக்கலாம்.

எம்எஸ்.தோனி… இவரது வாழ்க்கையும் சிக்ஸர்தான்.

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகி பாபு, சிங்கம் புலி, பூஜா தேவ்ரியா, நாசர், தீபா, ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : சண்முக சுந்தரம்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்

கதைக்களம்…

காந்தி (விஜய் சேதுபதி) மற்றும் பாண்டி (யோகி பாபு) இருவரும் நண்பர்கள்.

ஊரில் ஏற்பட்ட கடன் தொல்லையால், ஊரில் தலைக் காட்ட முடியாமல் லண்டன் சென்று சம்பாதிக்க நினைக்கின்றனர்.

பாஸ்போர்ட் எடுக்க சென்னை வருகின்றனர். ஆனால் உடனடியாக பாஸ்போஸ்ட் வேண்டும் என்பதால், ஏஜெண்ட்களை நாடுகின்றனர்.

அவர்களோ லண்டனில் செட்டில் ஆகிவிட இலங்கை அகதி போல் செட்டப் செய்யலாம் என்று கூறி, இங்கே தவறான முகவரிகளை கொடுக்க சொல்கின்றனர்.

இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும் மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் பாஸ்போர்ட் ரெடி செய்து விடுகின்றனர்.

ஆனால் இண்டர்வியூவில் அவர் பெயில் ஆகிவிட யோகிபாபு மட்டும் லண்டன் செல்கிறார்.

அதன்பின்னர் மனைவி பெயரை எடுக்க விஜய்சேதுபதி போராடும் போராட்டங்களே இப்படத்தின் மீதிக்கதை.

Aandavan kattalai movie stills

கதாபாத்திரங்கள்…

எந்த வேடம் என்றாலும், அதிலும் தன் யதார்த்த நடிப்பை கொடுத்து அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி.

காந்தி என்ற பெயரில் நேர்மையாக இருக்க முடியாமலும், தவறான வழியில் செல்லும் போதும் முகபாவனைகளால் ரசிக்க வைக்கிறார்.

அதிலும் ஊமையாக நடிக்கும்போது ரசிகர்களுக்கு கலகலப்பாக்கியிருக்கிறார்.

இறுதிச்சுற்று ரித்திகா சிங்கா இது…? இதில் முற்றிலும் ஆளே மாறியிருக்கிறார். ஆனாலும் மீடியா பெண்ணாக போல்டாக நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் இவர் வரவில்லையே என யோகிபாபு ஏங்க வைக்கிறார். படத்தின் எனர்ஜிக்கு முக்கிய காரணமாகிறார் யோகிபாபு.

இவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு சென்னையில் வீடு தேடும் காட்சிகள் நிச்சயம் எவராலும் மறக்க முடியாது.

இவர்களுடன் நாசர், பூஜா தேவ்ரியா, தீபா, உள்ளிட்டோர்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.

Aandavan kattalai movie stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கே இசையில் பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை. பின்னணி இசை ஓகே.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில் கோர்ட், சென்னை வாடகை வீடுகளின் அவலம் என அனைத்தையும் சல்லடை போட்டு காட்டியிருக்கிறார்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிகண்டன்.

இதிலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். சென்னையில் வீடும் தேடுபவர்கள் பிழைப்புக்காக மட்டுமே சென்னை வருகிறார்கள். அவர்களை அசிங்கபடுத்த வேண்டாம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

பாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் எவ்வளவு பேர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? அகதிகள் என்றாலும் அவர்களுக்கும் அழகான மனசு இருக்கிறது என்று கூறும்போது கண்கலங்க வைக்கிறார்.

நாயகன், நாயகியை கதை சுற்றி வந்தாலும், இருவருக்கும் காதல் இல்லாமல் கடைசியில் முடிச்சு போடுவது அருமை.

ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டும் என்பதை கோர்ட் காட்சிகளிலும், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் இருக்கும்போது ஏஜெண்டுகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்பதையும் பாஸ்போர்ட் ஆபிஸ் காட்சிகளிலும் விளக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை… பாஸ்போர்ட்டுக்கான பயணம்

தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, கணேஷ் வெங்கட்ராமன், கருணாகரன், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி. உதயகுமார், கும்கி அஸ்வின், ஏ.வெங்கடேஷ், சின்னி ஜெயந்த் மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்பு : எல்.வீ.கே. தாஸ்
இயக்கம் : பிரபு சாலமன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : சத்யஜோதி பிலிம்ஸ், God Pictures

கதைக்களம்…

பூச்சியப்பனாக தனுஷ் – சரோஜாவாக கீர்த்தி சுரேஷ்
டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணிக்கிறது தொடரி.. (அதாங்க ரயில்)

இந்தியன் ரயில்வேயில் கேண்டின் பாயாக வேலை செய்கிறார் தனுஷ். அதே ரயிலில் சினிமா நடிகையின் டச்சப் கேர்ளாக பணி புரியும் கீர்த்தி சுரேஷ் பயணிக்கிறார்.

ரயில் வேகத்தை விட படுவேகமாக பார்த்ததும் இவர்களுக்குள் காதல் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரியும் நேரம் வரும்போது, என்ஜின் மாஸ்டருக்கு ஹார்ட் அட்டாக்.

இதனிடையில் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், அமைச்சர் கடத்தல் என பல பிரச்சினைகளும் வருகிறது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்கிறது.

அதன்பின் ரயில் பயணிகள் என்ன ஆனார்கள்? இவர்களின் காதல் கைகூடியதா? ரயில் நின்றதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கொடுத்து, ஸ்டேஷனில் இறக்கி விடுகிறார் டைரக்டர் பிரபு சாலமன்.
CsJS2srUEAAWCHb
கதாபாத்திரங்கள்..

இதில் முதன்முறையாக காமெடியில் பயணம் செய்துள்ளார் தனுஷ். அவை ரசிக்கும்படியே அமைந்திருப்பது சிறப்பு.

ஒரு அக்மார்க் கேண்டீன் பாயாக வந்து அசத்துகிறார்.

இவருடன் கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் காமெடி காட்சிகளுக்கு கைகொடுத்துள்ளனர்.

ஒரு யதார்த்த பெண்ணாக இருந்தாலும், லட்சியத்தை அடைய போராடும் பெண்ணாக கீர்த்தி. (அவ்ளோ அப்பாவியாக) தன் அழகை போல் நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

கணேஷ் வெங்கட்ராமன், ஏ. வெங்கடேஷ், ராதாரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.

CsI7rzJVUAIMdUU

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம். அடடா.. இது என்ன? இது என்ன? மற்றும் ஊரெல்லாம் கேட்குதே… பாடல்கள் ரசிக்கும் ரகம்.

போன உசுரு பாடல் எந்த ரயில் பயணம் என்றாலும் நம் நினைவில் நிற்கும். (ஆனால் தேவையில்லாத இடத்தில் இப்பாடல் வந்தது வேதனைதான்)

நாம் என்னதான் ரயில் பயணம் செய்தாலும் இப்படி ஒரு ரூட்ல நாம போனதில்லையே என வியக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்

கண்களுக்கு போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்.

படத்தொகுப்பாளருக்கு வேலையில்லை. அவ்வளவு வெட்ட வேண்டியிருக்கு.

CsIemSUUIAAVbhM

படத்தின் ப்ளஸ்…

 • முழுக்க முழுக்க ரயில் பயணம்
 • டிஆர்பி ரேட்டிங்குங்காக விவாதம் நிகழ்ச்சி நடத்தும் சேனல்கள்
 • இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான காட்சிகள்
 • ஒளிப்பதிவும் பாடல்களும்

படத்தின் மைனஸ்…

 • பேசிக் கொண்டே இருக்கும் கேண்டீன் ஆட்கள்
 • கிராபிக்ஸ் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
 • பற்றி எரியும் ரயிலில் டூயட் பாட்டு
 • டிரைவர் இல்லாத ரயிலில் ஜாலியான பயணிகள்
 • ஒரே அடியாக கீர்த்தியை பாட்டு பாடச் சொல்லி லூஸ் பெண்ணாக காட்டியிருப்பது

இயக்குனர் பற்றி…

விவாத மேடை அமைக்கும் டிவி சேனல்கள் இறுதிவரை அதற்கு முடிவு சொல்லாமல் இருப்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் டிஆர்பிக்காக மனிதர் உயிரோடு விளையாடும் சேனல்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

முதல் பாதி, காமெடி, பயணிகள் என செல்வதால் ரயில் எதை நோக்கி செல்கிறது என கொஞ்சம் குழப்பம் வரலாம்.

ஆனால் பிற்பாதியில் நம்மை ரயில் பயணத்தில் ஒன்ற வைத்து ஸ்டேஷனில் சேர்கிறார் பிரபு சாலமன்.

இதுநாள் வரை காடு, அழுக்கு மனிதர்கள் என சென்ற இயக்குனர் இம்முறை சற்று வித்தியாச ரயில் களத்தில் கொண்டு சென்று அதை யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு ரயில் வேகத்தில் இப்படி எல்லாம் சண்டை போட்டு, பாட்டு பாடி ஆட முடியுமா? பயமே இல்லாமல் பயணிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

தேவையில்லாத காட்சிகள் மற்றும் சினிமாவுல லாஜிக் பார்க்கக் கூடாதுன்னா இந்த ரயில் பயணம் சிறக்கும்.

மொத்தத்தில் தொடரி: கெட்டியா புடிச்சிட்டு ஏறுங்க

More Articles
Follows